பட்டிமன்ற சிறப்பு இழை

இது பட்டிமன்றம் பற்றி மட்டுமே தகவல் தரும் சிறப்பு இழை.

இங்கே பட்டிமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்ட தலைப்புகள், இதுவரை பங்கு பெற்ற நடுவர்கள், இனி நடக்கப்போகும் பட்டிமன்ற தேதிகள், அதன் நடுவர்கள் போன்ற தகவல்கள் இடம்பெரும். இங்கு பதிவு போடுபவர் அடுத்ததாக நடக்க இருக்கும் எதாவது ஒரு பட்டிமன்றத்துக்கு தான் நடுவராக வர விருப்பம் தெரிவிக்க மட்டுமே இருக்க வேண்டும்.

முக்கியமான வேண்டுகோள்..... தயவு செய்து இங்கு வந்து யாரும் நலம் விசாரிக்கவோ, வாழ்த்து சொல்லவோ, தலைப்புகள் பற்றி அலோசனை நடத்தவோ கூடாது. இவை எல்லாம் இந்த இழை பல பதிவுகளாகி பார்ப்பவருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கவே.... அதனால் தோழிகள் யாரும் கோபம்கொள்ளாது ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள்:

1. ஏற்கனவே வாதாடிய தலைப்புகளை தேர்வு செய்ய கூடாது.

2. பட்டிமன்ற தலைப்புகளை "பட்டிமன்ற தலைப்புகள்" என்ற இழையில் இருந்தே தேர்வு செய்ய வேண்டும்.
http://www.arusuvai.com/tamil/node/10388

3. அத்தலைப்பு மற்றவர்களால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்களே கொடுத்த தலைப்பாக இருக்க கூடாது.

4. சரியான தேதியில் துவக்கி, சரியான தேதியில் முடித்திட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

5. பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

6. எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.

7. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.

8. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

9. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

10. அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.

இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

குறிப்பு:

யாரும் இந்த பதிவுக்கு கீழே இருக்கும் "பதிலளி" பயன்படுத்த வேண்டாம். இனி நடக்க இருக்கும் பட்டிமன்ற தலைப்புகளையும் இங்கே மீண்டும் வந்து சேர்க்க விரும்புகிறேன். பதிலளி யாரும் பயன்படுத்தினால் எனக்கு இதே பதிவை மாற்ற இயலாது.

இதுவரை நடந்த தலைப்புகள், அதன் நடுவர்கள் பற்றிய தகவல் கீழே காணலாம்:

பட்டிமன்றம் - 1

தலைப்பு: வாழ்க்கையில் எது முக்கியம்? நிம்மதியா? நிதியா?
நடுவர்: வனிதா வில்வாரணிமுருகன்

பட்டிமன்றம் - 2

தலைப்பு: இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது - ஆண்களா? பெண்களா?
நடுவர்: இளவரசி

பட்டிமன்றம் - 3

தலைப்பு: செல்போன் நமக்கு அவசியமா? அவசியமற்றதா?
நடுவர்: வின்னி

பட்டிமன்றம் - 4

தலைப்பு: கணவனும் மனைவியும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது நல்லதா? இல்லையா?
நடுவர்: தனிஷா

பட்டிமன்றம் - 5

தலைப்பு: வெளி நாட்டு வாழ்க்கையால் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?
நடுவர்: அதிரா

பட்டிமன்றம் - 6

தலைப்பு: மனிதர்கள் தங்கள் வாழ்வில் குறிக்கோள்களை அடைய முக்கிய காரணமென்ன - முயற்சியா இல்லை அதிர்ஷ்டமா??
நடுவர்: சந்தனா (மிசஸ் சேகர்)

பட்டிமன்றம் - 7

தலைப்பு: நம் நாட்டில் மக்களுக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு இருக்கா இல்லயா ?
நடுவர்: இலா

பட்டிமன்றம் - 8

தலைப்பு: உலக திரைப்படங்கள் மக்களிடத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மை பயக்குவையா? தீமை பயக்குவையா?
நடுவர்: பாப்ஸ் உமா

பட்டிமன்றம் - 9

தலைப்பு: வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?
நடுவர்: தாமரை (சந்தோ)

பட்டிமன்றம் - 10

தலைப்பு: நகர வாழ்க்கையா? கிராம வாழ்க்கையா? சிறந்தது எது?
நடுவர்: வனிதா வில்வாரணிமுருகன்

பட்டிமன்றம் - 11

தலைப்பு: கேட்க இனிமை பழைய பாடலா? புதிய பாடலா?
நடுவர்: ஆயிஸ்ரீ

பட்டிமன்றம் - 13

தலைப்பு: கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறை இந்த காலத்திலும் அவசியமா இல்லையா
நடுவர்: கவிசிவா

