திருமணத்தின் போது மணப்பெண்களுக்கு போடக்கூடிய மெகந்தி டிசைன்

தேதி: September 16, 2009

5
Average: 4.1 (7 votes)

 

மெகந்தி கோன்

 

கையின் பின்புறத்தின் மையப்பகுதியில் ஒரு வட்டம் வரைந்து அதன் உள்ளே கட்டங்கள் வரைந்து கொள்ளவும். அந்த வட்டத்தை சுற்றி இருப்பது போல் கேள்வி குறி போன்ற டிசைனை வரைந்து அதையும் கோடுகள் போட்டு நிரப்பவும்.
இப்போது அந்த கேள்விக்குறி டிசைனை சுற்றிலும் ஒரே அளவிலான சின்ன சின்ன இலை வடிவங்களை வரைந்துக் கொள்ளவும்.
அந்த இலையின் உள்ளே உங்கள் விருப்பம் போல் டிசைன் அல்லது கோடுகள், புள்ளிகள் வரைந்து கொள்ளவும்.
கேள்வி குறியின் நுனிப்பகுதியில் ஒரு முழு இலையின் வடிவத்தை வரைந்து அதன் உள்பகுதியிலும் உங்கள் விருப்பம் போல் கோடுகள், கட்டங்கள் இட்டு நிரப்பவும்.
அந்த இலையின் கீழே மேலே வரைந்த கேள்விக்குறியை போலவே தலைக்கீழாக ஒரு சின்ன கேள்விக்குறி டிசைனை வரைந்து அதை சுற்றிலும் படத்தில் உள்ளது போல் அரை வட்டங்கள் வரைந்துக் கொள்ளவும்.
வரைந்த அரை வட்டத்தின் கீழே படத்தில் காட்டியுள்ள டிசைனை வரைந்து கொள்ளவும்.
அதன் உள்ளே உங்கள் கற்பனைக்கு தகுந்தவாறு டிசைனை வரைந்து அதன் ஓரங்களை சுற்றிலும் முத்துகள் போல் வரையவும்.
இப்பொழுது விரல்களிலும் இலை வடிவத்தை வரையவும். இதில் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி தொடர்ச்சியாக அல்லது இடைவெளிவிட்டு வரைந்து கொள்ளலாம். (இதில் காண்பிக்கப்பட்டுள்ள டிசைன் இடைவெளிவிட்டு வரையப்பட்டுள்ளது)
இப்போது கேள்விக்குறி மேலே வரைந்த இலைகளுக்கு நடுவில் இது போல் சிறிய வட்டங்களை வரையவும். இரண்டு இலைகளுக்கு நடுவில் சிறிய வட்டம் என்ற கணக்கில் சுற்றிலும் இதுப்போல் வரைந்துக் கொள்ளவும்.
பிறகு அதன் உள்ளே நீங்கள் கீழே உள்ள இலைகளை நிரப்ப என்ன டிசைன் பயன்படுத்தினீர்களோ அதே டிசைனை விரல்களிலும் வரைந்துக் கொள்ளவும். அப்போது தான் பார்க்க ஒன்றோடு ஒன்று பொருத்தமாக இருக்கும்.
இப்பொழுது திருமண நேரங்களில் அழகாக போடக்கூடிய மெகந்தி டிசைன் தயார். இதுப்போன்ற டிசைனை உங்கள் கையின் நீள அகலத்துக்கு ஏற்றவாறு வரைந்து கொள்ளவும்.
கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், அறுசுவை நேயர்களுக்காக திருமணம் போன்ற விசேஷ தினங்களில் மணப்பெண்களுக்கு போடக்கூடிய இந்த மெகந்தி டிசைனை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் வனி! என் கல்யாணத்துக்கு என் பிரெண்ட் மஞ்சு போட்டு விட்டாள்... நான் யாருக்காவது போட்டுவிடனும் என்பது என் குறிக்கோள்.. யாராவது இ . வா கிடைப்பது என் அதிஷ்டம் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வனிதா ரொம்ப அழகாயிருக்கு.பொறுமையா போட்டிருக்கீங்க (பொறுமை,எருமையை விட பெருசுனு இப்பதான் தெரியுது:))

இலா உங்க பிரண்ட்டுக்கு கிடைச்ச மாதிரி உங்களுக்கும் சீக்கிரமே... ஒரு கை கிடைக்க நான் கடவுள்கிட்ட நான் வேண்டிக்கிறேன் கவலைப்படாடீங்க...:)

மெகந்தி கோன் வைத்து டிசைன் போட்டு விளக்கிய விதம் அருமை.மருதாணி சிவப்பும் அழகு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

lakshmi ravindran

very nice design, thanks for teaching

lakshmi ravindran

ஹாய் வனிதா அக்கா,

ரொம்ப அழகா இருக்கு வனிதா அக்கா. இது உங்க கையா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ரொம்ப அழகா & கலக்கலா இருக்கு வனி! பாராட்டுக்கள்! இன்னொன்று, ரொம்ப பொறுமை உங்களுக்கு! இவ்வளவு டிஸைனும் வரைந்து முடிக்க நீண்ட நேரம் ஆகியிருக்குமே?!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை தெளிவாக மாற்றி வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு என் முதல் நன்றி. :)

