சமைத்து அசத்தலாம் பகுதி - 19, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -18, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -19 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , ஜூலைகா... (112), அஸ்மா... (107) இருவரினதும் குறிப்புக்களைச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (22/09) முடிவடையும். புதன்கிழமை(23/09), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

வனிதா, அநாமிகா, சீதாக்கா, ரேணுகா, ஆசியா, அம்முலு, சுவர்ணா, வத்சலா, சந்தனா, ராணி, சுஸ்ரீ, வின்னி அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(14/09) சமைக்கத் தொடங்குவோம், நிறைய சமைத்து, அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அரட்டைக்குப் போகவேண்டாம் இங்கே வாங்கோ....
சமைக்காமல் "அரட்டையில்" அரட்டை பண்ணினாலும் பணிஷ்மெண்ட் உண்டு:).... ஓடிவாங்கோ சமைப்போம்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,ரேணுகா மற்றும் எல்லோரும் நலமா?
தோழிகள் எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்?இன்னும் ஒருவரையும் இங்கு காணவில்லையே?
இன்று ஜூலைகாவின் சமையலில் இருந்து உருளைக்கிழங்கு பச்சடி செய்தேன்.வித்தியாசமான சுவை நன்றாக இருந்தது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

என் கணக்கு ! அஸ்மா அக்கவின் குறிப்பில இருந்து தக்காளி சட்னி!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அஸ்மாவின் குறிப்பில் இருந்து கோல்டன் ப்ரெட் செய்தேன்,என் கணக்கில் சேர்க்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் அதிரா & ரேணு,
நலமா? இன்று நான் செய்தது, ஜுலைகாவின் 'கேரட் பட்டாணி ரைஸ்' - நன்றாக‌ இருந்தது. பின்னூட்டம் இனிதான். மீண்டும் நாளை பார்க்கலாம்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இங்கேயும் அதே கதைதான்... முயல் + ஆமை = முயலாமை...
நன்றி இமா.. சொல்லித்தந்தமைக்கு...

வத்சலா வாங்கோ மிக்க நன்றி.... எவ்ளோஓஓஓஓஓ தூரத்திலிருந்த உங்களுக்கே கேட்டு ஓடிவந்திருக்கிறீங்கள்... பக்கத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் கேட்கவில்லையாம் இன்னும்:) அது யாரெனக் கேட்டிடாதீங்கோ... எனக்கே சரியாத் தெரியாது..:) இன்னும் வாங்கோ வத்சலா.

இலா வாங்கோ மிக்க நன்றி. இம்முறை முதல் பெட்டியிலேயே ஏறிவிட்டீங்கள்... நிட்சயமாக குழல்புட்டுக்கு ஆசைப்பட மாட்டீங்கதானே?.

ஆசியா வாங்கோ மிக்க நன்றி. இன்னும் தொடர்ந்து வருவீங்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கெனக்கு.

சுஸ்ரீ வாங்கோ மிக்க நன்றி. தொடர்ந்து செய்யுங்கோ.

எங்கட எக்கவுண்டன், "பே லீவ்" எல்லாம் முடிந்து இப்போ "நோ பே லீவில்" நிற்கிறா... இது எங்க போய் முடியப்போகுதோ தெரியாது:).

சரி சரி எல்லோரும் இம்முறை வரவேணும் சாட்டெல்லாம் சொல்லப்படாது. ரெயின் எப்படி நல்ல வசதியாக இருக்கோ? வாசலில் ஒரு form இருக்கு, அதை ஒருக்கால் நிரப்புங்கோ ஏறியபின்னர், ஏதும் ரெயினில் குறைகளிருப்பின் அதில் எழுதினால், நாங்கள் குறையை நிவர்த்தி செய்கிறோம் என வாக்குறுதி அளிக்கிறோம்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா& ரேணுகா! ரெயினில் ஏறி விட்டேன். கூட்டம் அதிகம் இல்லை.
நல்ல வசதியாக இருந்து போகலாம். என்றாலும் போரிங்காய் இருக்கு.
பாட்டு போட்டால் கேட்டுக்கொண்டு போகலாமெல்லோ.
போடுறதுதான் போடுறியள், பழைய பாட்டாய் போடுங்கோ.
கொஞ்சம் யூஸ் தந்தால் குடிக்கலாம்.
அதிரா வாசலில் உள்ள form நிரப்பி விட்டேன்.
வாக்குறிதியை காப்பாற்றுவீர்கள் என்று நினைநக்கிறேன்.
நான் இன்று சமைத்தது அஸ்மாவின்
புராக்கொல்லி கூட்டு.
நன்றி மீண்டும் வருவேன்.
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வத்சலா நான் நலம்,நீங்க எப்படி இருக்கீங்க?ஆரம்பாமே வந்துட்டீங்கள் மிக்க நன்றி...தொடர்ந்து வாங்க..

