தன்சல்

தேதி: October 1, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மட்டன் - அரை கிலோ
பாசிப்பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப்
பட்டை - சிறு துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 6
மல்லி விதை - 4 தேக்கரண்டி
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
பசலை கீரை (ஸ்பினாச்) - ஒரு சிறிய கட்டு
கத்தரிக்காய் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை - ஒன்று சிறியது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

சிகப்பு மிளகாய் (காய்ந்த மிளகாய்), மல்லி விதை, மிளகு, சீரகம், சோம்பு (1/2 தேக்கரண்டி) ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
மட்டன் மற்றும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கீரை, பூசணிக்காய், கத்தரிக்காய், எல்லா தூள்களும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் விட்டு 2 ஸ்டீம் வைத்து இறக்கவும்.
எண்ணெய் சூடானதும் சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு சிவந்ததும் கீறின மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி வேக வைத்துள்ள கறியை கொட்டி நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் சுண்டி எண்ணெய் மேலே வந்ததும் எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கவும்.


இது சப்பாத்தி அல்லது தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். சாதத்துடன் கூட பிசைந்து சாப்பிடலாம். சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்