இஞ்சி பூண்டு ஊறுகாய்

தேதி: September 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 35
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிய கொட்டைபாக்கு அளவு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கல் உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 75 மில்லி


 

இஞ்சியை தோல் சீவி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். புளியை சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மிளகாய் வற்றலை போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து பூண்டு மற்றும் இஞ்சியை போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வதக்கிய மிளகாய் வற்றல், பெருங்காய துண்டு போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, புளி மற்றும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
அதில் வதக்கி வைத்திருக்கும் இஞ்சி பூண்டை போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.
கைவிடாமல் 5 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும். காரம் அதிகமானால் இன்னும் சிறிது எண்ணெய் சேர்த்துக் கிளறி கொள்ளவும்.
இஞ்சி பூண்டு ஊறுகாய் தயார். இதை இட்லி, தோசைக்கு கூட தொட்டுக் கொள்ளலாம். விருப்பப்பட்டால் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். இதை பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு கைப்படாமல் பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். இந்த குறிப்பினை செய்து காட்டியவர் <b> திருமதி. ராஜேஸ்வரி </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ரஜேஸ்வரி,எப்படி இருக்கீங்க?தங்களுக்கு வாழ்த்துக்கள்ங்க.பர்க்கவே சூப்பராக இருக்குங்க.வெல்லம் தாளித்தப்பின் சேர்க்க வேண்டுமா?வெல்லம் சேர்த்தாலும் கெடாது அல்லவா?
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

recipe is super akka, i prepared this and my hus is askng for this daily...thanks akka.

ராஜேஸ்வரி மேடம்
இன்னைக்கு இந்த ஊறுகாய் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நல்ல காம்பினேஷன். சூப்பர். நன்றி நன்றி நன்றி.........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி