அஜினோமோட்டோ உபயோகிப்பதனால் ஏதேனும் தீங்கு ஏற்படுமா?

அஜினோமோட்டோ என்றால் என்ன? அது சீனா உப்பு தானே, அதை உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? தயவு செய்து யாராவது விளக்கவும்.......

ஹாய் பானு,
எப்படி இருக்கீங்க?அஜினோமோட்டோ பத்தி இந்த லிங்க்ல பாருங்க.

http://www.arusuvai.com/tamil/forum/no/11556
http://www.arusuvai.com/tamil/forum/no/2327
http://www.arusuvai.com/tamil/forum/no/2985
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

hai லக்ஷ்மிஷங்கர்
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.நீங்கள் குறிப்பிட்ட link பார்த்தேன்.

banu jacob
loved to be loved

loved to be loved

அஜினோமோட்டோ உபயோகிப்பது நல்லதா ?நான் தொடர்ந்து முப்பத்து மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து உபயோகிக்கின்றேன்.காப்பி , தேநீருக்கு மட்டும்தான் அஜினோமோட்டோ உபயோகிப்பதில்லை.

//அஜினோமோட்டோ உபயோகிப்பது நல்லதா?// அந்தச் சுவை தனிதான் இல்லையா! :-) எப்போதாவது ஒரு சமையலுக்குச் சேர்ப்பது பரவாயில்லை. ரசிக்கத்தான் வேண்டும். //நான் தொடர்ந்து முப்பத்து மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து உபயோகிக்கின்றேன்.காப்பி , தேநீருக்கு மட்டும்தான் அஜினோமோட்டோ உபயோகிப்பதில்லை.// நிச்சயம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல சகோதரி. இங்கு நான் கவனித்த முக்கியமான விடயம்... நீங்கள் சாப்பிடுவதாகச் சொல்லவில்லை. :-) தனியே உங்களுக்கு மட்டும்தான் சமையல் என்பதாகவும் சொல்லவில்லை. உங்கள் குடும்பம் முழுவதும் தினமும் தேவையில்லாமல் ஒரு விடயத்தை உண்டு வருகிறார்கள்.

"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்று பழமொழியே இருக்கிறது. நல்ல விடயம் எது நடந்தாலும், இனிமையான செய்தி என்று இனிப்புப் பகிர்ந்துகொள்கிறோம். ஆனாலும்... உப்பையும் சீனியையும் white death என்கிறார்கள்.

மொனோசோடியம் க்ளூட்டாமேட் / MSG... உணவிலுள்ள சுவையை அதிகரித்துக் காட்டும்தான். இது இல்லாமலே சுவையாகச் சமைக்கலாம். MSG க்குப் பதிலாக தக்காளி, சீரகம் எதையாவது பயன்படுத்திச் சுவையைக் கூட்டலாமே!

சில விஷயங்களுக்குப் பழகிவிட்டால் அவை இல்லாமல் சீவிக்க இயலாது என்பது போல் தோன்றும். உங்கள் நாவுக்கு அஜினோமோட்டோ சேர்க்காத எதுவும் சுவையாகத் தெரியாதே!

பழகிவிட்டால் விட முடியாதவை சிகரெட், மது மட்டுமல்ல. சாக்லேட், உப்பு, இனிப்பு, நெய், உறக்கம்... இன்னும் அதிகம் சொல்லலாம். இவை எல்லாவற்றாலுமே முதல் இரண்டிற்கும் சமமான அளவு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

உங்கள் குடும்ப நலன் கருதி, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப் பாருங்கள் சகோதரி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்