இங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க

இங்க வந்து அரட்டை பதிவு பண்ணுங்க. அப்பா..... பூர்வஜென்ம பலன அடங்சுட்டேனுங்க :)))))

வாணி நலமா? எனக்கு அந்த ஆப்ஸன் எல்லாம் இல்லை.

ஜீனோ நலமா?

பிரபா, சோனியா, இமா, கலா, சந்தனா,வனிதா,சுபத்ரா, லஷ்மிசங்கர்,சுபா,ஸ்வர்ணா மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

லக்ஷ்மி
நான் ப்ரெசென்ட்...நீங்கள் நலமா?
இமா ....
ஜீனோவுக்கு எதுவும் தெரியாதது வழக்கம் போலேவா இல்லை இமா உதவுவது வழக்கம்போலேவா என்று கேட்டேன்...
பிரபா, ஜீனோவுக்கு எப்படி வயிறெரியும் உங்களுக்கு தரும்போதுதானே அவருக்கு தெரிந்து அவர் கேட்டு அவருக்கு கிடைத்தது. ஏதாவது புரிந்ததா? நானும் குழந்தைகளும் நலம். முதுகு வலி சரியாயிற்றா?உயராமிருப்பவர்களுக்கு முதுகு வலி வருமா?தெரியாததால் கேட்டேன்....தவறு என்றால் மன்னிக்கவும்...
தம்பி எனக்கு டோரா பழக்கமில்லை அதனால்தான் உங்களிடமே மரத்தைப் பற்றிய விசாரணை.....
ஐஸ்வர்யா நான் ரொம்பவே நல்லா இருக்கேன். நீங்கள் நலமா?
வாணி நான் நலம். நீங்கள் நலமா?
மகேஷ்வரி உங்களுக்கு எந்த ஆப்ஷன் இல்லை....ஓஓஒ.....ஆப்சென்ட்டை சொன்னிங்களோ....

விஜி, மகேஸ்வரி, எப்படி இருக்கிறீங்க? நலம்தானே?

பிரபா, நான் மற்றும் வீட்டில் அனைவரும் நலம். இங்கு மழை. பிடிக்கவில்லை. :( நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

ஐஸ்வரியலக்ஷ்மி, நலம்தானே? //குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.// அழகான வரி. :)

சுபத்ரா, நான் லாலிபாப் சாப்பிடுறதில்லை, குச்சிமிட்டாய் மட்டுமே. ஐஸ் க்ரீமும் சாப்பிடுறது இல்லை. ஆகவே... :))))))))))

ஹாய் சந்தனா... நலமா? இந்தப் பக்கமும் ஒரு முறை வர மாட்டீங்களா? ஜஸ்ட் ஒரே ஒரு முறை.. ப்ளீஸ். :)))

லக்ஷ்மிஷங்கர், இமாவும் இமா அம்மாவும் நலம். நீங்க எப்படி இருக்கிறீங்க? வருகிற வாரம் பாடசாலை ஆரம்பம். :(

ஜீனோ, வாழ்த்துக்கு நன்றி. :) விவரங்கள் பார்த்தேன். எல்லாம் சரிதான்... //ஜீனோ உங்களில் ஒருவர் என்று நீங்களே ஏற்றுக் கொள்வீங்கள்!// தான் கொஞ்சம் இடிக்குது. :) இந்த வாரம் 'திகில்' வாரமா? :)))))

தேன், ஹெப்சி எப்பிடி இருக்கிறாங்க? :)

வாணி, மெனு பிடித்திருக்கிறது. சாப்பிட வரட்டுமா? :)

ஹைஷ் அண்ணா, தொடர் இழையில் உங்கள் பதிவு பார்த்தேன். :) இளவரசர் பட்டத்துக்கே இப்படி என்றால் அசத்தல் ராஜாவாகி இருந்தீங்க.. நாங்கள் எல்லாம் காணாமலே போய் இருப்போம். :)))

மீதி அனைவருக்கும் பெரிதாக ஒரு ஹாய். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நலமா?. எனக்கு வொர்க் அட் ஹோம் ஆப்சன் இல்லை என்று சொன்னேன்.

அன்புடன்
மகேஸ்வரி

ஹெப்சி ரொம்ப நலம்.
இன்றுதான் crown செய்தேன்.
ஹெப்சி ஸ்கூலில் இருந்து வந்ததும் காட்டவேண்டும்.
முடிந்தால் சீக்கிரம் புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.

