ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

அர்ச்சுணனுக்கு ஒரு துரோணாச்சாரியார் போல், விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஓர் ஆசிரியர்கள் இன்றும் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி உங்கள் வாழ்வில் உங்களை செதுக்கிய உங்கள் அசிரியர்கள் பற்றி இங்கே பகிர்ந்து கொண்டு அவர்களை கெளரவப்படுத்தலாமே.

ஆசிரியர் பணியில் வெள்ளிவிழா கண்டு, இன்றும் தன் பணியை செவ்வனே செய்து வரும் திருமதி. இமா அவர்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தன்று என்னுடைய மற்றும் நமது அறுசுவை தோழிகளின் சார்பாக மனம்நிறைந்த பெருமையுடன் கூறும் ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்.
HATS OF TO YOU IMMA.
உலகின் உள்ள அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கு எங்கள் மனம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

ஆசிரியர் பணியில் வெள்ளிவிழா கண்டு, இன்றும் தன் பணியை செவ்வனே செய்து வரும் திருமதி. இமா அவர்களுக்கு இந்த ஆசிரியர் தினத்தன்று என்னுடைய மற்றும் நமது அறுசுவை தோழிகளின் சார்பாக மனம்நிறைந்த பெருமையுடன் கூறும் ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்.
HATS OF TO YOU IMMA.

நல்லதொரு முன்னுரை கொடுத்து இந்த இழையை தொடங்கி வைத்த ஹரிகாயத்ரி அக்காவுக்கு நன்றி.

அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
என் அனைத்து ஆசிரியர்களுக்கும் இங்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

செபா அம்மாவிற்கும், இமா அக்காவிற்கும் என் மனமார்ந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் தோழிஸ் அனைத்து ஆசிரியர்கலுக்கும் என் வாழ்த்துக்கள்......

செபா அம்மா உங்கலுக்கு என்னுடைய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

இமா அக்கா உங்கலுக்கும் என்னுடைய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

அருசுவையில் யார் யார் ஆசிரியராக இருக்கிங்கலோ அவங்க எல்லருக்கும் என் மன்மாந்த வாழ்த்துக்கள்...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

இமா அம்மா, செபா கிராண்ட்மா மற்றும் அனைத்து ஆசிரியர்,ஆசிரியைகளுக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
ஹரிகாயத்ரி நலமா? உங்கள் முன்னுரை சூப்பர்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள்.

இமா, செபா ஆன்ரி, மறைபொருள் ஆசிரியர் ஹைஷ் அண்ணன், இன்னும் எத்தனை ஆசிரியர்கள் இங்கே மறைபொருளாக இருக்கிறார்களோ அனைவருக்கும் ஒரு "குட்டி" மாணவியின் வாழ்த்துக்கள். ஆர் குட்டிமாணவியென அதிகம் யோசிக்காதீங்கோ... அதிராதான்...

ஏன் தெரியுமோ... இப்பத்தான், பூசனிக்காய் வெட்டத்தொடங்கியிருக்கிறேன் (இமாவின்), மூச்சுப்பயிற்சியின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறேன்... அப்போ குட்டி மாணவிதானே...:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
நாளை ஆசிரியர் தினம், நாம் இன்று இத்தனை அழகாக தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி பேசுகிறோம், எழுதுகிறோம் என்றால் அதற்கு காரண கர்த்தா நமது ஆசிரியர்கள். அவர்களை இந்த நன்னாளில் வாழ்த்தி வணங்குவோம். முடிந்த வரை அவரவர் ஆசிரியர்களை நேரில் சென்றோ தொலைபேசி மூலமோ வாழ்த்து தெரிவியுங்கள், அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

படிக்கும் போது ஒரு நல்ல மாணவராக இல்லையென்றாலும் நீங்கள் வாழ்த்து தெரிவித்தால் அவர்களுக்கு அது மகிழ்ச்சியே. மகிழ்ச்சியை காட்டிலும் அது அவர்களுக்கு கிடைத்த விருதுக்கு சமம்.

எனக்கு தெரிந்து அறுசுவையில் ஆசிரியர் இமாம்மா தான் உங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள மற்றும் அறுசுவையில் இருக்கும் மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

இதை யாருமே பார்க்கலையா, நாளைக்காவது வந்து இதுல பதிவு போடுங்கப்பா, நம் வாழ்வில் இவர்களை மறக்ககூடாது அதனால் தான் சொல்கிறேன். நிறைய பேருக்கு அவங்களோட ஆசிரியர்கள் கிட்ட தொடர்பு இருக்காது, அப்படி இருப்பவர்கள் இங்கே வாழ்த்துச் சொல்லுங்கள். என்னால் நாளை அறுசுவைக்கு வரமுடியுமான்னு தெரியல, அதான் இன்னிக்கே இத எடுத்திட்டேன்.

அன்புடன்
பவித்ரா

ஆசிரியர்கள்

நமது முன்னேற்றத்துக்கு உதவிய ஆசிரியர்களை நினைவு கூறுவோம்.
எனது பள்ளி காலத்தில் பௌலினா, ஃப்லோரா டீச்சர்ஸ்ஸை எனக்கு பிடிக்கும்.. அப்றம் அனந்த ராமன் சார்.

காலேஜ்ல வெற்றி சார், பிஜில பாலகிருஷ்ணன் சார்னு.. எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மாண்புமிகு தமிழாசிரியருக்கு இந்த
மாணவனின் வணக்கங்கள்.

எனது பெயரைபோலவே
உங்களையும் மறக்கமுடியவில்லை.

நீங்கள் கற்றுத்தந்த
தமிழின் சுவை கண்டு
கரும்புக்குக்கூட
காழ்புணர்ச்சி தெரியுமா.

கணக்கு என்பது
விஷம் இல்லை வாழ்க்கையின் கூட்டல் கழித்தல்
விஷயமென்பது இப்போதுதான்
விளங்கியது எனக்கு.

பூலோகத்தின்
பூர்வீகத்தை முதன்முதலில் உணர்த்திய
வரலாற்று ஆசிரியருக்கும்
வணக்கம்.

நான் இப்போது பெரிய
விருட்சமாய் படர்ந்திருந்தாலும்
விதைபோட்டது நீங்கள்தானே!

தேசத் தலைவர்களையும்
ஆசிரியர்களையும் விடுமுறை
நாள்களில் மட்டும் நினைவுகூறும்
நன்றிகெட்ட மனிதன் நானில்லை.

என் தேகத்தில் எப்போதும் உங்களுக்கு
இருதயத்தை போல் ஒரு முக்கிய
இடம் உண்டு!

எனது முதல் ஆசிரியரான இறைவனுக்கும் இரண்டாம் நிலை ஆசிரியர்களான அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

மதிப்பிற்குரிய இமா,செபா ஆன்டிஅவர்களுக்கு என் இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆசிரியர் பணியில் வெள்ளிவிழா கண்டு, இன்றும் தன் பணியை செவ்வனே செய்து வரும் திருமதி. இமா அவர்களுக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினத்தன்று என்னுடைய மற்றும் நமது அறுசுவை தோழிகளின் சார்பாக மனம்நிறைந்த பெருமையுடன் கூறும் ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்.

கவிதா

மேலும் சில பதிவுகள்