சிவப்புநிற ஃபேன்சி கற்களை கொண்டு கைச்செயின் செய்வது எப்படி?

தேதி: September 5, 2009

5
Average: 4.2 (6 votes)

 

முக்கோணம் வடிவில் உள்ள சிவப்புநிற ஸ்டோன்
கோல்டுநிற ஸ்ப்ரிங்
குரடு
பொடி மணிகள்
கைச்செயின் கொக்கி மற்றும் வளையங்கள்

 

கைச்செயின் செய்வதற்கு குறிப்பிட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கோல்டுநிற ஸ்ப்ரிங்கை ஒவ்வொரு வளையமாக குரடால் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வளையத்தில் மூன்று மூக்கோண வடிவில் உள்ள சிவப்புநிறக் ஸ்டோனை கோர்த்துக் கொள்ளவும்.
மற்றொரு வளையத்திலும் இதுப்போல் கோர்த்து வளையத்தை குரடால் நெருக்கி விடவும்.
பிறகு ஒரு சிவப்பு ஸ்டோனில் ஒரு வளையம், ஒரு சிவப்பு ஸ்டோன் என்று கோர்த்து வளையத்தை நெருக்கி விடவும். இதுப்போல் ஆறு ஸ்டோன் கோர்த்துக் கொள்ளவும். அடுத்தப்பக்கத்திற்கு இதைப் போல் கோர்த்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வளையத்தில் மூன்று பொடிமணிகள், ஒரு சிவப்புநிற ஸ்டோன், மூன்று பொடிமணிகள் என்று கோர்த்து வைக்கவும். ஆறு பொடி மணிகள் கோர்த்த ஒரு வளையத்தை சிவப்புநிற ஸ்டோனின் அடியில் உள்ள துளையில் மாட்டிவிட்டு வளையத்தை குரடால் நெருக்கி விடவும்.
படத்தில் உள்ளது போல் மேல் இருக்கும் இரண்டு ஸ்டோனையும் இணைப்பதற்கு அதில் ஒரு வளையத்தை கோர்த்து நெருக்கி விடவும். அடுத்து கீழ் உள்ள இரண்டு ஸ்டோனையும் இணைக்க பொடிமணிகள் கோர்த்த வளையத்தை அதில் மாட்டிவிட்டு வளையத்தை நெருக்கி விடவும்.
பிறகு வலதுப்பக்கத்தில் உள்ள சிவப்புஸ்டோனில் ஒரு வளையத்தை கோர்க்கவும். அந்த வளையத்தில் ஆறு சிவப்பு ஸ்டோன் கோர்த்த செயினை மாட்டிவிட்டு வளையத்தை நெருக்கி விடவும். கடைசி சிவப்பு ஸ்டோனில் ஒரு வளையத்தை கோர்த்து அதனை தொடர்ந்து ஐந்து வளையங்களை கோர்த்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து இடதுப்பக்கத்தில் உள்ள சிவப்பு ஸ்டோனில் இதேப் போல் வளையம் மற்றும் ஆறு சிவப்பு ஸ்டோன் கோர்த்த செயினை மாட்டி விட்டு வளையத்தை நெருக்கி விடவும். கடைசியாக உள்ள ஸ்டோனில் ஒரு வளையத்தை கோர்த்து அதில் கைச்செயின் கொக்கியை கோர்த்து வளையத்தை நெருக்கி விடவும்.
இப்பொழுது சுலபமாக செய்யக்கூடிய அழகிய கைச்செயின் ரெடி. அவரவர் கையின் சுற்றளவுவை பொறுத்து இதில் உள்ளது போல் ஸ்டோனை கோர்த்துக் கொள்ளவும்.
இது நம்முடைய கற்பனைதிறன் ஏற்ப வெவ்வேறு வடிவத்தில் கிடைக்கும் ஸ்டோனைகளை பயன்படுத்தி எளிமையாகவும், கிராண்டாகவும் செய்துக் கொள்ளலாம். இந்த கைச்செயின் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. கவிப்ரியா அவர்கள். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கவர். தற்பொழுது கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாக இருக்கிறது கவிப்ரியா. பாராட்டுக்கள்.
சதுர ஸ்டோன்ஸ் தான் வைத்திருக்கிறேன், இது போல் கற்கள் கிடைத்தால் பார்க்கலாம்.
இமா

‍- இமா க்றிஸ்

வெகு அழகாக இருக்கிறது உங்கள் கைச்செயின்.
அன்புடன்,
செபா.

கவிப்பிரியா, உங்கள் கைச்செயின் நன்றாக இருக்கிறது. நானும் செய்து பார்த்தேன். இதே மெத்தடை பின்பற்றி சிம்பிளாக நெக்லஸும் செய்திருக்கிறேன். I've sent the picture to admin. பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க. நன்றி ப்ரியா.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

இந்த செய்முறையை பார்த்து திருமதி. தாஹிரா பானு அவர்கள் செய்த கைச்செயின் மற்றும் நெக்லஸின் படம்

<img src="files/pictures/blue-jewel-thahira.jpg" alt="picture" />

கலக்கிட்டீங்க தாஹிராபானு. :)

‍- இமா க்றிஸ்

பாராட்டினதுக்கு ரொம்ப நன்றி இமா. இன்னும் இன்னும் கைவேலைகள் செய்ய தோண்டுகிறது உங்கள் பாராட்டு.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta