தேதி: September 3, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா மாவு - ஒரு கிலோ
சீனி - ஒரு கிலோ
நெய் - முக்கால் கிலோ
சோடா உப்பு - கால் தேக்கரண்டி
மைதாவை சலித்து சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சீனியை மக்ஸியில் அல்லது மெஷினில் கொடுத்து பொடி செய்துக் கொள்ளவும்.

நானகத்தா செய்ய தேவைப்படும் அச்சுகளை கழுவி சுத்தமாக ஈரம் போக துடைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி காய்ச்சி அதில் பொடி செய்த சீனியை போட்டு அதனுடன் சோடா உப்பு சேர்த்து நன்கு பூக்க பிசையவும்.

பிசைய பிசைய உளுந்து மாவு போல் நுரைத்துக் கொண்டு வரும். உளுந்து மாவு போல் வரும் வரை 10 நிமிடம் பிசையவும்.

அதில் மைதா மாவை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு பிசைந்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.

மாவை அடித்து பிசையாமல் தேய்த்து பிசைய வேண்டும். மாவு சற்று பொலபொலவென்றே இருக்க வேண்டும்.

விரும்பிய வடிவில் உள்ள அச்சியை எடுத்துக் கொண்டு அதில் பிளாஸ்டிக் கவர் போட்டு அதில் தயார் செய்து வைத்திருக்கும் மாவை முழுவதுமாக வைத்து அமுக்கி மேல் புறத்தை சமப்படுத்தி விடவும். மாவை வைக்கும் முன்பு செர்ரி பழத்தை வைத்து செய்தால் அழகாக இருக்கும்.

பின்னர் அதை அப்படியே திருப்பி மேலே உள்ள அச்சியை எடுத்து விடவும்.

இதே போல எல்லா மாவையும் அச்சியில் வைத்து தயார் செய்துக் கொள்ளவும்.

தயார் செய்த நானகத்தாவை தட்டில் வைத்து ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும். இந்த ரம்ஜான் ஸ்பெஷல் நானகத்தாவை <b> திருமதி. பரிதா பீவி </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.

Comments
நானகத்தா- பரீதா பீவி.
எங்க ஊரில எல்லா பேக்கரியிலும் நானகத்தா கிடைக்கும்.வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்போம்.அறுசுவையில் நாம் எது நினைக்கிறோமோ அதன் செய்முறை வெளியாகிவிடும்.நன்றி பரீதா பீவி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
வெரி நைஸ் பிரசென்டேஷன், பரீதா பீவி!
அட, நானகத்தாவா, பேரு வித்தியாசமா இருக்கே?! ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கிங்க பரீதா பீவி! வெரி நைஸ் பிரசென்டேஷன்!
ஆசியா அக்கா நீங்க சொல்வது உண்மைதான், எங்கள் வீட்டில் அம்மா அடிக்கடி செய்துதரும் வெண்ணெய் பிஸ்கட் போலவே இருக்கு கிட்டத்தட்ட செய்முறை. அதிலும் பரீதா அவர்கள் உபயோகப்படுத்தியிருக்கும் அச்சுகளை பார்க்கும் போது, அட என்று சொல்லத்தோன்றுகிறது. காரணம் எங்க வீட்டிலும் இதுபோல 8 டிஸைன்ஸ் அச்சு வைச்சி அம்மா செய்வாங்க. பொருட்கள் எல்லாம் அதேதான், நெய்க்கு பதிலாக பட்டர்/நம்ம ஊர் டால்டா சேர்ப்பாங்க. ஒரு நாள் ஊறவிடுவதும் இல்லை. மாவு பிசைந்து, அப்படியே தட்டில் அடுக்கி பேக் செய்வோம். இது என்னோட ஆல்டைம் ஃபேவரைட். இப்போது நினைவு படுத்திவிட்டீர்கள், உடனே செய்திட வேண்டியதுதான்! நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
அருமையா இருக்கு
அட அருமையா இருக்கு..இதை நாங்க தம்மடைன்னு சொல்லுவோம் :)
ஆசியாக்கா உங்க ஊரில் இதன் பெயர் நானகத்தாவா?
ஹாய் எப்படி இருக்கீங்க?என்னை நியாபகம் இருக்கா?
அன்புடன்,
mrs.noohu
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஹாய்,
நலம்.நல்ல நினைவு இருக்கு,அனைவரும் நலமா?ஆமாம்,எங்க ஊரில் நான்கத்தா என்று தான் சொல்வோம்.ஒரு சமயம் பரீதாவும் நெல்லையாக இருக்குமோ?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
இது அதுவோ??!!!
என்னங்கறீங்களா? முன்ன ஒரு முறை இது இட்லியா இல்லை குழிபணியாரமான்னு ஒரு பட்டிமன்றம் நடந்ததே.. ஆங்... நானும் ஷாதிகா ஆன்டி வீட்டு பிஸ்கோத்துன்னு நினச்சேன்... ஃபரீதா.. நல்ல ரெஸிபி....
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
ஆசியாக்கா நான் கேட்டது
ஆசியாக்கா நான் கேட்டது சுஸ்ரீ ஐ பெயரை மறதியில் விட்டு விட்டேன் இப்ப மார்றும் ஆப்ஷன் இல்லை உங்களுக்கு என்னை தெரியும்னு எனக்கு தெரியும் :)
இலா
:))))
அன்புடன்,
mrs.noohu
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஓ... நல்லாவே நினைவிருக்கு மர்ழி! :)
ஓ... நல்லாவே நினைவிருக்கு மர்ழி! நீங்கதானே எனக்கு முதல் பதிவு போட்டு அறுசுவையில் என்னிடம் முதல்முதலில் பேசியது! நான் நலம். நீங்க நலமா? பொண்ணு மரியம் எப்படி இருக்கிறாள்? குட்டி பையன் உங்களை ரொம்ப பிஸியா வெச்சிருக்கிறான் போல! எனிவே, ரொம்ப நாள் கழித்து உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
நானகத்தா
நானகத்தா பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு.ஓவனில் எவ்வளவு நேரம் & ஹீட்டில் பேக் செய்யனும்?
உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.
170'c ல் 15 நிமிடம் வைக்கவும்
170'c ல் 15 நிமிடம் வைக்கவும்