பட்டிமன்றம் 6 - எல்லோரும் வாவாவாவாவாவாங்கோ...

அனைவரும் நலந்தானே??

இம்முறைக்கு நான் தேர்ந்தெடுத்துள்ள டாபிக் - தோழி ஆயிஸ்ரீ அவர்களின் "......"

கீழே இழுங்கள் (scroll down)... :))

நண்பர் ஒருவர் முன்பு வருத்தப்பட்டுக்கொண்டார் - சிறு வயதில் படித்த நீதிக்கதைகள் எல்லாம் இப்பொழுது அர்த்தமிழந்து நிற்கின்றன.. அவற்றில் சொல்லியுள்ளது போன்று வாழ்க்கையின் வெற்றிகள், அதற்காக உழைப்பவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை...... (நண்பர் மத்தபடிக்கு successful ஆகத் தான் இருக்கிறார்.. அன்று திடீரென்று தத்துவ மூட் :) வந்து விட்டது...)

சிறு வயதுக் கதைகளில் டிபிகலாக ராமு கோபு என்று இரு சிறுவர்கள் இருப்பார்கள்.. முதலாமானவர் ஏழை, நன்றாக படிப்பார், நல்ல உழைப்பாளி.. அடுத்தவர் பிற பொழுது போக்கு அம்சங்களில் நாட்டமுடையவர்.. காலப்போக்கில் ராமுவுக்கு கிடைக்கும் வெற்றியைக் கண்டு கோபுவும் உண்மையை உணர்ந்து முயற்சிப் பாதைப் பக்கம் தன் கவனத்தை செலுத்துவார்..

ஆனால், நிஜ வாழ்க்கையில் முயற்சி செய்யும் எல்லா ராமுக்களும் தன் குறிக்கோள்களை அடைந்து விடுகின்றனரா? வெற்றி தோல்விகளில் அதிர்ஷ்டத்தின் பங்கென்ன??

இது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன? இதில் குறிக்கோள்கள் என்பன எதை வேண்டுமானாலும் குறிக்கலாம்... லட்சியம், கல்வி, வேலை, திருமணம், குடும்பம், நிதி, நிம்மதி, முன்னேற்றம், நம்ம பட்டிமன்றத்துல பேசி ஜெயிப்பது :)) - இது போன்ற எந்தவொரு விஷயத்தையுமே அடைவதில் வெற்றிகளுக்கு எதை முக்கிய காரணமென்று நினைக்கிறீர்கள் - முயற்சியா இல்லை அதிர்ஷ்டமா? அதே போல், கிடைக்காமல் போன விஷயங்களுக்கு எதை முக்கிய காரணமென நினைக்கிறீர்கள்? போதிய முயற்சியின்மையா இல்லை அதிர்ஷ்டமின்மையா??

உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் நீங்கள் சந்திக்க நேரிட்ட / கேள்விப்பட்ட மக்களை கொண்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

பள்ளி / கல்லூரியிலும் இது போன்றதொரு விவாதத்தை எதிர் கொண்டிருந்திருக்கலாம்..….. என்றாலும், காலப்போக்கில் எமது நண்பரை போல உங்கள் கருத்துக்களும் மாறி இருக்கலாம்.. எனவே, வாருங்கள், உரையாடுங்கள்...

''மனிதர்கள் தங்கள் வாழ்வில் குறிக்கோள்களை அடைய முக்கிய காரணமென்ன - முயற்சியா இல்லை அதிர்ஷ்டமா??''

இதுவரை நடுவர்கள் அனைவரும் ஆளுக்கொரு பக்கம் பட்டிமன்றத்தை வைத்து சிறப்பித்தார்கள்.. நானும் யோசித்து பார்த்துவிட்டேன்.. நாட்டாமை, ஆலமரம் : ) போன்ற இடங்கள் எல்லாம் முடிந்து போய் விட்டதால் - நான் உங்களை வாங்கோ வந்து பேசுங்கோ என்று அன்போடு :))அழைப்பது "அமெரிக்கா" விற்கு... உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களை இங்கு அழைத்து வருவதற்கு இலவச ப்ளேன் டிக்கட் ஏற்ப்பாடு செய்யப்பட்டு உங்கள் ஈமெயில் க்கு அனுப்பட்டுள்ளது.. அமெரிக்காவிலேயே இருப்பவர்களுக்கு domestic ப்ளைட் ஏற்ப்பாடு செய்துள்ளோம்.. வருபவர்கள் எல்லோரும் குஷன் சேர்களில் அமர்ந்தபடியே உரையாட குளு குளு கான்பரன்ஸ் ஹால் ஒன்றை வாடகைக்கு பிடித்துள்ளோம்... மைக் பிடித்து நீங்கள் பேசுவதை நாகையில் நேரடி ஒலி/ஒளிபரப்பு பண்ண போகிறோம் :)))

