கோழி உருளைக்கிழங்கு குழம்பு

தேதி: September 9, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

கோழி - 1 கிலோ
உருளைக் கிழங்கு - 2(பெரியது)
வெங்காயம் - 2
தக்காளி - 1 அல்லது 2
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
கறுவா - 1 துண்டு
கராம்பு - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
இறைச்சி சரக்கு தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சம் பழப்புளி - 1/2 (விரும்பினால்)


 

கோழியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும். உருளைக்கிழங்கின் தோலை சீவி பெரிய துண்டுகளாக வெட்டவும். வெங்காயம், பூண்டு, தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, கறுவா, கராம்பு, பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் பூண்டைப் போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியதும் கோழியைச் சேர்த்து வதக்கவும்.
கோழி சிறிதளவு வதங்கியதும் உப்பு, தக்காளிச் சேர்த்து ஒரு முறை கிளறி மூடி வேக விடவும்.
5 நிமிடத்தின் பின்பு மூடியை திறந்து மிளகாய்த்தூளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர் விடவும்.
பின்பு பச்சை மிளகாய், உருளைக்கிழங்கை சேர்த்து மூடி வேகவிடவும்.
கோழி, உருளைக்கிழங்கு வெந்து, குழம்பு தடிப்பாக வந்ததும் இறைச்சி சரக்குத்தூளை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
பின்பு விரும்பினால் எலுமிச்சம்பழ புளியைச் சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான கோழி உருளைக் கிழங்கு குழம்பு தயார். இது சோறு, புட்டு, இடியப்பம், பாண், சப்பாத்திக்கு மிகவும் நல்லது.


மேலும் சில குறிப்புகள்