குழ்ந்தைக்கு ச்ளி இரும்ல் help me

ஹாய் friends என் 3 குழ்ந்தைக்கு ச்ளி இரும்ல் running nose 20daysa குறைய்வில்லை டாக்டர்கிட்ட காமிச்சி antiboitic tablet, syrup nose, drops கொடுத்தேன் இப்ப்வும் இருந்து கொண்டே இருக்கு என்ன வீட்டு வைத்திய்ம் ப்ண்ண்லாம் tell me friends

hai friend i am new member.na ennoda babyku(1year) coldout syrup than koduthan.athukuda panakaillkadu kalada kothewater(sadam boil akumbodu enda water yadukanum not in cookerrice)3days koduga.cof stop ayedum.

vazhiga valamudan

தோழிகளே,

என் 8 மாத பெண் குழந்தைக்கு சளியாக உள்ளது.நான் தாய்ப்பால் கொடுக்கிறேன்.இதனால் நான் சாப்பிடும்போது தயிர் (yogurt) போட்டுக்கொள்ளலாமா?

இன்னொரு கேள்வி:johnsons baby powder தான் உபயோகிக்கிறேன்.என் தோழி என்ன சொல்கிறாளென்றால் அப்பவுடரை உபயோகித்தால் குழந்தையின் நிறம் குறையுமாம்.இது உண்மையா?

அன்புடன் அனு

தயிர் கண்டிப்பாக சேர்க்க வேண்டாம். அது மேலும் சளியை உண்டாக்கும். சுடுநீரையே குடிங்கள். ஜூஸ் என்றாலும் சிறிது சூடு காட்டி பின் குடிக்கலாம். சளி நீங்கும் வரை ,பால் கொடுக்கும் வரை நீங்கள் தான் இதையெல்லாம் தள்ளி வைக்க வேண்டும். வெற்றிலையில் விக்ஸ் தடவி சூடுகாட்டி அதை குழந்தையின் மார்பில் ஒத்தடம் இடுங்கள். விரைவில் குணமாகும்.

பவுடர் பொதுவாகவே ரத்தத்தை உறிஞ்சிவிடும் என சொல்கிறார்கள். அதில் அதிக கெமிக்கல் இருப்பதால் அளவுக்கு அதிகமாக உபயோகிக்க கூடாது. ஆனால் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அந்த பவுடரை உபயோகிப்பதால் எந்த நிறமாற்றமும் உண்டாவதில்லை. பவுடரினால் வெளுத்து,கருத்தும் போகமாட்டார்கல். கவலைபடாமல் உபயோகிக்கலாம்.என் குழந்தைக்கும் பிறந்த முதல் அதை தான் கொடுக்குறேன். என்னைவிட அவன் சிகப்பாக தான் இருக்கான்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சில பவுடர்கள் சில குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்வதில்லை. என் மகளுக்கு Johnsons கிரீம், சோப், ஷாம்பு எதுவும் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே வேறு பிராண்ட் (Aveno) பயன்படுத்துகிறோம். உங்கள் குழந்தைக்கு Johnsons ஒன்றும் பிரச்சனை இல்லையென்றால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Yogurt - இது கொஞ்சம் கடினமான கேள்வி. ஏனென்றால் சளி இருமல் சமயங்களில் டாக்டர்கள் பெரும்பாலும் yogurt தவிர்க்கச் சொல்வதில்லை. சில டாக்டர்கள் சாப்பிடக் கூட அறிவுறுத்துவார்கள். immunity அதிகரிக்க. உங்களுக்கு சந்தேகமா இருந்தால் ஆமினா சொன்னதுபோல் தவிர்ப்பதே நல்லது.

உங்கள் குழந்தை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

அன்புடன்,
இஷானி

ஹாய் ஆமி,

கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லவேயில்லையே ன்னு யாரும் குறைபடாத அள்வுக்கு உங்களுக்கு தெரிஞ்சத, இல்லைன்னா மன ஆறுதலுக்காவது எல்லோருக்கும் பதில் சொல்றிங்க.தெரியலன்னா அதையும் சொல்லிடறீங்க.ரொம்ப நன்றி.
உங்க பதிலை பாத்ததும் முத வேலையா வெற்றிலைல் பத்து போட்டுத்துதான் மறுவேலை பாத்தேன்.
ஆமா,நீங்க லக்னோவில இருக்கிறதா எதிலயோ பாத்தா ஞாபகம்.நீங்க பதில் சொன்னப்போ டைம் 4 இருக்கும்னு நெனைக்கிறேன்.அப்பவே எந்திரிச்சு என்னங்க பண்ணுவீங்க?

இஷானி,உங்க பதிலுக்கு மிகவும் ந்ன்றி.என் குழந்தைக்கு அலர்ஜி எல்லாம் இல்லை.தோழி சொன்னவுடன் கொஞ்சம் குழம்பி விட்டேன்.உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

அன்புடன் அனு

ஹாய் அனு,எந்த பவுடராக இருந்தாலும் குழந்தைகளுக்கு முகத்தில் அடிக்க வேண்டாம் அது மூக்கின் வழியாக உள்ளே சென்று அலர்ஜி உண்டாக்கும்.i think eating yogurt is no problem at all have it without cooling.
ஆமினா 4 மணிக்கு என்ன செய்றாங்ன்னா இப்போ ரமலான் அதனால் நோன்பு வைப்பதற்கு எழுந்து இருப்பாங்க.ameena am i right?/

மேலும் சில பதிவுகள்