சந்தோஷமாக இருக்கிறது தேன்மொழி. நன்றி.
படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அடடா எல்லாருக்கும் என் மேல் எவ்வளவு அன்பு.. அறுசுவையின் மூத்த சகோதரி காணாம போனா ஒரு பூஸ் கூட தேடாதாம்.. என்னை இத்தனை பூஸ்கள் நினைச்சிருக்கு.. ஒரே பெருமையா இருக்கு போங்க.. :)) இதுக்கெல்லாம் காரணமான சுபத்ராவுக்கு அன்பு நன்றிகள் :)) சிண்டு முடிஞ்சவங்க எல்லாம் எங்க காணோம்? :)

ஒருத்தங்க சுபத்ராவுக்கு சிண்டு முடிஞ்சா அவருக்கு சிண்டு முடிய இன்னொருத்தர்!! என்ன ஒற்றுமை!! நேத்து எல்லாத்தையும் படிச்சிட்டு சிரிச்சிட்டு இருந்தேன்..

லக்ஷ்மீ - என்ன கூகிள் வேலையெல்லாம் ரொம்ப சிறப்பா செய்யறீங்க போல இருக்கு.. எப்ப வருவேன்னு தெரியலை.. அதான் சொல்லலை.. ஆனா இப்ப இன்னைக்கு வந்துட்டேன்.. :)))

என்ன ஜீனோ - இதுக்கு தான் சொல்லறது.. எங்களை மாதிரி உண்மை மட்டும் பேசிட்டு இருந்தா எதையும் ஞாபகம் வச்சுக்க தேவையில்லை.. இப்ப சொல்லுங்க பார்ப்போம், எந்த ஊர்ல இருக்கீங்க?
உங்க புகைப்படங்கள் பார்த்தேன்.. self தாங்க முடியலை..
நடுநடுவுல பீட்டர் வேற.. மேன்/மான் ஐத்தான் சொல்லறேன்..
கடை ஏழுக்கு அப்புறமா தானே சேர்க்க கூடாது.. அப்ப முன்னாடி சேருங்க.. முடிஞ்சா என்னையும் அந்த லிஸ்ட்ல.. :)))

வாணி - இந்தாங்க காதுல பஞ்சு.. கையிலேயே வச்சுக்கோங்க.. இன்னும் கொஞ்சம் நாள்ல ஜீனோ மறுபடியும் வந்து புராணத்தை ஆரம்பிக்க போகுது.. காணாம போய் வந்த பிறகு நல்லா உளறிட்டு இருக்குது.. அது மறந்தாலும் நாமெல்லாம் மறக்க மாட்டோம்ன்னு அதுக்கு தெரியலை..

இமா - உங்க அன்பான அழைப்பை பார்த்தா ரொம்ப பயமா இருக்கு.. :)) வீட்டுல ஷார்க், aah my தவிர்த்து சிங்கம் புலி எதுவும் வளர்க்கலையே.. நேத்து உங்களை வசமா மாட்டி விட்டுட்டு ஓடிட்டேன்.. ஹாஹ் ஹா.. அதுக்கு மழுப்பலா ஒரு பதில் போட்டிருந்தீங்க.. அதுக்கும் ஹாஹ் ஹா..

பிகு - உங்க செல்ல பிராணிகளை பார்த்தேன்.. நல்லாயிருந்தாங்க..

மஹேஷ்.. நலமா? அப்பாடி எப்படியோ ரெண்டு வார்த்தைகளுக்கு மேல பேச ஆரம்பிச்சுட்டீங்க வாழ்த்துக்கள்...

சுபத்ரா - நானும் இந்த அறுசுவைய படிச்சிட்டு அடிக்கடி இப்படித் தான் தனியா சிரிச்சிட்டு இருக்கேன்..

தேன்.. இப்படித்தான் ஒருத்தங்களுக்கு அவங்க அம்மா கிரவுன் செஞ்சு சூட்டி அழகு பார்த்தாங்க.. ம்ம்.. ஆகட்டும் ஆகட்டும்.. ஹெப்சிக்கு நல்லா பொருந்தும்ன்னு நினைக்கறேன்.. நாங்கூட எங்கம்மாவுக்கு அந்த பேஜை பிரிண்ட் பண்ணி அனுப்பி வைக்கலாம்னு நினைக்கறேன்.. :))

வனிதா - டைப் பண்ணறதுக்கு பதிலா கை பூ வரைஞ்சிட்டு இருக்கு போல.. பார்த்தேன் ரசித்தேன்.. நல்ல கைத் திறமை உங்களுக்கு.. வாழ்த்துக்கள்..

அதிரா - கதை ரெண்டாவது பகுதியும் பார்த்தேன்.. அடடா ரொம்பவே உதவி பண்ணறீங்க கதை எழுதறவங்களுக்கு - ஆண் பேய்களுக்கு பேரெல்லாம் கொடுத்து!!

