அருண் மொழிகள்

அனைவர்க்கும் வணக்கம் வந்தனம்...

எல்லோருக்கும் பண்டிகை கால வாழ்த்துக்கள்....

அனைவரும் எல்லாம் பெற்று நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.... (யாரையும் விடுபட்டு விட கூடாது என எண்ணி அனைவரும் என்று சொல்லிட்டேன்...)

இத்தனை நாளா காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்து இருந்தேன்... இருந்தாலும் இப்போ ஆச்சு வந்து விட்டேனே... அது வரைக்கும் சரி தான்...

தினசரி அதே வேலை.. அதே கம்ப்யூட்டர்.. அதே அம்மா அப்பா... அதே பல வித சாப்பாடு... அதே கடவுள்... அதே அழகான பொண்ணுங்க... அதே சொந்த காரங்க... அதே நண்பர்கள்... அதே போன்.. அதே அணுகு முறை... அதே பேச்சு... இன்னும் இன்னும் எல்லாமே அதே தான்... ஆனா எனக்கு அலுக்க வில்லை... ஏதோ சொல்ல போறேன்னு நினைச்சீங்களா.. இல்லையே... ஹி ஹி.... சும்மா...

மொக்கை போட்டா தானே சும்மா கல கல என்று இருக்கும்...

சரி விஷயத்துக்கு வருகிறேன்..... தினசரி Gtalk-ல Caption வைக்கிற பழக்கம் உண்டு... அந்த விஷயங்களை கொஞ்சம் இங்கு அப்படியே சொல்லிட்டு ஓடிடுறேன்.... (எங்கே ஓடினாலும் மொக்கை போட இங்க தான்டா வரணும் அருண்... ஹி ஹி)
ஏற்கனவே சில சொல்லி இருந்தாலும் உங்களுக்கு தெரிஞ்சது தான் எல்லாமே...

காதல், கோபம், மொக்கை, உண்மை எல்லாம் கலக்கப்பட்டது ஹி ஹி...

இதோ படிச்சு நொந்து போக ஸ்டார்ட் பண்ணுங்க.... 1 2 3... Start

எல்லாரோலும் நல்லா படிச்சு பாஸ் ஆக முடியும் (அடி முட்டாளாக இருந்தாலும்),
எல்லாரோலும் பிட் அடிச்சு பாஸ் ஆக முடியாது (அதி புத்திசாலியாக இருந்தாலும்)

எனக்கு பிடிச்சது எல்லாம் உனக்கும் பிடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லாத ஒன்று என்று சொன்னது நான்... ஆனால் என்னை பிடிச்சதால் எனக்கு பிடிச்சது எல்லாம், உனக்கும் பிடிக்கும் என்றாயே.... இது தான் நீ.....

எனக்கு தெரிஞ்சு, அடக்கம் இல்லாத பெண்ணும், ஒழுக்கம் இல்லாத ஆணும் உருப்பட்டதாக தெரிய வில்லை...

நம்மை புரிந்து கொண்ட பெண்களை மிஸ் பண்ணி விடாதீர்கள்... அவர்கள் தாம் நம் வாழ்க்கையை முழுமை அடைய செய்பவர்கள்...

உன்னை நான் கிண்டல் பண்ணும் நேரங்களில், நீ வெட்கி சிரிக்கும் அழகிற்கு ஆஸ்கர் கொடுத்தா கூட ஈடு ஆகாது கண்ணம்மா...

எனது விழிகளை ஈரமாக்கியது உனது வார்த்தைகள்... அவை வெறும் வார்த்தைகள் அல்ல... உனது அன்பின் உச்ச கட்டம்.....

நமக்கு பிடித்தவர்களிடம் அன்பு செலுத்தினால் மட்டும் போதாது, கோபப்பட வேண்டும்...அந்த கோபத்திலும் அக்கறை இருக்கணுமே தவிர வெறுப்புணர்வு இருக்காம பார்த்துக்கணும்....சரி தானே????