பட்டிமன்றம் - 14

தலைப்பு: பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?
நடுவர்: வனிதா வில்வாரணிமுருகன்

பட்டிமன்றம் - 15

தலைப்பு: இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?
நடுவர்: வின்னி

பட்டிமன்றம் - 16

தலைப்பு: உணவில் ருசியானது சைவமா?அசைவமா?
நடுவர்: சுபத்ரா

பட்டிமன்றம் - 17

தலைப்பு: அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது?
நடுவர்: ஷேக்

பட்டிமன்றம் - 18

தலைப்பு: தனிவீடா? அடுக்கு மாடி கட்டிடங்களா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 19

தலைப்பு: லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?
நடுவர்: ஷேக்

பட்டிமன்றம் - 20

தலைப்பு: பெண்சுதந்திரம்
நடுவர்: கவிசிவா

பட்டிமன்றம் - 21

தலைப்பு: சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?
நடுவர்: ஆமினா

பட்டிமன்றம் - 22

தலைப்பு: உயர்ந்தது எது? உறவா? நட்பா?
நடுவர்: ரம்யா

பட்டிமன்றம் - 23

தலைப்பு: நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?
நடுவர்: ராதா ஹரி

பட்டிமன்றம் - 24

தலைப்பு: குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு? கணவனுக்கா? மனைவிக்கா?
நடுவர்: ஹேமா

பட்டிமன்றம் - 25

தலைப்பு: இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா? சமுதாயமா?
நடுவர்: பவித்ரா

பட்டிமன்றம் - 26

தலைப்பு: எந்தக்காலப் பண்டிகையில் மகிழ்ச்சி அதிகம் ?!
நடுவர்: ஜெயலக்ஷ்மி

பட்டிமன்றம் - 27

தலைப்பு: ஏட்டு கல்வியா? அனுபவ கல்வியா?
நடுவர்: யோகலக்ஷ்மி

பட்டிமன்றம் - 28

தலைப்பு: உலகில் சிறந்தது கல்வியா? செல்வமா?
நடுவர்: கல்பனா

பட்டிமன்றம் - 29

தலைப்பு: நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?
நடுவர்: கவிசிவா

பட்டிமன்றம் - 30

தலைப்பு: ஜோதிடம்,வாஸ்து பார்க்கலாமா-கூடாதா?
நடுவர்: சாந்தினி

பட்டிமன்றம் - 31

தலைப்பு: மனித மனம் அடிமையாவது அன்புக்கா?புகழுக்கா?
நடுவர்: இளவரசி

பட்டிமன்றம் - 32

தலைப்பு: அழகு என்பது உடலா?? உள்ளமா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 33

தலைப்பு: சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?
நடுவர்: கல்பனா

பட்டிமன்றம் - 34

தலைப்பு: தொடர்கதையா?சிறுகதையா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 35

தலைப்பு: பெற்றோர்களின் உறுதுணை
நடுவர்: ரம்யா

பட்டிமன்றம் - 36

தலைப்பு: இந்தியாவின் சுய அடையாளம்
நடுவர்: யோகலக்‌ஷ்மி

பட்டிமன்றம் - 37

தலைப்பு: விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?
நடுவர்: வனிதா

பட்டிமன்றம் - 38

தலைப்பு: காதலை பெற்றோர் மறுப்பதற்கு காரணம் - ஈகோ??சமூகம்?? பாசமா??
நடுவர்: பவித்ரா

பட்டிமன்றம் - 39

தலைப்பு: ருசிக்காகவா (அ) ஆரோக்கியத்திற்காகவா?
நடுவர்: ரம்யா

பட்டிமன்றம் - 40

தலைப்பு: முக்கனிகளில் சிறந்தது எது? மாவா?பலாவா?வாழையா?
நடுவர்: ரேணுகா ராஜசேகரன்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனி வரப்போகும் பட்டிமன்றங்களின் தேதிகள் அதன் நடுவர்கள் பற்றிய தகவல்கள்:

பட்டிமன்றம் - 41

நடுவர்: தேவை
தேதி: May 16th - May 23rd

பட்டிமன்றம் - 42

நடுவர்: தேவை
தேதி: May 30th - Jun 06th

1. இனி நடக்க இருக்கும் பட்டிமன்றத்தின் தேதிகள் இங்கே கொடுக்கபட்டிருக்கின்றது. உங்களுக்கு வசதியான தேதியில் நீங்கள் நடுவராக வர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இங்கே பதிவு போட்டு தெரியபடுத்தலாம்.

