வறுத்த கோழி பிரியாணி

தேதி: October 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

 

கோழி - அரைக் கிலோ
பாஸ்மதி அரிசி - 2 1/2 டம்ளர்
வெங்காயம் - 5
தக்காளி - 2 (பெரிதாக)
சிகப்பு மிளகாய் - 2
தயிர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - 4 மேசைக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 2 மேசைக்கரண்டி
ரெட் ஃபுட் கலர் - சிறிது
பட்டை - 4 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
மல்லித் தழை - அரை கட்டு
புதினா தழை - கால் கட்டு
எலுமிச்சை - ஒன்று
எண்ணெய் - 200 மி.லி
நெய் - 2 தேக்கரண்டி


 

சிக்கனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தில் நான்கை தனியாகவும், ஒரு வெங்காயத்தை தனியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்.
வாயகன்ற வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யும், 60 மி.லி எண்ணெயும் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின 4 வெங்காயம் மற்றும் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கி விட்டு அதில் நறுக்கின தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை எல்லாம் சேர்ந்து வதங்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியாக நறுக்கின வெங்காயத்தை பொன்னிறமாகவும், பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை முக்கால் பதத்திற்கும் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி வதங்கியதும், மீதமுள்ள மிளகாய்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள் மற்றும் தயிர் சேர்த்து கிளறி 10 நிமிடம் பச்சை வாசனை போக சிம்மிலேயே வதக்கவும்.
பின்பு பொரித்த கோழியையும், நறுக்கின மல்லி, புதினாவில் முக்கால்வாசி தழைகளையும் சேர்த்து பிரட்டி விட்டு 5 நிமிடம் வதங்க விடவும். நன்கு பிரண்டு வாசனையான மசாலாவாக இருக்கும். இப்பொழுது உப்பு சரி பார்த்து அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை பழத்தில் பாதியை பிழிந்து விடவும்.
அரிசியை மூன்று முறை களைந்து விட்டு ஊற வைக்கவும். அகலமான பாத்திரத்தில் 4 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்கும் போது அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி இதில் சேர்த்து மீதம் உள்ள மல்லி, புதினா தழைகளையும் சேர்க்கவும். பாதி எலுமிச்சையையும் பிழிந்து விடவும்.
தண்ணீர் சுண்டிய நிலையில் இருக்கும் போது, செய்து வைத்திருக்கும் மசாலாவை கொட்டி, அடியிலிருந்து சோறை எடுத்து மேலே பரப்பி விட்டு ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூளை பரவினார் போல் தூவி, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும். ஒரு பக்கமாக ஃபுட் கலரையும் போடவும்.
தம் போட தவாவையோ அல்லது தம் ப்ளேட்டையோ அடுப்பில் வைத்து சூடேறியதும் அலுமினிய ஃபாயிலால் மூடிய சட்டியை வைத்து அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் அப்படியே விடவும்.
அதன் பிறகு திறந்து பார்த்து ஒரு முறை கிளறி வறுத்த வெங்காயம் சிறிதளவு தூவி மூடி சிறிது நேரம் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.
பரிமாறுவதற்கு முன் முழுவதும் கிளறி சூடாக வெங்காய பச்சடியுடன் பரிமாறவும். இது போல் கோழியை வறுத்து செய்யும் போது கொஞ்சம் கூடுதல் சுவையுடன் நன்றாக இருக்கும். இந்த கோழி பிரியாணியை செய்து காட்டியவர் <b> திருமதி. அப்சரா </b> அவர்கள். சுவையான இந்த பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சூப்பராக இருக்கு.பிரியாணி தம் போடும் முறை நல்லா இருக்கு. எனக்கு தம் போட தெரியாது. இனி தான் try பண்ணி பார்க்கணும்.

ஹாய் சுஜி,நலமா?தங்களின் பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன்.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.செய்துப் பார்த்துட்டு சொல்லுங்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

We like to make this biriyani.Seems to be very tasty.can u give gram measurement for rice,onion and tomato.