ஸ்வர்ணா - என்ன பலனை அடைஞ்ச பிறகு காணாம போயிட்டீங்க.. அப்புறம் கனவெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?? :)

ஐஸ்வர்யலக்ஷ்மீ - நீங்க இல்லாம களை கட்டுமா அரட்டை? வாங்க நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க..

இலா, உமா, உத்ரா - எப்படியிருக்கீங்க?

லிஸ்ட் ராணி பிரபா.. எப்படி இருக்கு உங்க லேப் டாப்?? கீ போர்ட் பட்டன்கள் எல்லாம் நலமா?? நலமா? அப்புறம் யார்கிட்ட கா விட்டிருக்கீங்க? யார் யாருக்கெல்லாம் பழம்?

கவிசிவா.. எப்படி இருக்கீங்கப்பா? முழங்கிட்டு இருக்கீங்க போல அங்க.. ம்ம்.. கலக்குங்க...

கலா - இப்போ ப்ரிங்கிள்ஸ் டின் உள்ளார இருக்கீங்களா இல்லை வெளியே இருக்கீங்களா?? உள்ளார இருந்தே டைப்பும் அடிச்சிடரீங்களா? :))

சோனியா - எங்க போங்க வாங்க?? :))

தேவகி, அம்முலு, விஜி, safina - நலமா?

யாரையாவது விட்டிருந்தா முறைச்சிட்டு மன்னிச்சிடுங்கப்பா!!

யாருக்காவது நல்லா வாய் விட்டு சிரிக்கனும்னு இருந்தா போயி தொடர் கதை இழையை படிங்கப்பா.. வடிவேலு விவேக் எல்லாம் தோத்தாங்க...

இந்த வாரம் எனக்கு மட்டும் லாங் வீக் எண்டு.. நான் இப்ப தூங்க போறேன்.. :))) உங்களுக்கெல்லாம் கிடையாதுன்னு தெரியும்.. போங்க எல்லாரும் போயி வேலையை பாருங்க :))

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

இமா, நீங்கள் இவ்வளவு கெஞ்சி கூத்தாடி ஏன் சந்தனாவை கூப்பிட்டீர்கள் என்று சொல்லுங்கோ? .
என் வீட்டுக்கு வர ஏன் அனுமதி? வந்து நீங்களே எடுத்து சாப்பிட வேண்டியது தானே.
சந்தனா, நலமா? ஜீனோவின் சுயபுராணம் எப்போது ஓயுமோ தெரியாது. காதில் பஞ்சு பத்தாது. பெரிய பாறையே வைத்தால் தான் சரியாக இருக்கும்.

//கடை ஏழுக்கு அப்புறமா தானே சேர்க்க கூடாது.. அப்ப முன்னாடி சேருங்க.. முடிஞ்சா என்னையும் அந்த லிஸ்ட்ல.. :)))//

வள்ளல் நம்பர்: 0. சந்தனா
வள்ளல் நம்பர்: -1: தேன்

நீங்கள் சொன்னது போல சேர்த்தாச்சு.சரியா?
மகேஸ்வரியே பாஸ்-க்கு பயந்து குட்டி குட்டி பதிவாக போடுகிறார். அதில் உங்கள் வாழ்த்து வேறா?
வாணி

ஹாய் மகேஸ் எப்படி இருகிங்க, உங்க மைல் பார்த்தேன் ரொம்ப அழகா இருந்து, மிக்க நன்றி, ஹாய் ஸ்வர்ணா அக்கா எப்படி இருகிங்க. மறக்காம விசாரித்தமைக்கு நன்றி. அப்புரம் அனைவரும் நலமா. உங்களை அன்புடன் விசாரித்த என்ன மறந்து விடாதிங்க

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

இங்க வந்து ரொம்ப நாளாயிடுச்சு. அனைவரும் நலம்தானே. இன்று அறுசுவை நன்றாக வருவது போல் இருக்கு. என்னை விசாரித்த அன்புள்ளங்களுக்கு நன்றி. (யார் யாருன்னு எனக்கு தெரியும். நிச்சயமா சந்தனா இல்லை:))

வாணி, நீங்களும், குழந்தைகளும் நலமா? இந்த வருடம் இங்கு குளிர் சீக்கிரம் ஆரம்பித்துவிட்டது. அதனால் எனக்கு ஒரே கோவமா இருக்கு. (வெதர் மேலத்தான்:)

லக்ஷ்மி, ஸ்ருதி எப்படி இருக்காங்க? உங்கள் விசாரிப்பை கண்டே இங்கு ஓடி வந்தேன். இந்த முறை பட்டிமன்றத்துக்கு நீங்கள் வரவில்லையா? ஹாப்பி வீக் என்ட் அனைவருக்கும்.

மேலும் சில பதிவுகள்