முருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி

தேதி: September 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

முருங்கைக்காய் - 250 கிராம்
பலாக்கொட்டை - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 30 கிராம்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5 பற்கள்
கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம் புளி - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 அல்லது 2 நெட்டுக்கள்
நல்லெண்ணெய் அல்லது ஒலிவ் ஒயில் - 4 மேசைக்கரண்டி


 

மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி தோல் நீக்கி வைக்கவும். முருங்கைக்காயை 2 அங்குலத்துண்டாக நறுக்கி பாதியாக்கவும். பலாக்கொட்டையை பாதியாக நறுக்கி தோல் நீக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பச்சைமிளகாயுடன் முருங்கைக்காயைப் போட்டு சிறிது வதக்கவும்.
பலாக்கொட்டையை சேர்த்து உப்பு போட்டு காய்கறிகளுக்கு மேல் நிற்கக்கூடிய அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி குறைந்த தீயில் வைத்து நன்கு வேக விடவும்.
பாதியளவிற்கு வெந்ததும் கறித்தூள் சேர்த்து மீண்டும் மூடி வைத்து வேக விடவும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும் கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
இறக்கி வைத்த பின்னர் அதில் எலுமிச்சம் புளி சேர்க்கவும்.
சுவையான முருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி ரெடி. இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் அதிரா! முருக்கங்காய் பலாக்கொட்டை பிரட்டல்கறி நல்ல அழகாக செய்து
காட்டியுள்ளீர்கள். முருங்கக்காய் பலாக்கொட்டை சேர்வை நல்ல ருசியை கொடுக்கும். நானும் இதே முறைப்படிதான் செய்வேன். நான் எலுமிச்சம்புளிக்கு பதில்
பழப்புளி பாவிப்பேன். நல்ல ரேசப்பி தந்தமைக்கு நன்றி. உங்கள் முறைப்படி செய்து பார்த்திட வேண்டியதுதான். அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நான் இக் கறியைச் சொன்னேன்.... ஓடிவந்தவர்கள் முறைக்காதீங்கோ.

ராணி மிக்க நன்றி. எனக்கு முருங்கக்காயைவிட பலக்கொட்டை சரியான விருப்பம், ஆனால் இங்கு வாங்க முடியாது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இருக்கே. ஆமாம் பலாகொட்டை அங்கு கிடைக்குதா? அப்படியே இங்கு கொஞ்சம் பார்சல் பன்னுங்கோ. எனக்கு பலாக்கொட்டையில் நிறய்ய அயிட்டம்ஸ் செய்வேன் ரொம்ப பிடிக்கும் இங்கு நோ சான்ஸ்.
கிடைத்தால் அவசியம் செய்வேன், நல்ல காம்பினேஷன்ஸ்.

விஜி மிக்க நன்றி. எல்லோருக்குமே இந்தப் பலாக்கொட்டைதான் பிரச்சனையே. இங்கும் எங்களுக்குக் கிடைக்காது, ஆனால் லண்டனில் கிடைக்காதது எதுவுமில்லை. அங்குபோனால் வாங்கிவரலாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

விஜி! இங்க ஃப்ரோசன் செக்ஷனில் இருக்கு... பிராண்ட் நேம் சம்திங் டிலைட்... பாருங்க அடுத்த முறை படேல் ப்ரதர்ஸ்ல இருக்கு

அதிரா !!! நான் இதில் பருப்பு போட்டு சாம்பார் மாதிரி வைப்பேன்.. எப்பவும் மலரும் நினைவுதான் :))
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,
நீங்க சொன்ன‌ ப்ராண்ட், 'டெய்லி டிலைட்'தானே? இங்க நிறைய பார்த்திருக்கேன், இந்த ப்ராண்டில் தேங்காய் பூ, மரவள்ளிக்கிழங்கு, சின்ன வெங்காயம் எல்லாம் வாங்கி யூஸ் பண்ணியிருக்கேன், ஆனால் பலாக்கொட்டை பார்த்ததா ஞாபகம் இல்லை. அடுத்தமுறை இங்க இருக்கும் 'பட்டேல் பிரதர்ஸ்'ல போய் பார்க்கறேன். எனக்கும் பலாக்கொட்டை பொரியல்/கறி ரொம்ப பிடிக்கும். (அம்மா, கொஞ்சம் பெருஞ்சீரகம், பூண்டு எல்லாம் அரைத்த விழுது சேர்த்து செய்வாங்க... சூப்பரா இருக்கும்!) ஆஹா... எனக்கும் ஒரே மலரும் நினைவுகளா இருக்கு இலா! :)

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அதிரா,
உங்க கறி, ரொம்ப அருமையா இருக்கு. எனக்கும் ரொம்ப இஷ்டம் இந்த பலாக்கொட்டை! இங்க ப்ரெஷா கிடைப்பதில்லை. ப்ரோசன் பலாக்கொட்டை கிடைத்ததும் செய்து பார்த்திடறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அதிராவோடு :(((((((((
கிடைக்காததை எல்லாம் எழுதி ஏங்க வைக்கிறீர்கள்.
இமா

‍- இமா க்றிஸ்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. யோகராணி அவர்கள் தயாரித்த முருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறியின் படம்

<img src="files/pictures/aa329.jpg" alt="picture" />

அட்மின் அவர்களுக்கு வணக்கம், இவ்வளவு விரைவாக இணைப்பிர்கள்
என நான் எதிபார்க்கவில்லை. பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோசம்.
உங்களுக்கு எனது இதய பூர்வமான நன்றியை தெருவித்துக்கொள்கின்றேன்.
நன்றி என்றென்றும் அன்புடன் யோகராணி

அதிராங்கோ௧! உங்கள் முறைப்படி சமைத்த கறி. நல்ல ரேஸ்ட் நன்றி
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.