பெண்களின் மனதை புரிந்து கொள்ளவே முடியாது என்று வம்பளந்து வரும் அனைவருமே பொய்யின் பொய்யர்களே....

என் கண்கள் பார்த்து, என் கைகளை உன் கன்னத்தில் வைத்து வருடி கொண்டாயே, அதில் கொஞ்சம் கூட காமம் இல்லை.... நிஜ காதல் மட்டும் தானடி இருந்தது....

என்னை துச்சமாக நினைத்து, வார்த்தைகளால் எனது நெஞ்சை கீறியவர்களை, பழி வாங்க காத்திருக்கிறேன்... அவர்கள் வழியில் அல்ல.... இவனா இப்படி என்று, ஆச்சர்யப்பட்டு அவர்களை தன்னந்தனியாக புலம்ப வைக்க ஆயத்தமாகி வருகிறேன்....

அழகா இருக்கிற பொண்ணுங்க எல்லாருமே நமக்கு பிடிச்சு இருக்கணும் என்பது அவசியம் இல்லாத ஒன்று... ஆனா நமக்கு பிடிச்ச பொண்ணு நமக்கு அழகா தான் தெரியணும் என்பது அவசியமான ஒன்று....

நம் மீது அன்பு வைத்து இருப்பவர்கள், நமக்கு நாலு வரியில் சங்கதி அனுப்பினாலும், நாப்பது வரியில் அனுப்பினாலும், அவர்களின் அன்பின் வீரியம் ஒன்று தான் எனபதை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்...

வாரத்தில் ஏதாவது ஒரு நாள் மட்டும் சாப்பிடாமல் இருந்து பாருங்கள் (பழங்கள், குடி நீர் சேர்த்துக்கலாம்)... உங்களுக்கே உங்களை பிடிக்கும்...கண்டிப்பாக...

நமக்கு பிடித்தவர்கள் அழும் போது, ஒரு கையால் அவர்களின் கண்ணீரை துடைத்து, இன்னொரு கையால் அரவணைத்து ஆறுதல் சொல்வதை தவிர, நமக்கு வேறு வேலை இருந்தால் ஒரு வகையில் நாம் எல்லோரும் சபிக்கப்பட்டவர்களே...

சின்ன சின்ன சந்தோஷங்களை தவற விட்டு விடாதீர்கள்.... உங்கள் வாழ்க்கை முழுமை அடைய அது அவசியமான அதி முக்கியமான ஒன்று....

பெண்கள் என்றாலே அழகு தான்.... அந்த அழகு பெண்கள் இருப்பதால் தான் ஆண்கள் கூட்டம் ஏகாந்தமாக இருக்க முடிகிறது.....

விண்ணைத் தாண்டி வருவாயா.... வரும் வரை காத்திருக்கிறேன்...

பசங்களை எப்பவுமே நம்புற பொண்ணுங்களும், பொண்ணுங்களை எப்பவுமே நம்பாத பசங்களும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை (ரஜினி சொன்னது இல்லைங்க...ஹி ஹி)

எல்லாம் படிச்சு முடிச்சு களைச்சு போய்ட்டீங்களா? இந்தாங்க லெமன் ஜூஸ்... ஹி ஹி...

இன்றைய Caption இதோ.....

அஞ்சு அடி' சூர்யாவையும், அழகன் அஜித்தையும் ஆராதிக்கும் பெண்களுக்கு வடிவேலு போல கணவன் கிடைப்பதும் வாழ்க்கையின் தாத்பரியங்களில் ஒன்று தான்... அதே விதி ஆண்களுக்கும் பொருந்த கூடியது தானே....

ஐயோ கடைசியா சொன்னது சும்மா...

வடிவேலு சொல்ற மாதிரி எவ்வளவு மொக்கை போட்டாலும் இவங்க தாங்குவாங்க... ரொம்ப நல்லவங்க தானே நீங்க... ஹி ஹி....

