ஆரோக்கிய `சிக்னல்கள்!'

நல்லாத்தான் இருந்தாரு... திடீர்னு இப்படி வியாதியில விழுந்துட்டாரு...' என்பார்கள். உண்மையில் எந்த ஒரு நோய் பாதிப்பும் முழுமையாக ஏற்படும் முன் அதற்கான அறிகுறிகளை நமது உடம்பு காட்டுகிறது. அந்த அடையாளங்களை உடனடியாகக் கவனத்தில் கொண்டாலே போதும். வரும்முன் காத்து விடலாம். அப்படிச் சில `எச்சரிக்கை சிக்னல்களை' இங்கே பார்க்கலாம்...

உடையும் நகங்கள்

இது சத்துக் குறைவு, வைட்டமின் பற்றாக்குறை, வழக்கத்துக்கு மாறான கால்சியம் அளவு அல்லது மோசமான சுகாதாரத்தின் அறிகுறி.

என்ன செய்வது?

இந்த அறிகுறிகளைக் காண்பவர்கள் தங்களின் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இருமëபுச் சத்து, கால்சியம், பல்வேறு வைட்டமின்கள் எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் நிறைய பாலும், கீரைகளும் சாப்பிடலாம். பூஞ்சைத் தாக்குதலாலும் நகங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். 50 சதவீதத்துக்கு மேல் நகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அபாயம் அதிகம் என்று அர்த்தம்.

கண் வீக்கம்

கண்கள் அவ்வப்போது வீங்கினால் `ஹைபர் தைராய்டிசம்' பிரச்சினை இருக்கக்கூடும். தூக்கக் குறைவு நோய், சுவாசப் பிரச்சினைகளும் இருக்கக்கூடும்.

என்ன செய்வது?

இதில் நீங்களாக செய்வதற்கு ஒன்றுமில்லை. தைராய்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு அதற்கான நிபுணரைப் பார்க்கவும். அல்லது உங்களின் தூக்கப் பழக்கத்தைச் சரிசெய்துகொள்வதற்கு உறக்கவியல் வல்லுநரைப் பாருங்கள்.

வறண்ட உதடுகள்

போதுமான ஈரப்பதமின்மை, `டீஹைட்ரேஷனால்' இப்படி ஏற்படலாம். குளிர்சாதன வசதியுள்ள அறையில் நீண்ட நேரம் இருப்பதால் உதட்டில் வெடிப்புகளும் ஏற்படலாம். எல்லாவற்றிலும் முக்கியமாக, அதிகமாக எதிர்உயிரி மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கான எச்சரிக்கை மணியாகும் இது.

என்ன செய்வது?

எதிர்உயிரிகளைக் குறைத்துக் கொண்டு ஒரு மாற்றத்துக்கு இயற்கை மருந்துகளில் கவனம் செலுத்துங்கள். தினசரி 6 குவளை தண்ணீராவது அருந்துவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏ.சி. அறையில் அதிகமான நேரம் இருக்க நேர்ந்தாலும் அதன் காற்று நேரடியாக உங்கள் முகத்தில் படாமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். தினசரி `மாய்சரைசர்' பூசுவதற்கு மறக்க வேண்டாம்.

வீங்கும் பாதம்

உங்கள் உடல் செயல்பாட்டு அமைப்பில் புரதத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது அல்லது வீழ்ச்சியடையப் போகிறது என்று அர்த்தம். குண்டாவதன் காரணமாகவும் பாதங்கள், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் புதிதாக வீக்கம் ஏற்படும்; அல்லது அதிகரிக்கும்.

என்ன செய்வது?

உங்களின் இரண்டு பாதங்களும் ஒரே நேரத்தில் வீங்கினால் நíங்கள் அதிகமாகக் கவலைப்படத் தேவையில்லை. அது, மேற்குறிப்பிட்ட பொதுபாதிப்பாக இருக்கக்கூடும். ஒரு பாதத்தில் மட்டும் வீக்கம் ஏற்பட்டால் அதைப் புறக்கணிக்காதீர்கள். உடனே மருத்துவரைச் சந்தித்து, ரத்தப் பரிசோதனை செய்து, சிறுநீரகம், ஈரல், இதயம் அல்லது நுரையீரலில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ளுங்கள். நரம்புகள் வீங்கித் தெரிந்தால் (வெரிகோஸ்) உடனே மருத்துவரைச் சந்திக்கத் தயங்காதீர்கள்.

உலர்ந்த கேசம்- அதிகமான உதிர்வு

கேசம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சத்துக்குறைவுதான் காரணம். `சுவையானது' என்று தேர்நëதெடுத்து நீங்கள் குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் வகைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கேசம் உலர்ந்த தன்மையை அடையலாம். மற்ற நோய்த் தொற்றுகளாலும் கேசம் உலர்ந்திருக்கவும், உதிரவும் செய்யும்.

என்ன செய்வது?

விளம்பரம் செய்யப்படும் ஷாம்புகளை மட்டும் நம்பாமல், சத்தான உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சினை நீடித்தால் மருத்துவரைப் பாருங்கள்.

நன்றி மாலை மலர்...

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

மேலும் சில பதிவுகள்