இலா இந்தமுறை முன்னமே வண்டியை பிடிச்சுட்டீங்க,நல்லது,குழல்புட்டுக்கு ஆசைபடாமல் தொடர்ந்து நிறையா செய்து சொல்லுங்க,

ஆசியா அக்கா நலமா??நீங்கள் ஊருக்கு போனதில் இருந்து கனக்கெல்லாம் குறைஞ்சு போயிடுச்சு,இருந்தாலும் நீங்கள் தவறாமல் கலந்து கொள்வது சந்ந்தோசமாக இருக்கு,தொடர்ந்து வந்து சொல்லுங்க

ஸ்ரீ நலமே,நீங்க நலமா?ஊர் சுற்றுவது எல்லாம்முடிந்ததா?இந்த முறை எதும் சொல்லாமல் நிறைய செய்து சொல்லனும் ஓ.கே வா???

ராணி நீங்களும் டிரெயினை பிடித்ததில் மகழ்ச்சி.ஆமாம் இப்ப கொஞ்சம் கூட்டம் இல்லை,நோன்பு மாதம் அல்லவா!அதான்,இருப்பினும் இறுதியில் அனைவரும் வருவார்கள்.பாட்டு
பாட்டு போடலாம் என்று சொன்னாலே அதிரா பயந்துவிடுவார்,இருப்பினும் மற்றவர்கள் ஆசைக்காக அவரே சில சமையங்களில் பாடுவார் :)
நிச்சயம் நாங்கள் வாக்கை காப்பாற்றுவோம்.அதே போல் நீங்களும் நிறையா சமைத்து சொல்லுங்க.

கொஞ்ச நாள் ஜூஸ் போடாமல் எல்லாமே மறந்திடும் போல,அதிரா ஜூஸ் போடாமல் தான் டிரெயினில் கூட்டம் இல்லையோ,சரி சரி பிடிங்க டாங் ஜூஸ்,இன்று மட்டும் தான் இது,நாளை முதல் டிரெயினின் பட்ஜெட் படி ஜூஸ்ஸ் தரப்படும்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

//எங்கட எக்கவுண்டன், "பே லீவ்" எல்லாம் முடிந்து இப்போ "நோ பே லீவில்" நிற்கிறா... இது எங்க போய் முடியப்போகுதோ தெரியாது:).//

அதிரா இப்படியெல்லாம் லீவு இரூக்கா?எனக்கு தெரியவே தெரியாதே,கொஞ்சம் விளக்கமா சொன்னா எனக்கு வசதியா இருக்கும்:)))

என் கனக்கு அஸ்மா அவர்களின் பரோட்டா சால்னா(சைவம்) செய்துவிட்டு பதிவு போடதான் காத்திருந்தேன் அதிரா,இனி அடிக்கடி சமைத்திடுவேன்..ஆரம்பம் தான் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால் நிறுத்தமாட்டோம்:)

அசைவம் நான் சாப்பிடுவதில்லை,அதனால் வெஜ் ரெசிபியா தேடுகிறேன்,புரட்டாசி மாதம் வருகிறதல்லவா,இந்த முறை விரதம் இருக்கலாம் என இருக்கேன்,யாருக்காவது புரட்டாசி சனி கிழமைவிரதம் பற்றி தெரிந்தால் சொல்லுங்க,

தோழிகளே முடிந்தவரை எல்லாரும் கொஞ்சம் 2 குறிப்பாவது சொல்லுங்கள்,நிச்சயம் முடியும்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்