மட்டன் நீலகிரி குருமா

தேதி: October 1, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.6 (5 votes)

 

மட்டன் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - ஒரு கட்டு (சிறியது)
புதினா - 3/4 கட்டு (சிறியது)
துருவிய தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2


 

புதினா, மல்லி, பச்சை மிளகாய், தேங்காய் ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
மட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, எண்ணெய் மற்றும் 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 2 ஸ்டீம் வரை வேக வைக்க வேண்டும்.
அரைத்த விழுதை வேக வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து 15 நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும்.


மட்டன் நன்றாக வேக வேண்டும் என்றால் நன்றாக சுத்தம் செய்த பின்னர் அதனை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த மட்டன் நீலகிரி குருமாவின் படம்

<img src="files/pictures/aa334.jpg" alt="picture" />

ஜலீலாக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னுடைய குறிப்பையும் செய்து பார்த்து படம் எடுத்து அனுப்பியதற்கு மிக்க நன்றி. வெளியிட்ட அட்மினுக்கும் என் நன்றி. படம் அழகாக வந்துள்ளது.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

டியர் லாவன்யா போன வாரம் சமைத்து அசத்தலாமில் உங்கள் நீலகிரி மட்டன் குருமா செய்ட்தேன் சுவை அபாரம், இதில் கொத்துமல்லி அரைத்து ஊற்றுவது நல்ல சத்தும் கூட.
அவசரத்து உடனே செய்து விடலாம்.
நானும் இது போல் பனீர் வெஜ் குருமா கொடுதுத்துள்ளேன். அப்ப நீலகிறியில் இப்படி தான் செய்வார்கள் போல/

ரொம்ப அருமை வாழ்த்துக்கள். இன்னும் உங்கள் வீட்டு சமையல் குறிப்பு கொடுங்கள்.

தொடர்ந்து என் சமையலை செய்து பார்த்து பின்னூட்டம் கொடுப்பதற்கு மிக்க நன்றி.

உங்கள் இன்ப கடலில் ஆழ்த்ததான் உடனே படத்தை அனுப்பினேன்.

Jaleelakamal

லாவன்யா இதில் தேங்காய் அரைத்து எப்ப ஊற்றனும் என்பதை நீங்கள் சொல்ல வில்லை.

அந்த பாயிண்டை சேர்த்து விடுங்கள்.

Jaleelakamal

செய்து பார்த்து பின்னூட்டம் மட்டும் அல்லாமல் படமும் எடுத்து அனுப்பியதில் மிக்க மகிழ்ச்சி. குறிப்பை திறுத்திவிட்டேன்.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!