ivf சந்தேகங்கள்

இந்தியாவிற்கு சென்று ivf செய்ய இருக்கிறேன்.கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லி உதவுவீர்களா?

இந்தியாவுக்கு சென்று ivf செய்ய இருக்கிறேன். இப்போ எனக்குள்ள குழப்பம் மாதம் 1ஆம் திகதி பீரியட் ஆகும்.அதை வைத்து அடுத்தமாசம் 1ஆம் திகதி இந்தியாவில் நிக்கக்கூடியதாக டிக்கட் புக் பண்ணியாச்சு.இப்போ எனக்கு பீரியட் டேட் குழம்பி 17 ஆம் திகதி இன்று பீரியட் ஆகிவிட்டது.
டிக்கட்டை மாற்ற முடியாமல் போட்டுவிட்டேன்.என் கணவர் அவ்வளவு நாள் அங்கு வந்து சும்மா நிற்க பொருளாதார வசதி இடம் கொடுக்காது.
இங்கு ட்றீட்மண்ட் வேண்டாம் என பழைய ரிப்போட்ஸ் ஐ வாங்கியதில் டாக்டர் கோவித்துக்கொண்டு விட்டார்.டாக்டரிடமும் கேட்க முடியாது.எனக்கு உங்கள் பதில் தேவை.

என் கேள்வி
மீண்டும் 1 ஆம் திகதி பீரியட் ஆகுவதற்கு நான் டாப்ளட்ஸ் எடுக்கலாமா?
என்னிடம் டாப்ளட்ஸ் உள்ளது எடுத்து 6 வது நாள் பீரியட் ஆகும்.
17 ஆம் திகதி பீரியட் ஆகிய பின் மீண்டும் 1ஆம் திகதி பீரியட் வரவழைப்பதில் ஏதும் பிரச்சனை உள்ளதா?
ஆனால் இப்படி ivf செய்யும் டாக்டர்கள் வரவழைக்கிறார்கள் என்று அறிந்தேன்.இது எவ்வளவுக்கு உண்மை.
எனக்கு பட படவென்று இருக்கு.யாராவது பதில் தர முடியுமா?

பதறாமல் மருத்தவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ளுங்கள்.இந்தியாவில் IVF செய்ய போகும் மருத்தவர் இடம் கேளுங்கள்

சுப்புலக்ஷ்மி! சொல்றதை கேளுங்க....
இப்படி டிரீட்மென்ட் எடுக்கும் போது நீங்களே டாப்ளட் எடுப்பது நல்லதல்ல... ஒவ்வொரு கருமுட்டையும் முழுவளர்ச்சி அடைய 15 நாள் தேவை ( 30 நாள் மாதவிலக்கு சுழற்சியில்) இப்படி ப்ரொவேரா எடுப்பதால் ரெண்டு விஷயங்கள நடக்கலாம்.. நீங்க பிரெக்னென்ட் ஆகலாம்... ஆனா நீங்க எதிர்பார்கும் நேரத்தில பீரியட் வராது.. இதனால் மனகுழப்பம் தான்... ஐவிஎஃப் செய்யும் மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் தான் செய்வார்கள்... தட புடா என்று நம் உடலை பரிசோதனை செய்யாமல் பரிந்துரைக்க மாட்டார்கள்.. இந்த மாதிரி உங்க சிஸ்டத்தை குழப்பாதீங்கோ தங்கச்சி... இங்க உள்ள மருத்துவரிடம் கேட்பதை விட அங்க நீங்க டிரீட்மென்ட் எடுக்க போகும் டாக்டரிடம் கேளுங்க அவங்க உங்களுக்கு கட்டாயம் ஆப்ஷன் தருவார்கள்.. என் ஆன்டி ( இந்தியாவில் கைனகாலஜிஸ்ட்) அவர்கள் சொன்னது ... மொதல்ல இந்த படபடப்பு எல்லாம் நிறுத்துங்க... ரிலாக்ஸ் .... எல்லாம் நல்லபடியா நடக்கும்...
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ட்றீட்மண்ட் தொடங்கு முன் எங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிக்க மாட்டோம் என்று அங்குள்ல ஹொஸ்பிட்டலில் சொன்னார்கள்.ஆனால் பீரியட் ஆகி 3 வது நாள்தான் எல்லா டெஸ்ட்டும் தாங்கள் எடுப்பதாக சொல்லியதால்தான் நான் டிக்கட் புக் செய்தேன்.ஒழுங்காக இருந்த பீரியட் இந்த மாதம் இப்படியாகும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.அப்படி என்றால் 15 முடிய டாப்ளட்ஸ் எடுக்கலாமா?இல்லை அதுவும் நல்லதில்லையா?

