மட்டன் ரோல்

தேதி: September 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

மட்டன்(எலும்பில்லாதது) - ஒரு கிலோ
உருளைக்கிழங்கு - 600 கிராம்
மிளகாய்த்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கோதுமை மாவு - 600 கிராம்
ப்ரெட் க்ரெம்ஸ் - 150 - 200 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு
தேசிக்காய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
நன்கு அவித்த முட்டை


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மட்டன் மற்றும் உருளைக்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மட்டனை போட்டு ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு பிரட்டி விட்டு வதங்க விடவும். பாதியளவு வெந்ததும் கிழங்கை சேர்த்து கிளறி வேக விடவும். மட்டன் வேக அதிலிருந்து வரும் தண்ணீரே போதுமானதாகும். தண்ணீரின் அளவு போதவில்லையென்றால் கிழங்கை சேர்க்கும் போது 100 மி.லி சூடான தண்ணீரை ஊற்றி மூடி விடவும்.
மட்டன் மற்றும் கிழங்கு நன்கு வெந்ததும் மிளகாய்தூளை சேர்த்து கிளறி மூடி விடவும்.
தண்ணீர் நன்கு வற்றி, கறி பிரட்டலாக வந்ததும் நன்கு கிழங்கை மசித்து, அடுப்பிலிருந்து இறக்கி, தேசிக்காய்புளி சேர்க்கவும்.
கோதுமை மாவை அரை கப் எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்து வெதுப்பான தண்ணீரை ஊற்றி தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவில் தோசை வார்த்து திருப்பி போடாமல் எடுத்து சூடுப்படாத பக்கத்தில்(மேற்பக்கம்) கறியை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி மடித்து சுருட்டிக் கொள்ளவும். தோசை சுடும்போது அதிகம் தடிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதைப் போல் இன்னுமொன்று செய்து, நடுவிலே அவித்த முட்டையைப் பாதியாக நறுக்கி வைத்து சதுரமாக உருட்டவும். இதுதான் மிதிவெடி. உருட்டியவுடன் கரைத்துள்ள தோசை மாவை தொட்டு ஒரங்களை ஒட்டி விடவும். அப்பொழுதுதான் ரோல் பிரியாமல் இருக்கும். ஒவ்வொரு தோசைக்கும் சுடச்சுட உடனேயே கறியை வைத்து மூட வேண்டும்.
எடுத்து வைத்துள்ள அரைக் கப் மாவை, நன்கு தண்ணியாகக் கரைத்து, அதில் உருட்டி வைத்துள்ள ரோல்களை பிரட்டி எடுக்கவும்.
அதன் பின்னர் அந்த ரோல்களை ப்ரெட் க்ரம்ஸில் போட்டு பிரட்டி எடுத்து வைக்கவும்.
இதைப் போலவே எல்லா ரோல்கள் மற்றும் மிதிவெடியை ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரோல்கள் மற்றும் மிதிவெடிகளை ஒன்றிரண்டாக போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.
சுவையான ரோல் மற்றும் மிதிவெடி தயார். ஆற வைத்து சாப்பிடவும். இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யம்மி !!! அதிரா சூப்பர்... எனக்கு பிடிச்சிருக்கு :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதிராங்கோ! மட்டன் ரோல் சுப்பர். நல்ல விளக்க படங்களுடன் செய்து
காட்டியுள்ளிர்கள். நானும் உங்கள் முறைப்படிதான் செய்வேன். ரோல் என்றால்
எண்கள் வீட்டில் எல்லோருக்கும் நல்ல விருப்பம். நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நான் அறுசுவை முகப்பைப் பார்க்கவில்லை... ராணி கூப்பிட்ட குரலுக்குத்தான் என்னவென்று பார்த்தேன்... சந்தோஷமாக இருக்கு.

இலா மிக்க நன்றி. யம்மியேதான்....

ராணி.. எங்கள் வீட்டிலும்தான் மட்டின் ரோல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்... ஆனால் இதுதான் முதன்முதலாக நான் செய்தேன்...

குறிப்பை வெளியிட்ட "தங்களுக்கு" மிக்க மிக்க நன்றி...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

athira, very nice and yummy recipe.
vaany

அதிரா செமையாக இருக்கு.பார்த்தவுடன் சாப்பிட தோணுது.நோன்பு ஸ்பெஷலா?நிச்சயம் நினைவு வைத்து செய்து பார்ப்பேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாணி.. மிக்க நன்றி. அரட்டையைவிட்டு கொஞ்சம் இங்கேயும் வந்துவிட்டீங்கள் சந்தோஷமாக இருக்கு.

ஆசியா மிக்க நன்றி. நோன்புப் பெஷலேதான்... செய்து அசத்துங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மட்டன் ரோல், பார்க்க வடிவாகத் தான் இருக்கு. நான் கிழங்கு மட்டும் வைக்கப் போறன் அதிரா. ஆனால் எலி பூனை ஷேப்பில எல்லாம் செய்ய ஏலாது என்று நினைக்கிறன். :)
இமா

‍- இமா க்றிஸ்

அதிரா.... மீண்டும் பார்முக்கு வந்துட்டீங்க போல.... ரொம்ப நாளைக்கு பின் குறிப்பு. ;) நானும் இமா சொன்ன மாதிரி உருளை கிழங்கு வைத்து செய்து பார்க்கிறேன். எனக்காக 2 நாள் காத்திருங்கோ.... செய்து படம் எடுத்து உங்களுக்கு அனுப்பிடறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா