மட்டன் சுக்கா வறுவல்

தேதி: September 6, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (5 votes)

 

மட்டன் - கால் கிலோ
கடலை மாவு - 3 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

கறியை முக்கால் பதம் வேகவைத்து கொள்ளவும். எண்ணெய் சூடாக்கி சோம்பு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து வதக்கி கறியை சேர்க்கவும்.
5 நிமிடம் வதக்கிய பின் எல்லாத்தூளையும் சேர்த்து, உப்பு மற்றும் கீறின பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வறுக்கவும். மசாலா கறியுடன் சேர்ந்தவுடன் கடைசியாக கடலைமாவு சேர்த்து வறுத்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்