கணக்கு, விடுகதை, புதிர் கேட்கலாம் வாங்க

தோழிகளே, நீண்ட நாட்களாக ஒருவரும் புதிர் கேட்கவில்லை.பழைய பதிவை கண்டுபிக்க முடியவில்லை. அது தான் புதிய பதிவை ஆரம்பித்துள்ளேன். வாங்கப்பா எல்லாரும் வாங்க வந்து விடுகதை கேளுங்க, புதிரை சொல்லுங்க, இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும், நிறைய தெரிந்து கொள்ளவும், முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த பதிவுக்கு வாங்க, விடுகதை கேளுங்க, தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க ரெடியா!

கீழ்மாடி ஒரு அறையில் 3 சுவிச் உள்ளது. அதில் ஒன்று மேல்மாடிக்குரியது.நீங்கள் சுவிச்சைப் போட்டு ஒரு முறை மட்டும் தான் மேலே போய் பார்த்து வரமுடியும்.அதில் எந்த சுவிச் மேல்மாடிக்குரியது என எப்படி அறிவீர்கள்?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நான் 3 சுவிச் போட்டுட்டு போவேன். கரெக்டா:))

விடுகதையோட வரேன்

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஸ்வர்ணா, நீங்கள் 3 சுவிச்சைப் போட்டாலும் அதற்குரியது எது வென்று தெரியாதே. நான் கேட்பது அதற்குரியது எதுவாக இருக்கும்?
விடுகதையோடு வாங்கோ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

anbe sivam
வணக்கம் mrs வத்சலா...
உங்கள் புதிருக்கான விடை இது... சரியாக வருகிறதா என்று பாருங்கள்.

1. முதல் ஸ்விட்ச் மட்டும் போட்டு விட்டு மேலே சென்று பார்க்க வேண்டும்.லைட் எரிந்தால் முதல் ஸ்விட்ச்தான் மேல்மாடிக்குரியது.
எரியாவிட்டால் மற்ற ஸ்விட்சுகளில் ஏதோ ஒன்று.
2.இரண்டாவது ஸ்விட்ச் போட்டு கீழ் அறையில் லைட் எரிந்தால், மூன்றாவது ஸ்விட்ச் மேல் மாடிக்குரியது.
இரண்டாவது போட்டு கீழ் அறையில் எரியாவிட்டால், இரண்டாவது ஸ்விட்ச் மேல் மாடிக்குரியது.
மூன்றாவது கீழ் அறைக்குரியது..

என்னால் இயன்ற அளவு யோசித்ததில் கிடைத்த விடை. தவறு என்றால் சொல்லுங்கள்.

கவிதாசிவக்குமார்..

anbe sivam

கவிதா, உங்கள் விடையையும் ஓரளவிற்கு சரி என எடுத்துக் கொள்ளலாம். எனது விடை கொஞ்சம் வித்தியாசம். நாளைக்கு சொல்கிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹாய் வத்சலா!உங்கள் கேள்விக்கு எனது பதில்
சரியா என்று சொல்லுகள்
முதலில் முதல் சுவிட்சை போட்டுவிட்டு (நன்பரை கீழெயே நிக்க சொல்லிவிட்டு ) மேலே போய் எந்த லைட் எரிகிறது என்று பார்த்துக்கொண்டு அவரை அடுத்த சுவிட்சை போட சொல்ல வேண்டும். அதையும் பார்த்து விட்டல் பின் கீழே வந்து மூண்றாவதையும் மார்க் பண்ணிவிடலாம்
நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

முதலில் கீழ்மாடிக்குரிய லைட்டை போட வேண்டும்.அடுத்து இன்னொரு சுச்சை போட்டு மேல் மாடி சென்று பார்த்து விட்டு வரவேணும்.அங்கு லைட் எரியாவிட்டல் மீதியுள்ளது ஒரு சுச் தானே அதைப்போட்டால் சரி.
மூளையில் உள்ள சுச்சை தட்டியதில் எனக்கு எட்டியது இம்புட்டுத்தேன்

ஹை நானும் இதைத்தான் நினைச்சேன், ஆனா வத்சலா மேடம் வந்து என்ன சொல்லபோறாங்களோ தெரியல.

சரி கேள்வி கேட்கலாமா? ஒரு குளம் இருக்கு அதுல ஒரு தவளை இருக்கு குளத்திற்கு மொத்தம் 9 படிகள் இருக்கு அந்த படியின் வழியாதான் தவளை வெளியில் வரனும் அதில் ஒரு கண்டிஷன் இருக்கு ஒரு நாளைக்கு 2 படி ஏறினால் ஒரு படி இறங்கி விடவேண்டும். அப்போ எத்தன நாட்கள்ள அது வெளியில் வந்திருக்கும்.

யோகராணி,லக்ஷ்மி,தாட்சாயணி உங்கள் விடை தவறு.

முதலில் ஒரு சுவிச்சைப் போட்டு 10 நிமிடங்கள் விடவும். பின்பு அதை நிற்பாட்டிவிட்டு அடுத்த சுவிச்சைப் போட்டுவிட்டு மேலே போய் பாருங்கள். நீங்கள் பார்க்கும் போது அது எரிந்தால் அது தான் அதற்குரியது இல்லை என்றால் பல்ப்பை தொட்டுப் பாருங்கள் அது சூடாக இருந்தால் முதலாவது அதற்குரியது இல்லை என்றால் 3வது தான் அதற்குரிய சுவிச்சாகும்.
தாட்சாயணி உங்கள் புதிருக் யோசித்துவிட்டு வருகிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஒரு நாளைக்கு 2 படி தான் ஏறவேண்டும் என்றால் 9 நாட்கள் ஆகும் இல்லை என்றால் ஒரே நாள்ல ஏறிடும். corect ஆஆஆஆஅ

முதல்ல வந்து தப்பான பதில் சொல்லி ஒதிங்கிகர ஆள் நானா தான் இருக்கும்:))

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மேலும் சில பதிவுகள்