இறுதியில் இரு அணியினரும் ரிலாக்ஸ் செய்ய சிறிய டூர் ஒன்றையும் ஏற்ப்பாடு செய்துள்ளோம்.. நிறைய பேர் வருவீங்கள் என்ற எதிர்பார்ப்போடு இத்தனை செலவுகளும்... :)))) எனவே முதலுக்கு மோசம் பண்ணாமல் எல்லோரும் வாவாவாவாவாவாங்கோ...

பிகு - பிரேக் பாஸ்ட் மற்றும் லன்ச் ஏற்ப்பாடு செய்துள்ளோம்.. சீக்கிரம் வந்தால் சுவைக்கலாம்.. தீர்ந்து போய் விட்டால் பிறகு நான் பொறுப்பல்ல.. :))

இன்னும் சற்று நேரத்தில் விருந்தினர் வரவிருப்பதால், இப்போதே ஆரம்பித்து விட்டு செல்கிறேன்.. இவ்வாரம் லாங் வீகென்ட், நோன்பு, இதர வேலைகள் என்று அனைவரும் பிசியாக இருப்பதை உணர்ந்தாலும், நான் மறுபடியும் வந்து பார்க்கும் போது எல்லோரும் வந்து பேசியிருப்பீங்கள் என்ற (நப்பாசை :)) நம்பிக்கையுடன் செல்கிறேன்..
ஏமாத்திட மாட்டீங்களே?? :))

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வனிதா

நல்லதொரு வேலையை செய்திருக்கீங்கள்.. நன்றி... இங்கு வருபவர்களும் அதை காண அந்த லிங்கை கொடுத்திருக்கிறேன்...

http://www.arusuvai.com/tamil/forum/no/13676

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

என்னிடம் உள்ள மெயிலெல்லாம் செக் பண்ணிட்டேன்.... ரிக்கெட் பற்றிய எந்த டீரெயிலும் இல்லை? அப்போ நான் எப்ப வாறது எப்போ பேசுறது?.. நடுவர் அவர்களே எந்தப் பிளேன் புக் பண்ணியிருக்கிறீங்கள்? நிறையப் பிளேனுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காதே:). குண்டோடுதான் திரிகிறதே....

அதுசரி நாகையில நேரடி ஒலிபரப்போ?... வேளைக்கே சொல்லியிருக்கலாமெல்லே... கொஞ்சம் பொறுங்கோ கோட் சூட்டைப் போட்டுக்கொண்டு வாறேன்...
என் கட்சியை இரவிரவா யோசிச்சு நாளைக்கு ஒரு முடிவிற்கு வருகிறேன்.... என்ன இது பிரேக் பாஸ்ட் என்று சொல்லிப்போட்டு, வெறும் சீரியலை மட்டும் வச்சிருந்தால்.. எப்படி? நாளைக்கு நல்லதாக வையுங்கோ.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் சந்தனா! இம்முறை நல்ல தலைப்பு தெரிவு செய்துள்ளிர்கள்.சந்தோசம்
எங்களுக்கெல்லாம் பிளேன் டிக்கற் அனுப்பமாட்டிர்களோ. நாங்களும் பட்டிமன்றத்தில்
பேச வருவமேல்லோ. நாகையில் நேரடி ஒளிபரப்பென்று வேறை சொல்கின்ரிர்கள்,
சொந்த செலவில் என்றாலும் வந்து கலந்துகொள்ளத்தான் வேண்டும்.

மனிதர்கள் தங்கள் வாழ்வில் குறிக்கோளை அடைய முக்கிய காரணம்
"முயற்சியே" என்பது எனது கருத்து.