மீண்டும் பார்க்கலாம்,
என்றும் உங்கள் அருண் பிரசங்கி

அடடே! நான் ரொம்ப தடவை கேட்டு பாத்தேன் எங்க அதிக ப்ர சீ.. அருண் பிரசங்கி அண்ணானு, ஒரு பதிலும் கிடைக்கலே.. வந்துட்டீங்களா? இந்த மொக்கை எல்லாம் படிச்சும் நான் இன்னும் நல்ல படியா ஆபீஸ்ல உக்காந்து இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் எங்க அப்பா அம்மா ஊட்டி வளர்த்த மொக்கை சோறுனால தான் ;-) வளர்க உங்கள் ப்ரசங்கித்தனம் :)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹாய் அருண், உங்க அம்மா, அப்பா, தங்கை நல்மா இருக்கிங்கலா? உங்கல எங்க எல்லாம் தெடுரது..... எப்படி இருக்கிங்க?

இந்த மொக்கை, கடி ஜெக் எல்லாம் இல்லாமா தான் அருசுவை ஏங்கி போயி இருக்கு அருண்...

மொக்க போடுர அருண் எங்க போச்சுன்னு அருசுவை எப்படி அழுது துன்னு கேட்டு பாரு... இப்பதான் அருவை சிரிக்குது...

"வருக வருக வந்து உங்க மொக்கை, கடி ஜெக் தருக... வாழ்த்துக்கள்..."

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

முதலில் பிரசங்கம் பண்ண திரும்ப வந்தமைக்கு வாழ்த்துக்கள் அருண். மீண்டும் நல்வரவு.

என்னென்னவோ சொல்றீங்க.. :)

நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்..//நம் மீது அன்பு வைத்து இருப்பவர்கள்// நமக்கு மெய்ல் போட்டாலும், 'மெய்ல் போடுறேன், போடுறேன்' என்று போடாமல் விட்டாலும், போன் பண்ணினாலும், 'போன் பண்ணுறேன், பண்ணுறேன்' என்று பண்ணாமல் இருந்தாலும் //அவர்களின் அன்பின் வீரியம் ஒன்று தான் எனபதை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்...// டும் டும். :)))))))))))

//சின்ன சின்ன சந்தோஷங்களை தவற விட்டு விடாதீர்கள்.... உங்கள் வாழ்க்கை முழுமை அடைய// அதனால் தானே அறுசுவைக்கு வருவதே. பிறகு திடீர் திடீரென்று காணாமல் போனால் எப்படி? :)

பி.கு
சூர்யா, அஜித் ரேஞ்சில் எல்லாம் வேணாம். வடிவேலு கூட வேணாம்.. என் கவலை எல்லாம் எனக்கு இப்ப வனிதா மெஹந்தி (அந்த ஸ்பெஷல் டிசைன்) வைக்கணும். ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்க அருண்.

‍- இமா க்றிஸ்

நல்ல சிரிப்பா இருக்கும்...........

கோழிப்பண்ணையில் கணக்கெழுதுவது... உதவாக்கரைக்கும் கொஞ்சம் மேல ...
அவள் ஒரு மொக்கை மோகினி!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அருண் பிரகாஷ்,

என்ன, ஒரு த்ரெட் திறந்து விட்டு ஆளையே காணோம்? நல்லாவே இல்லை. ;(

இன்வைட் பண்ணினால் வாசல்ல நின்று வருபவர்களை எல்லாம் வரவேற்க வேணும்... நாற்காலி எடுத்துப் போட வேணும்.. உட்கார்ந்து பேச வேணும். விருந்தாளிகளைத் தனியே விட்டு விட்டு கிச்சன்ல காபி போட்டுக் கொண்டிருந்தால் சரியா?

(அட, இதை வைத்தே ஒரு G-talk காப்ஷன் எழுதி விடலாம் போல இருக்கே!!) :)

அன்புடன்
மா

‍- இமா க்றிஸ்

இமா அம்மா சூப்பர் நல்லா சொன்னிங்க... பாருங்க கூப்பிட்டுட்டு ஆலையே கானும். கல்யாண வீடு கலை கட்டவே இல்லை......

