"சுபா ஜெயபிரகாஷ்" சமையல் அசத்த போவது யாரு???.

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பல பகுதிகளை கடந்து இப்பொழுது பகுதி - 18 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை, வாருங்கள் தோழிகளே "சுபா ஜெயபிரகாஷ்" சமையல் அசத்த போவது யாரு???.

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

அதிரா, ரேணுகா,

நல்லாப் பாத்தீங்களா? நான் மூன்றாவது இடத்தைப் பிடிச்சிருக்கேனா? எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, என்னப்பா நடக்குது இங்கே?

மந்திரி பட்டம் எல்லாம் குடுத்து இருக்கீங்க, மிகவும் நன்றி.

முதலில் நன்றியை சொல்லிடறேன்.

சமைத்து அசத்தலாம் பகுதியை சிறப்பாக நடத்தி வரும் அதிரா, ரேணுகா, மற்றும் பங்கு பெற்ற, பங்கு பெறும், நிறைய குறிப்புகள் செய்து முன்னணி இடங்களைப் பிடித்த தோழிகள், குறிப்புகள் கொடுத்து வரும் தோழிகள், அறுசுவை குழாம் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றி! நன்றி! நன்றி!

இந்த முறை ரயிலில் அதிகம் பேர் வராததால் எனக்கு மந்திரியாகும் அதிர்ஷ்டம் கிடைத்து விட்டது போலும்.

தோழிகள் அனைவரும் இனி வரும் வாரங்களில் நிறைய சமைத்து அசத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன்,

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்