சமைத்து அசத்தலாம் பகுதி - 20, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -19, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -20 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , gandhiseethaa... (75), seethaalakshmi..(சீதாக்கா). (47), vr.scorp..(47), prabhaaaaaa...(21) நால்வரினதும் குறிப்புக்களைச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை நால்வரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (06/10) முடிவடையும். புதன்கிழமை(07/10), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

எல்லோரோடும் சேர்ந்து வருவதை விட, இப்போ அதிகம் பேர் வராமல் இருக்கும்போது, வந்து கைகொடுக்கும் உங்களெல்லோருக்கும்... மனமார்ந்த நன்றிகள்..

நேரத்திற்கு கணக்கெடுத்தும், எல்லாப்பக்கத்திலும் எனக்கு உதவியாக இருந்து ஒத்துழைத்தும், சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கு மிக்க நன்றி.

சுஸ்ரீ, வனிதா, வத்சலா, ராணி, சுவர்ணா, இலா, வின்னி, ஆசியா, அம்முலு, சந்தனா, ரேணுகா, விஜி, சீதாக்கா, மாலி அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(28/09) சமைக்கத் தொடங்குவோம், நிறைய சமைத்து, அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் கணக்கில வெங்காய சட்னி (Vr Scorp)சேர்த்துகோங்க.. இப்ப தான் அரைச்சேன்... தோசைக்கு அருமை.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டிக்கட் எடுத்தாச்சு அதிரா,
இன்று என் கணக்கு காந்திசீதாவின் ஈஸி உளுந்துவடை & திருமதி. மூர்த்தியின் தேங்காய் சட்னி -2

‍- இமா க்றிஸ்

இலா நலமா?முதலில் ஏறிவிட்டீர்கள்,அதே வேகத்தில் சமைத்து முதல் பட்டத்தையும் வாங்குங்கள்,நன்றி இலா

இமா நலமா?இந்த காத்து பலமா அடிக்குது,ஏன் தெரியுமா கடைசியா வருபவர்களேல்லாம் முன்னமே வருவதால் தான்,சமத்தா நிறையா சமைத்து சொல்லனும்,சரியா?நன்றி இமா தொடர்ந்து செய்யூங்கள்

மற்ற அனைவரும் எங்கே டிரெயின் புறப்பட்டு விட்டது,எல்லாரும் சீக்கரம் வாங்க,அப்பறம் இடம் இல்லை,கூட்டம் என்றெல்லாம் சொல்ல கூடாது,சரியா?

அதிரா நலமா?தலைப்பு காலையில் தான் பார்த்தேன்,இப்ப தான் குறிப்பு எடுத்து வைத்தேன்,மதியம் செய்து விட்டு சொல்கிறேன்,இனி நான் கானமல் போகாமல் வருவேன்,:)

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்றும் நாளையும் மட்டுமே சமைக்க முடியும். என் கணக்கில்:

அன்பு சகோதரி சீதாலஷ்மி
மழை மசாலா கடலை காம்பினேஷன். ரொம்ப சூப்பர்.
படிக்கட்டு ரசம் (ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்)
பருப்பு துவையல்

அன்பு சகோதரி M/s மூர்த்தி
கொண்டை போட்ட கடலை குழம்பு

மிகவும் நன்றி.
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் விழக்கூடாது.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஓடிவாங்கோ.. ஓடிவாங்கோ...
இலா வாங்கோ மிக்க நன்றி... இப்படியே தொடர்ந்து செய்தால்.. பட்டம் உங்களுக்கே...

இமா... வாங்கோ மிக்க நன்றி... நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரெயினுக்கு வந்திருக்கிறீங்கள்... இறங்கக்கூடாது... விடவே மாட்டோம்..:).

