அமெரிக்கா வாழ் தோழிகளே உதவி ப்ளீஸ் (anti septic liqid )

இந்தியன் கடைகளில் anti septic liqid dettol or savlon கிடைக்கல. அதுக்கு பதிலா என்ன anti septic liquid இங்க வாங்கறது தெரிஞ்சவங்க எனக்கு சொல்லுங்க மிக்க உதவியாக இருக்கும். எனக்கு டெய்லி டேட்டோல் உபயோகிக்க வேணும்.

I think you can get them in Indian stores. If you tell me what purpose you want to use dettol, I can suggest an alternate.

Hi NewMom, தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. இந்தியன் கடைகளில் கிடைக்கவில்லை. குழந்தையின் துணி அலசி விட்டு டெட்டோல் போடவேண்டும் அதற்க்கு தான் கேட்க்கிறேன். இதற்க்கு வேறு எதாவது alternate இருந்தால் சொல்லுங்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அனாமிகா, நலமா? நான் இது வரை டெட்டால் பாவித்தது இல்லை. நீங்கள் பாவிப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கா?.

நான் குழந்தைகளின் துணிகளை Dreft(available in walmart, babies r us) என்ற liquid சோப் போட்டு, பிறகு clorox விட்டு வாஷிங் மெஷினில் தோய்ப்பேன்.
வாணி

சைனீஸ் கடைகளில் கிடைக்கும்.

வாணி நான் நலம் நீங்களும் குழந்தைகளும் நலமா? மிக்க நன்றி வாணி தங்கள் பதிலுக்கு. நான் "tide liqid soap" உபயோகித்து தோய்த்து விட்டு டேட்டோல் போட்டு அலசி விடுவேன். குழந்தை துணியை வாஷிங் மெஷின் இல் போடுவது மிகவும் குறைவு.டேட்டோல் போடுவது பாக்டீரியா வராமல் இருக்க அப்படின்னு நினைக்கிறேன் ஊரில் இருந்தே அப்படி செய்து பழக்கம். அப்பரம் நீங்க எதற்க்காக "clorox" துணிக்கு போடுகிறீர்கள்?? துணி கெட்டு போகாதா??

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

சுப்புலக்ஷ்மி நலமா? தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி கடந்த முறை சைனீஸ் கடையில் தான் வாங்கினேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த கடையில் வரவில்லை.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்