மிக்க நன்றி இலா.... சீக்கிரமே உங்க ஆசை நடக்கட்டும். ;) எனக்கு என் கல்யாணத்துக்கே போட்டு விட ஆளில்லை... நானே போட்டுகிட்டேன், அப்போ உங்களை தெரிஞ்சிருந்தா நானே கையை குடுத்திருப்பேன். இனி 60க்கு தான் கையை காட்ட முடியும்..... ;) ஹிஹிஹீ.

மிக்க நன்றி கவி.... சந்தடி சாக்கில் திட்டவும் செய்துட்டீங்களோ???? ;)

மிக்க நன்றி ஆசியா..... நீங்க கேட்ட மாதிரி மருதாணி சிவப்பும் சேர்த்து அனுப்பிட்டேன். :) எடுத்த 2 மணி நேரத்தில் இதுக்கு மேல் கலர் வரல. ஒரு நாள் காத்திருந்து எடுக்க என்னால முடியல. :(

மிக்க நன்றி லக்ஷ்மி ரவீந்த்ரன். :) போட்டு பாருங்கோ அவசியம்.

மிக்க நன்றி சுபா.... எனக்கு இப்போதைக்கு அழகா கை இருக்க யாரும் மாடலா கிடைக்கல.... ;) அதனால் என் கை தான். நீங்க சென்னையில் இருந்தா சொல்லுங்கோ.... :D

மிக்க நன்றி சுஸ்ரீ... பொறுமைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். ;) சில விஷயம் பிடிக்கும், பிடிச்சா நேரம் ஒதுக்குவேன். அவ்வளவு தான். இது மொத்தமா வைத்து முடிக்க 30 நிமிடம். சும்மா போட்டா இத்தனை நேரம் எடுக்காது, இப்போ போட்டுட்டு போட்டுட்டு படம் எடுக்கனுமே..... :( அதனால் சற்று கூடுதல் நேரம் தேவைபடுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா.. ஊருக்கு போயிட்டு கை கொஞ்சம் குண்டாயிட்டா மாதிரி தெரியுதே.. :)) அம்மாக்கு எங்கள் சார்பில் நன்றிகள்.. :)) அப்புறம் ஒரு சந்தேகம்.. அந்த மோதிரத்தை தான் கழட்டி வச்சுட்டு மருதாணி போடறது?? ஏன், இமா எடுத்துட்டு ஓடிடுவாங்கன்ர பயமா? :))

ரொம்ப அழகா இருக்கு... எனக்கு யாராவது போட்டுவிட்டா கூட உட்கார்ந்திருக்க முடியாது.. அவ்வளவு பொறுமை :)) இந்த கை வேலைகள் செய்யறவங்க எல்லாருமே உண்மையிலே பொறுமையின் சிகரங்கள் தான்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வாவ் வாவ் சூப்பர்!! இதுக்கு தான் அம்மா விட்டுக்கு போனோம்னு சொல்றது:)நானும் ஊருக்கு போனவுடன் கண்டிபா ட்ரை பண்றேன். உங்களுடைய டிப்ஸ் நன்றி
நானும் paper try பண்ணிட்டு தான் போடறேன் :)

இலா எனக்கு இங்க நிறைய கை கிடைத்திருக்கு ஆனா மருதாணி போட கையாலேயே அப்பிடுவங்கலோனு பயமா இருக்கு :)

கவி நன்றாக சிரித்தேன்:)))))

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் வனிதா உங்க மெஹந்தி டிசைன் சூப்பர். சிம்புள் அண்ட் பெஸ்ட், உங்க கைக்கு ரொம்ப அழகாவே இருக்கு. என்னோட ப்ரண்ட்டுக்கு அடுத்த மாதம் திருமணம் அவளுக்கு நான் இததான் சஜஸ் பண்ணியிருக்கேன். ரொம்ப நன்றி வனி. (அரட்டையில் உங்களுக்கு பதிவு இருக்கு பாருங்க.)

மிக்க நன்றி சந்தனா.... எங்கடா வம்பிழுக்கும் ஆளை எல்லாம் கொஞ்ச நாளா காணோம்'னு நினைச்சுகிட்டு இருந்தேன்.... நேற்று கவி வந்தாங்க.... இன்னைக்கு நீங்க.... ;) குண்டாயிட்டனோ???? குண்டானா சரி தான்.... ஆனா இதுக்கு முன்னாடி நீங்க என் கையை எப்போ பார்த்தீங்க??