மற்றும் தோளிகளுடைய கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். மீண்டும் வருவேன்.
நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தலைப்பு ஸூப்பர்....
பட்டிமன்றத்தில் கலந்துக் கொள்வோருக்கு இத்தனை வசதிகளா!!!!!!!!!!!!!!
நான் அதிர்ஷ்டம் பக்கம்....
அதிர்ஷ்டம் என் பக்கமா என்பது பட்டிமன்ற தீர்ப்பில்தான் தெரியும்....
வசதிகளை பார்த்து அதிர்ஷ்டத்தை நம்பி முயற்சியுடன் வந்திருக்கிறேன்.....
கொறிக்கவும் ஏதாவது இருக்கும் தானே!!!!!!!குடுங்க ,கொறிச்சுகிட்டே மற்றவங்களுக்காக வெய்ட்டிங்....

நடுவர் சந்தனாக்கு வணக்கம். :) நல்லதொரு தலைப்போடு வந்துட்டீங்க.... வாழ்த்துக்கள்.

முயற்சியே செய்யாமல் இருப்பவனுக்கு அதிர்ஷ்டம் கை கொடுப்பதில்லை. ஆகவே நான் "முயற்சியே" என்ற அணியில் சேர்கிறேன்.

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலிதரும்"

இப்படி பெரியவங்க சொல்லிட்டு போயிருக்காங்க.... நான் அதை நம்பறேன்.... அதனால் என் அணியின் கூட்டு முயற்சியால் இம்முறை நாங்கள் வெற்றி பெருவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களுக்கும் இரண்டு அணிகளிலும் வாதிடப் போகும் தோழிகள், மற்றும் பார்வையிடும் தோழிகள் அனைவருக்கும் வணக்கம்!

''மனிதர்கள் தங்கள் வாழ்வில் குறிக்கோள்களை அடைய முக்கிய காரணமென்ன - முயற்சியா இல்லை அதிர்ஷ்டமா??''

முயற்சிதான் என்ற அணியில் என் கருத்துக்களை எடுத்து சொல்ல வந்துள்ளேன்.

முதலில் தெளிவான தலைப்பைத் தந்ததற்கு என்னுடைய நன்றி. காரணம் – வாழ்வில் தேவை முயற்சியா அல்லது அதிர்ஷ்டமா, என்று கேட்டிருந்தால் உடனடி பதில் இரண்டுமே தேவைதான் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருந்திருக்கும். ஆனால் “குறிக்கோள்களை அடைய முக்கிய காரணம்” என்று கேட்டிருப்பதால் எல்லோரையும் சிந்திக்கத் தூண்டும் தலைப்பாக இது அமைந்து இருக்கிறது எனக் கருதுகிறேன்

அறுசுவையின் பட்டிமன்றம் என்பது வெறும் பொழுது போக்கு மட்டும் அல்ல, பட்டிமன்றத் தலைப்பு என்பது எங்களை யோசித்துப் பார்க்க வைத்து, எங்களைப் பற்றிய சுய அலசலையும் செய்யத் தூண்டுதலாக அமைந்து, மற்றவர்களின் வாழ்க்கைப் பாடத்தையும் ஒரு பறவைப் பார்வையாகப் பார்த்து, முடிவில் தெளிவையும் கொடுக்கிறது அல்லவா! அந்த வகையில் ஒரு அணியைத் தேர்வு செய்யு முன், என் கருத்துக்களைப் பதிவு செய்யுமுன், இரண்டு கருத்துக்களிலும் எது “மிகச் சரி” என்று எனக்குத் தோன்றுகிறது என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

வழக்கம் போலவே தலைப்பைப் பார்த்ததும் எந்தப் பக்கம் பேசுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

காரணம் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்போது இது என் முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்று பெருமை கொள்வதும், தோல்வி அடையும்போது அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுமே என்று பெருமூச்சு விடுவதும் நானும் செய்திருக்கிறேன்.

அப்படியானால் நானும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்புகிறேனா? அல்லது அது - அது இஷ்டம் போல வந்து போகும் விருந்தாளியா?

இல்லவே இல்லை, இந்த இரண்டு செய்கைகளுமே என்னை மேலும் மேலும் குறிக்கோள்களை நோக்கி முயற்சி செய்ய வைக்கும் தூண்டுகோல்தான்.

முயற்சிக்கான வெற்றி கிடைக்கும்போது தோன்றும் பெருமிதம் என்னை மேலும் மேலும் முயற்சி செய்ய சக்தியைத் தருகிறது. தோல்வி அடையும்போது, மீண்டும் அடுத்த முயற்சி செய்ய, என்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள, சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறேன், அவ்வளவுதான்.