ஆகா ரேணுகா வந்தாச்சோ?... இனிக் காணாமல் போயிடாதீங்கோ... நான் உங்களைத் தேடுவேனா? ரெயினுக்கு சமைக்க ஆட்களைத்தேடுவேனா?.. தொடர்ந்து நிறையச் சமையுங்கோ...

ஹைஷ் அண்ணன், வாங்கோ.. மிக்க நன்றி. வந்த வேகத்திலேயே இறங்குகிறேன் எனச் சொல்லிட்டீங்கள். உங்களுக்காகவே தலைப்பை மாற்றிப்போட்டோம், அதை ஏமாற்றாமல் முடிந்தவரை வருகிறீங்கள் அதுக்கு மிக்க நன்றி.

////முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் விழக்கூடாது./// அழகான வசனம், எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

எல்லோரும் வாங்கோ... ரெயின் நல்ல வசதியாக இருக்கு... "பொக்கிஷம்" படம் போடப்போகிறோம்.... முதலாவது பெட்டியில் மட்டும்... முந்துங்கள் படம் பார்க்க:), இரு குறிப்புக்குமேல் செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் கணக்கில் பழப்பச்சடி ( சீதாலக்ஷ்மி அம்மா) சேர்த்துக்கோங்க

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா மிக்க நன்றி. படம் நன்றாக இருக்கோ.

ஹைஷ் அண்ணன் இப்போதான் நன்கு கவனித்தேன்:), அது என்ன படிக்கட்டு ரசம்:)....??? அப்படியும் இருக்கோ?
கொண்டைபோட்ட:) கடலையா? அல்லது கொண்டைபோட்ட ஏதாவதைச் சமைத்துப்போட்டு கடலை என்றீங்களோ??:) எனக்குப் பிரச்சனை இல்லை, கணக்கெடுக்கும் ரேணுகாவுக்கு, கொண்டையோடுசேர்த்து தலையும் சுத்தப்போவது உறுதி:).

என்ன எல்லோரும் அமைதியாகிவிட்டீங்கள் வாங்கோ....

ரேணுகா.... நான் இன்று காந்திசீதாவின் மொருமொரு உருளை டிக்கா செய்தேன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹைஷ் அண்ணா நலமா?நீங்கள் கலந்து கொண்டதே மிக்க மகிழ்ச்சி,இருப்பினும் அண்ணா உடனே இறங்காமல் முடியும் போது இன்னும் சில சொல்லுங்கள்,லதா அண்ணி நலமா??

இலாஇப்பெல்லாம் நல்லா சமைப்பது போல தெரியுது,சமத்தா வர்றீங்க:)வாங்க வாங்க நீங்க சமைத்தால் எனக்கு சந்தோஷம்

அதிரா பொக்கிஷம் என்று படம் உள்ளதா?உண்மையில் எனக்கு தெரியவில்லையே:( நான் தான் சொல்லிட்டேனே இனி கானாமல் போகமாட்டேன் என்று,லீவு எல்லாம் முடிந்தது:((((

நீங்களும் முதல் பெட்டியில் சமைத்த மாதிரி தெரியுது,பொக்கிஷம் படம் பார்க்கவோ:))இன்னும் செய்து சொல்லுங்க அதிரா இம்முறை இளவரசி பட்டம் வாங்கவேனும்

சரி சரி எல்லோரையும் விசாரித்தது போதும் உன்கணக்கு எங்கே என கேட்பது காதில் விழுகிறது

மூர்த்தியின் தேங்காய் சட்னி 2
காந்தியின் வெண்டக்காய் சிப்ஸ்,இன்று செய்வதை நாளை சொல்கிறேன்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா ரொம்ப நாள் கழித்து இந்த ரயிலில் ஏறி விட்டேன். பொக்கிஷம் படம் போட்டாச்சா?

என் லிஸ்ட்
திருமதி மூர்த்தியின் பூண்டு சட்னி
சீதாம்மாவின் புளி மிளகாய்.
இரண்டையும் சப்பு கொட்டி சாப்பிட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்