தேதி: September 10, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டை - 3
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
கல் உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மிளகு, சீரக விழுது - அரை மேசைக்கரண்டி
தேங்காய் விழுது - கால் கப்
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து முட்டையின் மேல் ஓடை நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, அதில் நறுக்கின வெங்காயம், மற்றும் தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்.

அதன் பிறகு அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விட்டு அதனுடன் அரைத்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விடவும்.

பின்னர் தேங்காய் விழுது போட்டு திக்காக ஆனதும் அரைத்த மிளகு, சீரக விழுதை போட்டு கிளறி மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து திறந்து மசாலா நன்கு வதங்கி எண்ணெய் வெளி வந்து கிரேவி பதம் வந்ததும் வேக வைத்த முட்டையை போடவும். முட்டை போட்ட பிறகு ஒரு முறை கிளறி விட்டு 2 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து பின்னர் இறக்கி விடவும். முட்டையை இரண்டாக கீறியும் போடலாம்.

மசாலா சுவையுடன் கூடிய முட்டை கிரேவி தயார். இதில் உள்ள மசாலாவுடன் சாதம் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த முட்டை கிரேவியை நெய் சாதத்துடனும் பரிமாறலாம். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் <b> திருமதி. ஸ்ரீதேவி </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளவும்.

Comments
முட்டை கிரேவி சூப்பர்..
முட்டைக்கிரேவி சூப்பர், எவ்வளவு அழகாக கிரேவி வந்திருக்கு, கிரேவியைப் பார்க்க சாப்பிடவேணும்போல இருக்கு... உடனேயே சொல்ல நினைத்தும் முடியவில்லை, இப்பத்தான் சொல்லமுடிந்தது.... சொல்லிட்டேன்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
HI Thank you Mrs sridevi,,
HI
Thank you Mrs sridevi,, its delicious
RAVI
RAVI
I tried your receipe
I tried your receipe mam...its really very tasty!
simply super recipe.....its
simply super recipe.....its easy to make.i like this recipe very much......yameee!!! tasteful......
Sridevi mam! நான் நேற்று
Sridevi mam! நான் நேற்று இந்த கிரேவிதான் செய்தேன். தோசையுடன் சாப்பிட ரொம்ப சுவையாக இருந்தது.
Hi... I have prepared this
Hi... I have prepared this gravy in my room.. All my friends liked and they told it is delicious..
super
super
madhu
printing the recipies
print seya mudiyavillai.
ரவிச்சந்திரன்
நேரடியாக ப்ரிண்ட் செய்ய முடியாதுதான். காப்பி பண்ணி வேற எங்கேயாவாது பேஸ்ட் செய்து பிறகு பிரிண்ட் செய்து எடுங்க.
- இமா க்றிஸ்
ப்ரிண்ட்
இமா & ரவிச்சந்திரன்
கருத்து தெரிவிக்கவுக்கு பக்கத்தில் Share/save ன்னு ஒரு ஆப்சன் இருக்கு பாருங்க.. அதுல PrintFriendly ன்னு இருப்பதை க்ளிக் பண்ணினா இந்த குறிப்பு ஒரு நியூ விண்டோல ஓபன் ஆகும்.. அதுல இருக்கும் Print ஆப்சனைக் க்ளிக் பன்ணி ப்ரிண்ட் எடுக்கலாம்
கலை
கலை
சொன்னதற்கு நன்றி கலை. இத்தனை நாள் எனக்குத் தேவை வராததால் கவனிக்கவே இல்லை. :-)
- இமா க்றிஸ்
Super mutai keravi
Super mutai keravi