அதிர்ஷ்டமே காரணம் என்று சொல்பவர்கள் கூட ஒரு குறிக்கோள் நிறைவேறாத போது என்ன சொல்கிறார்கள் – பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்றுதானே! அதன் பொருள் என்ன? இன்னும் முயற்சியைத் தொடர்ந்து செய், வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து முயன்று பார் என்பதுதானே அதன் பொருள்!

”கடுகைத் துளைத்து, எழுகடலைப் புகட்டி, குறுகத் தறித்த திருக்குறள்” சொலவது என்ன?

'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்'

திருக்குறளை இங்கு உதாரணம் காட்டினால் இது திருக்குறள் வகுப்பாகி விடும். தோழி மாலதி தினம் ஒரு குறள் என மனம் கவர்ந்த குறள்களுக்காக ஒரு தனி இழையே தொடங்கி இருக்கிறார் என நினைக்கிறேன். இருப்பினும் இந்த பட்டி மன்றத்துக்காக ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை முதலிய அதிகாரங்களை மீண்டும் படித்துப் பார்த்து உற்சாகம் கொள்ள முடிந்த்தது. அதற்கும் ஒரு நன்றி.

இன்னும் பல கருத்துக்களுடன் மீண்டும் வர முயற்சிக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

குயிலே குயிலே இறகுபோடென்றால் போட்டுவிடுமோ? அப்படித்தான் முயற்சி இருந்தால்தான் அதிர்ஷ்டமும் கூடவே வரும்....

இன்று விடுமுறை... இருப்பினும் "முயற்சி", செய்கிறேன் மீண்டும் வர.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதுக்குள்ளே அடுத்த பட்டி தொடங்கியாச்சா? ஒரு 3,4 நாள் வரல‌, அதுக்கிடையில என்னன்னல்லாம் நடந்துடுது!!

சந்தனா.. சாரி,(இது "அந்த" சாரியில்ல) நடுவரம்மா, எப்பவும் எல்லா பட்டிமன்றங்கள்லயும் முதல்ல ரெண்டு பக்கத்துக்கும் சேத்துதான் பேச ஆரம்பிப்பீங்க, நடுவரா ஆகிறதுக்கு நல்ல பயிற்சி கெடச்சிருக்குமே?

அதிர்ஷ்டம்கிற பக்கம் யாரும் பேச வந்தா ஆச்சர்ய‌ந்தான்!! எல்லாருமே இம்முறை ஒரே அணிதான் என்று நினைக்கிறேன்!!

அதிர்ஷ்டம் என்பதை இறைவன் அருள் என்று கருதினாலும், பிரார்த்தனை என்ற முயற்சியால் அதையும் பெறலாமே!!

அதிரா, நீங்க மட்டும் எப்படி புதுசு புதுசா யோசிக்கிறீங்க? குயிலோட இறகு எதுக்கு உங்களுக்கு?? நாங்கள்ளாம் மயிலோட இறகைத்தான் தேடி சேர்ப்போம்!! "மயிலே மயிலேன்னா இறகு போடாது" என்பதுதான் நானறிந்தது!!

நடுவரம்மா, ஒரு கேள்வி, இதுல அதிர்ஷ்டம்தான்னு நீங்க தீர்ப்பு சொல்லிட்டா, எல்லாரின் உழைப்பும் வீண் என்ற பொருள் வராதா?

என்னை ஏமாற்றாமல் நேரத்துக்கே வந்துவிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.. இங்கு நாங்கள் punctuality ஐ மிகவும் மதிக்கிறோம்.. :)) எனவே, உங்கள் வருகையை மிகவும் appreciate செய்கிறோம்..

IST நேரப்படி தான் வருவோம் என்று அடம் பிடிப்பவர்களுக்கு - ம்ம்.. சீக்கிரம் வந்து சேருங்க.. அலங்காரம் எல்லாம் போதும்.. நாகையில் உங்களை எதிர்பாத்து யாரும் டிவி முன் அமர்ந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்.. :))

யாரங்கே.. பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு சுடச் சுட fried garlic mushrooms செர்வ் செய்யுங்கள்.. கூடவே ஆரஞ் ஜூசும்... இன்னமும் எட்டிப் பார்க்காதவர்களுக்கு - கொஞ்சம் மிச்சம் வைப்போம், பார்ப்போம் - எவ்வளவு சீக்கிரம் வருகிறார்கள் என..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்