///என்ன, ஒரு த்ரெட் திறந்து விட்டு ஆளையே காணோம்? நல்லாவே இல்லை. ;(

இன்வைட் பண்ணினால் வாசல்ல நின்று வருபவர்களை எல்லாம் வரவேற்க வேணும்... நாற்காலி எடுத்துப் போட வேணும்.. உட்கார்ந்து பேச வேணும். விருந்தாளிகளைத் தனியே விட்டு விட்டு கிச்சன்ல காபி போட்டுக் கொண்டிருந்தால் சரியா?////

இமா அம்மா இ எங்க போச்சு ஒருவேலை அருண தேடி போச்சா... ///அன்புடன்
மா////

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அதுவா, காப்பி இன்னும் ஹாலுக்கு வரல. ஆகவே 'ஈ' காப்பி தேடி கிச்சன் போயிருக்கு. :)

‍- இமா க்றிஸ்

இமா அம்மா சூஊஊர்

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

வணக்கம் ஹேமா... அதிக பிரசங்கியா? பார்ரா... ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்... அப்புறம் சாப்பாடு எல்லாம் ஆச்சா??? ஆபீஸ் இருக்கிறதாலே ரொம்ப பிஸி-ஆ???
"எதை பார்த்தாலும் அது எனக்கும் தெரிய வேண்டும் என தோன்றும், இதனால் ஆர்வங்கள் மாறிக் கொண்டே இருக்கும். (ஒரு திறமையும் இல்லை, அதை இப்படி சொல்லிக்கறது!)" - அட இது கூட நல்லா இருக்கே... சரி ஹேமா நம்ம அப்புறம் மொக்கையை போடலாம்... ஹி ஹி...

சிங்கப்பூர் பிரபா எப்படி எப்படி இருக்கீங்க??? என்னை தேட எல்லாம் வேண்டாம். என்னோட மெயில்-க்கு ஒரு ஹாய் சொன்னா போதும்... பதில் அனுப்பிட போறேன்.... அவ்வளவு தானே... சரி என்ன சாப்பாடு? நான் தோசை... ம்ம்ம்ம்...
//இப்பதான் அருவை சிரிக்குது...//... ஐயோ ராமா என்னை இந்த பிரபாவின் தமிழில் இருந்து காப்பாத்து...
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி" - என்று பஞ்ச் சொன்ன பிரபாக்கு ஒரு பூங்கொத்து... ஹி ஹி...

அம்மாவுக்கு வணக்கம் வந்தனம்.... இப்படி வாரி விட்டீங்களே??? ம்ம்ம்ம் பரவா இல்லை... அருண் விடுடா.....
வீட்டில் அனைவரும் சுகமா அம்மா???? நீங்க இருக்கும் போது சந்தோஷ தாண்டவம் தானே.... அறுசுவை மாதிரி...
நெறைய சொல்லி இருக்கீங்க... நோட் பண்ணி வச்சு இருக்கேன்.... பார்த்துக்கிறேன்... ஹி ஹி...

வாங்க இலா... எப்படி இருக்கீங்க????
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?".. சூப்பர்... அது என்ன பத்து முறை??? ஏன் நூறு முறை இருக்க கூடாதா?? சும்மா..நல்லா இருக்கு இலா...
அது என்ன மொக்கை மோகினி... இதுல உள் குத்து எதுவும் இருக்கா??? ஹி ஹி....

மத்த படி எல்லோருக்கும்...... பதில் மொழி போடுங்க அப்புறம் சொல்றேன்

அன்பு மகன் அருண்,

வணக்கம், வெல்கம், கிஓரா, ஆயுபோவன், நமஸ்தே, புலவினாகா, ட்டலஃபலாவா, ..., ..., ...
வாரி விடவில்லை, உண்மையைத் தான் சொன்னேன். :) இங்கு அனைவரும் நலம்.
//சந்தோஷ தாண்டவம் தானே.... அறுசுவை மாதிரி...// :)
//நோட் பண்ணி வச்சு இருக்கேன்...// போதாது. நோட் நிரம்பாமல் பார்த்துக் கொள்ள வேணும். அடிக்கடி செக் பண்ண வேணும். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்