2. நடுவராக வருபவர்கள் முன்பே அறுசுவையில் பலரால் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இருந்து மட்டுமே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

3. தலைப்புகள் காண / சேர்க்க:

http://www.arusuvai.com/tamil/node/10388

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம் தோழி சீதாலக்ஷ்மி அவர்கள் சுரேஜினி அவர்கள் கொடுத்திருந்த முன்பு நடந்த பட்டிமன்றங்களில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளை தேடி நமக்காக தந்திருக்கிறார். மிக்க நன்றி சீதாலக்ஷ்மி மற்றும் சுரேஜினி. :)

பட்டிமன்றம் 1: பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டுவது இனிப்பு வகைகளா? காரமா?

பட்டிமன்றம் 2: இரவில் குழந்தைகளை பெற்றோருடன் உறங்கச் செய்வது ஆரோக்கியமான முறையா? இதனால் பெற்றொரின் தனிமை பாதிக்கப்படுகின்றதா, இல்லையா?

பட்டிமன்றம் 3
பட்டிமன்றம் 4

பட்டிமன்றம் 5: இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார்களா அல்லது மன முதிர்ச்சியின்றி சுயநலமாக செயல்படுகிறார்களா?

பட்டிமன்றம் 6: அன்றும், இன்றும், என்றும், இனிக்கும் இல்லறத்துக்கு காதல் திருமணம் சிறந்ததா அல்லது பெரியோர்களால் பார்த்து, நிச்சயக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?

பட்டிமன்றம் 7: ஒரு குடும்பம் சிறப்படைய பெரிதும் காரணம் இல்லத்தரசிகளா? வேலைக்கு செல்லும் அரசிகளா?

பட்டிமன்றம் 8: வாடகைத்தாய்... நம் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒத்து வருமா? வராதா?

பட்டிமன்றம் 9: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சிறந்தது எது?கூட்டுக்குடும்பமா? தனிக் குடித்தனமா?

பட்டிமன்றம் 10: இன்ன்றைய ஊடகங்கள் இளைஞர்களை சீரழிக்கிறதா? சீர்படுத்துகிறதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த இழையில் இதுவரை நடந்த பட்டிமன்றம் பற்றிய தகவல்கள் உள்ளன. அதனால் அடுத்த நடுவருக்கு உதவ இதை மேலே கொண்டு வர இந்த பதிவு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிமன்றம் - 10'கு நடுவர் தேவை. யாராவது தயாரா இருந்தா இங்க வந்து ஒரு பதிவை போட்டு சொல்லுங்க. ப்ளீஸ்.....

இதுவரை நடுவரா இருந்தா எல்லாருக்கும் என் நன்றிகள். உங்களால் தான் பட்டிமன்றம் என்ற தலைப்பு வெற்றிகரமாக நடை போடுகிறது. அது போல் இனியும் தொடர்ந்து பட்டிமன்ற ரசிகர்களுக்காக இத்தலைப்பு தொடர்வது உங்கள் ஆதரவிலேயே இருக்கிறது.

தோழிகள் முன் வந்து நடுவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தயவு செய்து தோழிகள் நடுவர் பொறுப்புக்கு முன் வாருங்கள். :) ஏற்கனவே நடுவராக இருந்திருந்தாலும் மீண்டும் வரலாம். அனைவரையும் பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை..... இன்னும் சில பட்டிமன்றங்களுக்கு என்னை கூவி அழைக்க விடாம முன் வந்து பட்டிமன்றம் தடை இன்றி நடக்க உதவுங்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடுத்த பட்டிமன்றத்துக்கு (பட்டிமன்றம் - 12) நடுவர் வேணும். ஓடிவாங்க தோழிகளே. தயவு செய்து தோழிகள் நடுவர் பொறுப்புக்கு முன் வாருங்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வரும் திங்கள் அன்று வழக்கம் போல் புது தலைப்போடு பட்டிமன்றம் துவக்கபடும். நடுவராக வர விருப்பம் உள்ளவர்கள் இங்கே தெரியப்படுத்தவும். ஒருவர் தான் வர வேண்டும் என்பது இல்லை.... பலரும் முன் வந்தால் அடுத்தடுத்து வரும் பட்டிமன்றங்களுக்கு ஏதுவாக இருக்கும். அனைவரும் பட்டிமன்ற விதிமுறைகளை இந்த இழையில் படித்து தெரிஞ்சுக்கங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் நடுவராக இருக்கிறேன் மேடம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மிக்க நன்றி ஷேக்... புது தளத்தின் முதல் நடுவர். விதிமுறைகள் இங்கே இருக்கின்றன... சந்தேகம் இருந்தால் தெளிவுபடுத்திக்கங்க. தலைப்பை ஞாயிறு மாலை ஆரம்பிக்கலாம். விவாதங்கள் திங்கள் துவங்கும். விவாதம் அடுத்த ஞாயிறு வரை மட்டுமே. உங்கள் தீர்ப்பு அடுத்த திங்கள் வெளி வரும். பழைய பட்டிமன்றங்களை ஒரு முறை பார்க்க விரும்பினால் பார்க்கலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்