15 முடிய டாப்ளட்ஸ் எடுப்பதும் நல்லதில்லை என்பது என் கருத்து. பொதுவாக ட்றீட்மண்ட் உடனே ஆரம்பிக்காமல் ஒன்று அல்லது இரண்டு மாதம் IUI முயற்சி செய்து பின்பு தான் IVF செய்ய ஆலோசனை தருகிறார்கள்.ஒரு சில ஹாஸ்பிடலில் சக்சஷ் ரேட் அதிகம் பண்ண விந்தனுவை மாற்றி வைப்பதாக கேள்வி பட்டேன் ஆகையால் நன்கு விசாரித்து பின்பு ட்றீட்மண்ட் ஆரம்பிகவும்.உங்கள் ட்றீட்மண்ட் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்துகள்.

நன்றி.ஆனாலும் ட்றீட்மண்ட் ல் எனக்கு எந்தக்குழப்பமும் இல்லை.படிப்படியாகத்தான் போய்க்கொண்டு இருக்கிரேன்.இங்கு எனக்கு ivf சரிவரவில்லை.அதற்காகத்தான் இந்தியா செல்கிரேன்.

நீங்கள் சொல்வதை நான் நிரைய பேரிடம் அறிந்திருக்கிரேன்.என் நண்பியி உறவினர் ஒருவர் 15 வருடத்தின் பின் இந்தியா போய் ivf செய்து குழந்தை பெற்றெடுத்து மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் குழந்தைகள் தங்களின் உருவத்தில் இருந்து முற்ரிலும் மாறுபட்டதாக இருந்ததால் சந்தேகப்பட்டு செக் பண்ணியதில் தங்கள் சந்தோசத்தை குழப்பிக்கொண்டார்கள்.

நம்மவர்கள் பரீட்சித்து பார்க்க மாட்டார்கள் என்ற துணிவில் செய்கிறார்களோ என்னமோ.

நினைக்க பயமாகத்தான் இருக்கிரது.

ivf என்ரால் என்ன எனக்கும் 2years marriage ஆகி so டாக்டர் இன்னும் 6மாசம் பார்ப்போம் இல்லைன்னா ivf பண்ணனும் என்ரு சொன்னார்கள் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

iui செய்வதற்கு முதல் நாள் சேர்ந்திருக்கலாமா
அப்படி சேர்ந்திருக்கலாம் என்று யாருக்காவது டாக்டர் சொல்லி இருக்கிறாரா

iui செய்வதற்கு முதல் நாள் சேரகூடாது.iui முடிந்த பின் சேரலாம்.

t.u உஷா காவேரி.ஸ்பேம் கவுண்ட் நார்மலா எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலுமா

சாட்டர்டே தான் எனக்கு 15 வது நாள்iui kku சரியான நாள் .டாக்டர் ஆபீஸ் குளோஸ் எங்கிறதால மண்டே செய்றதா சொல்லி இருக்கிறார்.
இது சரிப்பட்டு வருமா டாக்டர் செய்வது சரியா

மேலும் சில பதிவுகள்