ஸ்வர்ணா.... மிக்க நன்றி. யாரும் அப்பிடுவாங்கன்னு பயந்திருந்தா போட கத்துக்க முடியாதே..... ;) நாங்களும் தங்கை கையை கெஞ்சி கெஞ்சி பிடிச்சு போட்டு தான் கத்துகிட்டோம்.... வாங்காத திட்டா???? [நல்லா இருந்த கையை அசிங்க படுத்திடுச்சு பாருன்னு வீட்டுல எல்லார்ட்டையும் திட்டுவா....]

மிக்க நன்றி ஹரிகாயதிரி.... எங்கே ரொம்ப நாளா காணோம்??? வருகிறேன் அரட்டை பக்கம்... இன்னும் பார்க்கல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா அக்கா,

உங்க கை அழகா இருக்கு. நான் சென்னையில் தான் இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க? அரட்டையில் இரண்டு முறை கேடும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதான் இதிலேயே போட்டுவிட்டேன்.

திட்டாதீங்க ப்ளீஸ். நான் பாவம்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஆகா வனிதா... ஊருக்குப் போனதுதான் போனீங்கள்... மருதாணி மரமெல்லாம் மொட்டையடிச்சாச்சுப் போல.... சூப்பராக இருக்கு. கலக்குகிறீங்கள்.... அதுசரி இக்கைக்கு சொந்தக்காரர் உங்கள் தங்கைதானே???

இலா... யாமிருக்கப்பயமேன்?... நான் தான் ஒருவராவது அகப்படமாட்டாங்களா எனக்கு மருதாணி போட்டுவிட என, ரோட்டுரோட்டடத் தேடுகிறேன்.... நீங்க எதுக்கு ஆழைத் தேடுறீங்கள்... திருமணமானவர்களும் போட்டால் என்ன குறைஞ்சோ போவினம்?? எப்போ வாறீங்க.... கையுக்கு சம்போ போட்டுக் கழுவிப்போட்டு இருக்கட்டோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனிதா, மிகவும் அழகாக இருக்கின்றது.
வாணி

சுபா.... நீங்க கேட்டதை கவனித்திருக்க மாட்டேன். சென்னையில் தாம்பரம் அருகே இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?

மிக்க நன்றி அதிரா.... இலா'கு கையை காட்டுறதா சொன்னீங்களே, அதுக்கும் சேர்த்து தான். :) கூடவே படத்தில் இருக்கும் கைக்கு சொந்தகாரி நானே தான்.

மிக்க நன்றி வாணி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா அக்கா,

பக்கத்துல பக்கத்துல தான் இருக்கோம். நான் பெருங்களத்தூரில் தான் இருக்கேன். உங்களுக்கு விருப்பமும் நேரமும் இருந்தால் நாம் சந்திக்கலாமா? உங்களை எப்படி கான்டாக்ட் பன்னுவது?

உங்க மெயில் ஐடி எனக்கு தெரியாது. என் மெயில் ஐடி ஜிமெயில் முகவரி சோனியா, இலா அக்கா, இமா அக்கா, லஷ்மி, வாணி அக்கா, அம்முலு அக்காகிட்டலாம் இருக்கு. யாரிடமாவது வாங்கி ஒரு மெயில் அனுப்புங்க. இல்ல உங்க ஐடி யாரிடமிருந்து வாங்கிக்க?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அழகே அழகு :) மெஹந்தி, அதை விட உங்க கை :)))

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மிக்க நன்றி ஹேமா.... கை, ஹென்னா ரெண்டுக்கும் சேர்த்து தான்.... ;) ஹிஹிஹீ....

சுபா.... நீங்க சொல்லும் இடம் எங்க இருக்குன்னே எனக்கு தெரியாது.... ;) என் மெயில் ஐடி இலா, இமா இருவரிடமும் இருக்கு. சோனியா'ட கூட இருக்கு. வாங்கிகங்க. சரியோ???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மருதாணி டிசைன் ரொம்ப அழகா இருக்கு. என் கல்யாணத்துக்கும் நானேதான் போட்டுக்கிட்டேன் :)
தீபாவளிக்காக போட்டுக்க அழகான டிசைன் கிடைச்சாச்சு. தேன்க்ஸ்

இலா எனக்கு வலதுகையில் மெஹந்தி போட்டுவிட ஆள் வேணும் வர்றீங்களா? கையில் எலுமிச்சை ஜூஸ் தடவி காத்துக்கிட்டு இருக்கேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Hi vaani,

It's really superb.
i will try this for christmas.

with love
subathra

with love

மிக்க நன்றி கவிசிவா :) உங்களுக்கும் என்னை போல் போட ஆள்கிடைக்காம போயிட்டுதா.... ஹிஹிஹீ. அவசியம் போட்டு பாருங்க தீபாவளி'கு.

மிக்க நன்றி சுபத்ரா. :) அவசியம் போட்டு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta