திருமணத்தின் போது மணப்பெண்களுக்கு போடக்கூடிய மெகந்தி டிசைன் - 2

தேதி: September 23, 2009

4
Average: 3.7 (15 votes)

 

மெகந்தி கோன்

 

கையின் முன்பக்கத்தின் மணிக்கட்டுப் பகுதியில் ஒரு அரை வட்டம் வரைந்து அதன் உள்ளே சின்ன சின்ன கட்டங்கள் வரைந்து கொள்ளவும். பிறகு சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் ஒரு அரை வட்டம் வரையவும். அதிலிருந்து அரை இன்ச் அளவு விட்டு இன்னும் ஒரு அரை வட்டத்தை வரைந்து அதன் உள்பகுதியில் கோடுகள் போட்டு நிரப்பவும்.
அதன் மேலே சிறிது இடைவெளி விட்டு மீண்டும் ஒரு அரைவட்டத்தை வரைந்து அதன் மேல் முக்கோணம் போன்ற டிசைனை வட்டத்தை சுற்றி வரிசையாக வரும்படி வரைந்துக் கொள்ளவும். பிறகு ஒவ்வொரு முக்கோணத்தின் நடுவிலும் முத்துகள் போன்ற டிசைனை வரையவும்.
வரைந்த முத்துக்களுக்கு மேல் மேலும் ஒரு வட்டத்தை வரைந்து அதன் மேல் மிகச்சிறிய வட்டங்களை சற்று இடைவெளி விட்டு வருமாறு வரைந்துக் கொள்ளவும். அந்த சிறிய வட்டத்தின் மேல் பகுதியை சுற்றிலும் வளைவு வளைவுவாக வரையவும். மீண்டும் அரை இன்ச் அளவு இடைவெளி விட்டு வட்டத்தை வரைந்து கொண்டு வட்டத்தின் உள்பகுதியில் கோடுகள் போட்டு நிரப்பவும்.
இதே டிசைனை கட்டைவிரலுக்கும், சுண்டு விரலுக்கும் இடைப்பட்ட பகுதி வரும் வரைக்கும் தொடர்ந்து இதேப் போல் வரைந்து கொண்டே வரவும்.
பிறகு உள்ளங்கையிலிருக்கும் சிறு இடைவெளியை நிரப்புவதற்கு படத்தில் உள்ளது போல் ஒரு பூ டிசைனை வரையவும்.
கையில் வரைந்த அரை வட்டத்துக்கு பொருந்துமாறு விரல்களிலும் இதேப் போல் அரை வட்டம் கொண்ட டிசைனை படத்தில் காட்டியுள்ளபடி வரைந்துக் கொள்ளவும்.
இப்பொழுது கையின் அரைவட்ட முடிவில் சில இலைகள் வரைந்து அதன் உள்ளே உங்கள் விருப்பம் போல் டிசைனை வரைந்துக் கொள்ளவும். பிறகு ஒவ்வொரு இலைகளின் நடுவிலும் தலைக்கீழான இலை போன்ற டிசைனை வரைந்து அதன் உள்ளே கோடுகள் போட்டு நிரப்பவும். (கை முழுக்க கொண்டு வருவதற்குதான் இது போன்ற டிசைன். உங்கள் கை சிறியதாக இருந்தால் இந்த டிசைன் வரையாமல் விட்டுவிடலாம்).
கடைசியாக படத்திலிருக்கும் பூ டிசைனை வரைந்து முடிக்கவும். அதன் உள்ளே கோடுகள் அல்லது கட்டங்கள் வரைந்து நிரப்பி விடவும்.
இப்பொழுது முழங்கை வரைக்கும் வரையப்பட்டுள்ள மருதாணி டிசைன் ரெடி.
அரை வட்டங்கள் கொண்டே நிரப்புவதால் டிசைன் வரைய வராது என்று எண்ணுப்பவர்கள் கூட இது போன்று சுலபமாக வரைந்து விடலாம்.
கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், திருமணத்தின் போது மணப்பெண்களுக்கு போடக்கூடிய மற்றொரு சுலபமான இந்த மெகந்தி டிசைனை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் வனிதா,

உங்கள் டிசைன் சூப்பர். உங்கள் விளக்கம் ஸ்டெப் ஸ்டெபாக போடுவதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

அன்புடன்
மகேஸ்வரி

கலக்குறீங்க வனீ. :)

நிச்சயமா என்னோட வெட்டிங்-க்கு நீங்க தான் மருதாணி போட்டு விடுறீங்க.
இப்பவே புக் பண்ணி வச்சிருக்கேன். வேற புக்கிங்ஸ் எடுத்துராதீங்க. :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா அம்மா வெட்டிங்கு சொன்னிங்கலா அது வெட்டிங் டேக்கா, இல்ல இனி வர வெட்டிங்கா...

வனிதா சூப்ப்ப்ப்ப்ர்ர்ர் கலக்குரிங்க...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

வனிதா அக்கா இந்த டிசைனும் சூப்பர். பார்க்க ரொம்ப அழகா இருக்கு. எளிமையாகவும் இருக்கு. எனக்கும் மெகந்தி போட ஆசை வந்திடுச்சு.

மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் டிசைன்கள். வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் வனிதாக்கா சூப்பர்...............ரொம்ப அழகா பொறுமையா போட்டு படம் எடுத்து அனுப்பிருக்கீங்க.அது நல்லாவும் சிவந்திருக்கு.எனக்கும் கை முழுக்க மருதாணி போட்டுக்க ரொம்ப பிடிக்கும்.கல்யாணத்துக்கு முன்னாடி நானும் இதே மாதிரிதான் மருதாணி போட்டுட்டே இருப்பேன்.இப்பொதான் டைமே இல்லை போட்டுகறதுக்கு.உங்க படங்கள் பார்க்கும் போது எனக்கு அதெல்லாம்தான் நினைவுக்கு வருது....ஓகே இனி நானும் போட ஆரம்பிக்கனும்.
இன்னும் நிறைய டிசைன்ஸ் அனுப்புங்க
அன்புடன்
கலா.

Kalai

ஹாய் வனிதா,எப்படி இருக்கீங்க?அப்பா அசதிட்டீங்க.என்னமா போட்டு இருக்கீங்க.ரொம்ப பொருமை வேணும்.சும்மா நெளிவு,சுலிவு இல்லாம போட்டு இருக்கீங்க.அதுக்கு என் முதல் பாராட்டு.அற்புதமான இந்த படைப்பிற்க்கு என் வா....ழ்த்துக்கள் பல,பல...இன்னும் நிறைய பாராட்டலாம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அடிக்கடி மெஹந்தி படம் போட்டு மலரும் நினைவுகளை கிளப்புறீங்களே வனிதா.. :) வர வர எனக்கு மெஹந்தியை விடவும், உங்கள் கை தான் பிடிச்சுருக்கு :D

நான் மட்டும் தான் தன் கல்யாணத்துக்கு தானே போட்ட லூசுனு நினைச்சேன், இன்னும் ரெண்டு பேரு இருக்கீங்களா ஆட்டத்துல.. நல்லது, இப்போ தான் நிம்மதி ;-)

ஆமா, ஒரு தடவை போட்டு அடுத்த தடவை போட 2 வாரம் ஆவது ஆக வேண்டாமா முழுசா அழிய? எப்படி இப்படி தொடர்ந்து போடறீங்க, அழியறதுக்கும் டெக்னிக் இருக்கா என்ன? அடுத்த தடவை ரெண்டு கைலயும் போட்டு ஃபோட்டோ எடுங்க.. அது இன்னும் அழகா தூக்கும்..!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

வனிதா அக்கா,

எனக்கு ரெண்டு சந்தேகங்கள் இருக்கு.

1) மெஹந்தி குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் இருக்கனும்?

2) அதை போட்டவுடன் சக்கரை தண்ணி, அல்லது லெமன் ஜுஸ் புழிவார்கள். அது எதற்கு? அழிக்கும் போது தேங்காய் எண்ணெய் தடுவனுமா? தண்ணியில கை கழுவ கூடாதா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சுபா நலமா?
மெஹந்தி பற்றி தெரியாது நலம் விசாரிக்க வந்தேன்.

சுபத்ரா

with love

with love

சுபா நலமா?
மெஹந்தி பற்றி தெரியாது நலம் விசாரிக்க வந்தேன்.

சுபத்ரா

with love

with love

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு என் நன்றிகள்.

மிக்க நன்றி மகேஸ்வரி. போட்டு பாருங்க நீங்களும். :)

இமா.... என்ன இப்படி கலங்க வெச்சுட்டீங்க.... இனிம தான் கல்யாணமா??? அத்தனை சின்ன பெண்ணையா எல்லாரும் அம்மா'னு கூப்பிடுறாங்க???!!! கவலைய விடுங்க... உங்களுக்கு போடுறதை விட எனக்கு வேறு என்ன வேலை??? :)

மிக்க நன்றி பிரபா.... :)

மிக்க நன்றி சுபா.... ஆசை வந்துடுச்சில்ல... சீக்கிரம் போடுங்கோ. ;)

மிக்க நன்றி கலா.... எனக்கும் கை நிறைய எப்பவும் மருதாணி இருந்தா ரொம்ப பிடிக்கும். :)

மிக்க நன்றி அப்சரா..... உங்க பதிவை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. :)

மிக்க நன்றி ஹேமா.... இது மாதிரி கல்யாணத்துக்கு நாமே போட்டுக்குறதும் ஒரு குஷி தான்.... வீட்டில் வெட்டியா வேலை இல்லாம உட்கார வெச்சுடுவாங்களே.... ;) ஹென்னா சீக்கிரம் போயிடும் ஹேமா.... நான் ரெடிமேட் கோன் தான் பயன்படுத்தறேன்.... 1 வாரம் தான் இருக்கும். இரண்டு கையிலும் போட தான் எனக்கும் ஆசை, ஒரு கைல பெரிய பெரிய சாமி கயிறா கட்டி இருக்கேன்... அதான் அதில் போடுவதில்லை. ;)

சுபா.... உங்க சந்தேகத்துக்கு இதோ பதில்:

1. எலுமிச்சை, சர்க்கரை தண்ணி எல்லாம் மெல்லிய கோடா போடும் போது உடனே காய்ந்து கொட்டிபோகும் மருதாணி. அப்படி கொட்டாம கையில் ஒட்டிகிட்டு இருக்க தான். நல்ல தரமான மருதாணி பயன்படுத்துனீங்கன்னா இதெல்லாம் தேவை இல்லை.

2. போட்டு குறைந்த பட்சம்,அதிகபட்ச நேரம் எல்லாம் பார்க்காதிங்க. ரெடிமேட் கோன் என்றால் 1 மணி நேரம் போதுமானது. சில கோனில் அவர்களே கொடுத்திருப்பார்கள் இத்தனை மணி நேரத்தில் எடுத்து விட வேண்டும் என்று. அதை சரியா செய்யுங்க.காரணம் அந்த ரெடிமேட் கோன்களில் கெமிக்கல்கள் இருக்கும். அது அதிக நேரம் வைத்திருப்பது நல்லதல்ல. நீங்களே செய்யும் கோன் என்றால் பிரெச்சனை இல்லை... 4 மணி நேரம் வைத்திருங்கள், நல்ல நிறம் தரும்.

3. தண்ணீரில் கழுவினால் அத்தனை நல்ல நிறம் வராது. எடுத்துவிட்டு தேங்காய் எண்ணை தடவுவதால் நிறமும் நன்றாக இருக்கும், அதே சமயம் ஸ்கின் ட்ரை ஆகவும் இருக்காது.

இன்னும் சில...

4. மருதாணி வைக்கும்போது நீங்க தயாரிக்கும் கோன் என்றால் முதலில் மருதாணியை நல்லா மெல்லிய துணியில் சலிச்சு எடுங்க. அப்போ போடும் போது அடைக்காம இருக்கும் கோன்.

5. தண்ணீர் விட்டு இழைக்காம வெறும் வடிகட்டிய எலுமிச்சை சாறு கலந்து கோன் செய்யுங்க. நல்ல நிறம் வரும். டீ டிக்காஷன் அது இதுன்னு எதுவும் தேவை இல்லை.

6.உங்களுக்கு சளி தொந்தரவு ஏதும் இருந்தா மருதாணி போடும் முன் கையில் யுகலிப்டஸ் ஆயில் தடவுங்க. இந்த குளிர்ச்சி அதிகம் பாதிக்காம இருக்கும். மற்றபடி அதனால் நிறம் கூடும் என்றெல்லாம் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,

ரெடிமேட் கோன், எந்த ப்ரான்ட் நல்லது?
சிலது மிகவும் நீர்த்ததாக இருக்கிறது. சிறிது நேரத்தில் கையெல்லாம் பரவி டிசைன் கலைந்து விடுகிறது.

ஒரு முறை பயன்படுத்திய கோன் அழகாக மிக மெல்லிய கோடுகள் வைக்கக் கூடியதாக இருந்தது. சட்டென்று காய்ந்து விட்டது. ஆனால் கழுவிப் பார்த்தால் பற்றியே இருக்கவில்லை.

உதவ முடியுமா?

இமா

‍- இமா க்றிஸ்

இமா கோன் அங்கு உங்களுக்கு எந்த பிராண்டு கிடைக்கும்'னு எனக்கு தெரியலயே.... இங்கு இந்தியாவில் singh என்று ஒரு பிராண்டு கிடைக்கும். அது மிகவும் நன்றாக இருக்கும். மற்றது சில நேரத்தில் சுதப்பும். இது கோன் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒன்று போல் அழகாக வரும். கிடைக்குதா பாருங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா.
தேடிப் பார்க்கிறேன்.
என்னிடம் உள்ளவை எல்லாமே வேறு ப்ரான்ட்கள் தான்.

இமா

‍- இமா க்றிஸ்

இந்த செய்முறையை பார்த்து திருமதி. கவிசிவா அவர்கள் போட்டு கொண்ட மெஹந்தி டிசைனின் படம்

<img src="files/pictures/mehendii-kavisiva.jpg" alt="picture" />

அழகாகப் போட்டிருக்கிறீர்கள் கவி. பாராட்டுக்கள். :)
வனி உதவியால், முகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் எல்லாரோட 'கை வண்ண'மும் அறுசுவைல பார்க்க முடியுது. நன்றி வனி. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இவ்வளவு விரைவில் படத்தை இணைத்ததற்கு மிகவும் நன்றி அட்மின். இன்று காலையில்தான் அனுப்பினேன்.உடனே வந்து விட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி!!!

வனிதா உங்கள் டிசைனை பார்த்து போட்டு எல்லோரிடமும் பாராட்டு கிடைத்தது. தீபாவளிக்கு முன் போட்டு விட சொல்லி ரெண்டு பேர் கேட்டிருக்காங்க. கடை விரிச்சுடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் :). இந்த பாராட்டுகளுக்கு காரணம் நீங்கள்தான். நன்றி வனிதா!

இமா அம்மா உங்களிடம் பாராட்டு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி! உண்மைதான் வனிதாவின் புண்ணியத்தில் நிறையபேர்களின் கையை மட்டுமாவது பார்க்க முடிகிறது :).
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

படத்தை இணைத்தமைக்கு மிக்க நன்றி அட்மின்.

இமா.... உண்மை தான் ஹென்னாவை காரணம் காட்டி நிறைய பேர் கையை பார்க்க முடியுது. :) உங்க கையை சேர்த்து தான் சொல்றேன்.

கவிசிவா.... போட்டு படம் எடுத்து அனுப்பினதுக்கு ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப அழகா போட்டிருக்கீங்க. உங்க கைக்கு இந்த டிசைன் ரொம்ப பொறுத்தம். உங்க கை படத்தை பார்த்ததும் ஒரு நாள் நானே இந்த கையில் ஹென்னா போடனும்'னு தோனுது. மருதாணி'கு பொருத்தமான கைகள். மிக்க நன்றி கவிசிவா. கடை போடுடலாம்..... ;) முடிஞ்சா இன்னும் 2 சுலபமான டிசைன் அனுப்பறேன், உதவிக்கு..... ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
என் கைதான் ஏற்கனவே பூசணிக்காய், அட்டை வெட்டுறது என்று வந்தாச்சே.
புதுசா வர்ற கைகள் சொல்றேன், இன்னும் எத்தனை கைகள் வருது என்று பார்க்கலாம். :)
இமா

‍- இமா க்றிஸ்

வனிதா அய்யோ எனக்கு சந்தோஷம் தாங்கல போங்க என்னோட கை மருதாணிக்கு பொருத்தமான கை னு சொல்லிட்டீங்களே! வாங்க வந்து எனக்கு மருதாணி போட்டு விடுங்க. ரெடியா காத்துக்கிட்டு இருக்கேன். ஒரு தடவையாவது ஒரு எக்ஸ்பர்ட் கையால போட்டுக்கணும்னு ஆசை!
கண்டிப்பா புதிய டிசைன் அனுப்புங்க. எனக்கு நல்லா காப்பி அடிக்கத்தான் தெரியும். எனக்கு கற்பனை வளம்(சுய புத்திங்கறத நாகரீகமா சொல்லிக்கறோம் அவ்வளவுதான் ஹி ஹி) கம்மி (கிடையவே கிடையாதுன்னு உண்மையெல்லாம் உரக்க சொல்லப்படாது ஆங்)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனிதா மேடம்....
எனக்கு அடிக்கடி மெஹந்தி போடுவது வழக்கம்.....
அடுத்தவர்கள் அழகாக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு போடுவேன்.....
இன்று உங்களுடைய மெஹந்தி டிசைனை கையில் போட்டு பார்த்து நானே வியந்தேன்...
மற்றவர்கள் அதை அழகின் உருவமாக இருக்கிறது என்று புகழ்ந்தார்கள்...
மட்டிலா மகிழ்ச்சியடைந்தேன்.........
உங்கள் சேவைக்கு நன்றி......!

இதே போல் பல டிசைன்களை எதிர்பார்த்து.....
யாழினி

மிக்க நன்றி யாழினி... உங்க பதிவை பார்க்க எனக்கு மகிழ்ச்சி தாங்கல. :) அத்தனை சந்தோஷமா இருக்கு. முடிஞ்சா நீங்க போட்டதையும் படம் எடுத்து அனுப்புங்க.... நாங்களும் பார்த்து இன்னும் அதிகமா சந்தோஷ படுவோம். ரொம்ப நன்றி தோழி. :) (மேடம் எல்லாம் வேண்டாம்.... ;) எனக்கு இன்னும் அத்தனை வயசு ஆகலை... ஹிஹிஹீ.)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்களோட எல்லா மெகந்தி டிசைனும் சூப்பர். என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் அவ கையில போட்டுவிடனும். இந்த மெகந்தி டிசைனதான் செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன்.

வர்ஷினி... மிக்க நன்றி. போட்டு படம் எடுத்து அறுசுவைக்கு அனுப்ப மறந்துடாதீங்க. :) காத்திருக்கேன் பார்க்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta