ஹலோ ப்ரண்ட்ஸ்,
புதுசா Food Storage containers/boxes வாங்கலாம்னு பார்க்கறேன். அதுல எது பெஸ்ட்?! என்னிடம் தற்சமயம் இருப்பது majority, Gladware (or) Ziploc ப்ராண்ட் boxes தான். நிறைய சமைப்பதை போட்டு வைப்பேன். ப்ரிட்ஜில் வைக்க நல்லா Air tight-ஆ இருக்கும். ஆனால் அதிலேயே மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு பண்ணுவது நல்லதில்லை என்று தெரிந்துகொண்டேன்.(ஒவ்வொரு முறையும் மைக்ரோவேவ் அவன் Safe bowl-ல் போட்டு போட்டு சூடு பண்ணி அலுப்பாக இருக்கு). அதான், புதுசா ஸ்டோரேஜ் பாக்ஸ்ஸஸ் Glass-ல வாங்கலாம்னு பார்க்கறேன். Pyrex ப்ராண்ட் நல்லா இருக்கு (Pyrex brand bakeware வைத்து இருக்கேன்). ஆனா ஸ்டோரேஜ் செட் விலை ஜாஸ்திபோல தெரியுது. இப்போ காஸ்ட்கோல Lock & Lock ப்ராண்ட் Glass containers, Sale போட்டு இருக்கு. அது யாராவது யூஸ் பண்ணியிருக்கிங்களா?! எல்லோரும் நீங்க யூஸ் பண்ணற/உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை கொஞ்சம் வந்து சொல்லிட்டு போங்க, ப்ளீஸ்! நன்றி!
சுஸ்ரீ!!
சுஸ்ரீ!! அதெப்படி எனக்கு பதில் தெரிஞ்ச கேள்வியாவே கேட்க்குறீங்க... சமைத்த உணவு வைப்பதற்க்கு மெயினா கண்ணாடி பாத்திரங்கள் இப்ப நான் பயன் படுத்தறேன்.. பீஜேஸ்ல 7 பாத்திரம் கரெக்ட்டா லஞ்ச் கொண்டு போக இல்லைன்னா கறிவகையறா ஸ்டோர் செய்ய நல்லா இருக்கு.. லைட் வெயிட் தான்...லிட் மட்டும் பிளாஸ்டிக்...
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
ஐய்ய்ய்ய்...உடனே ஒரு பதில்!
ஐய்ய்ய்ய்...உடனே ஒரு பதில்!
இலா, நலமா?! ஒரு பதிவு கண்டிப்பா உங்ககிட்ட இருந்து இந்த இழையில எதிப்பார்த்தேன் இலா, நீங்க முதல் நபராவே வந்திட்டிங்க! தேங்ஸ். பட் பீஜேல நீங்க வாங்கினது என்ன ப்ராண்ட்னு சொல்லவேயில்லையே. அது அவஙக் ப்ராண்டேவா?!என்னன்னா, நாங்க பீஜேல மெம்பர் கிடையாது, ஒன்லி எ ட்ரூ காஸ்கோ மெம்பர், பல வருஷமா! : ) அதான் காஸ்கோ சேல் பார்த்துட்டு ஒரே யோசனை, வாங்கலாமா, வேண்டாமான்னு. நீங்க இப்ப நல்லா இருக்குன்னு சொன்ன அந்த லைட் வெயிட் செட் ப்ராண்ட் என்னன்னு தெரிஞ்சா நான் வேற எங்கேயாவது அதேப்போல் கிடைக்குதான்னு பார்ப்பேன்.
பி.கு. இன்னொரு கேள்விகூட கைவசம் வைச்சிருக்கேன். It's IT related. எங்க கேட்கறதுன்னு தெரியலை... சொல்லமுடியாது, அதுவும் உங்களுக்கு ஜுஜிபி கொஸ்டினா இருக்க சான்ஸ் இருக்கு!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஆஹ்!
ஆஹ்! நானும் காஸ்ட்கோ தான் பிரெண்ட் வீட்டில இந்த செட் பார்த்தேன் நல்ல இருந்தது பீஜேஸ் 60 நாள் டிரையல் மெம்பெர்ஷிப் கார்ட் வைத்து வாங்கினேன்.. பிராண்ட் நினைவில்லை யோசித்து சொல்கிறேன்... ஐடி ரிலேட்டடா என்ன கேள்வி.. மெயில் அனுப்புங்க... எதுக்கு வம்பு :))
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
சுஸ்ரீ, இலா
Rubbermaid permier brand(stain resistant) மிகவும் நன்றாக உள்ளது. ப்ரிட்ஜ் அவெனில் உபயோகபடுத்த ஈசியா இருக்கு.
Glass containers யூஸ் பன்ன ஈசியா இருக்குமா? ப்ரிட்ஜ் அவெனில் இருந்து எடுக்கும் போது கை நழுவி விழுந்துடுமோனு பயமா இருக்கும் எனக்கு.அதனால Glass items வாங்கினது இல்ல.
Rubbermaid permier brand ல Resin identification code 7 போட்டு இருக்கும். இத அவனில் வைத்து சூடு பண்ணலமா?
அன்புடன்
லக்ஷ்மி
அன்புடன்
லக்ஷ்மி
ஹாய் இலா... : ))
இலா, :))))
சரி, இன்று இரவு மெயில் அனுப்புகிறேன்!
அப்புறமா நீங்க டைம் கிடைக்கும்போது உங்க food container set ப்ராண்ட் பார்த்து சொல்லுங்க. bye.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
நன்றி லஷ்மி!
லக்ஷ்மி,
உங்க கருத்துக்களை வந்து இங்க ஷேர் செய்துகொண்டதற்கு நன்றி!.
நீங்க சொல்வது ப்ளாஸ்டிக் boxes இல்லையா? இந்த ப்ராண்ட் நான் டார்கெட் போன்ற கடைகள்ல பார்த்திருக்கேன். ஆனா, இது அவனில் வைத்து சூடு பண்ணலாமா/safe-பான்னு எனக்கு சரியா தெரியலை. வேற யாராவது வந்து சொல்லுவாங்க பார்க்கலாம். நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
என்ன இது? வேற யாருமே ...
என்ன?, வேற யாருமே இந்த த்ரெட் பார்க்கலையோ? என்று சந்தேகம். அதான், மேலே கொண்டு வர இந்த பதிவு!
இலா, நைட் மெயில் அனுப்பினேன். பார்த்திங்களா? பார்த்துட்டு பதில் போடுங்க. தேங்ஸ்!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ
சுஸ்ரீ, எப்படி இருக்கீங்க? மகனுக்கு முற்றிலும் குணமாகி விட்டதா?
அளவில் சற்று சிரிய கண்டெயினர்ஸ் (2 கப், 1 கப்) வால்மார்ட்டில் கிடைக்கும் Anchor brand யூஸ் பண்ணுகிறேன்.
லக்ஷ்மி, ப்ளாஸ்டிக் ஐட்டம்ஸ் எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அவனில் சூடு படுத்த வேண்டாம். க்ளாஸ் அல்லது செராமிக் பயன்படுத்துங்கள்.
வின்னி, மிக்க நன்றி!
வின்னி, நலமா?!
ரொம்ப நாள் கழித்து இன்னைக்குதான் பார்த்தேன் வின்னி, உங்க பதிலை, நன்றி!. பையனுக்கு முற்றிலும் சரியாகிவிட்டது. மிக்க நன்றி. ரொம்ப தாமதமா (கிட்டத்தட்ட 1 மாதம் கழித்து) கவனித்து பதில் போடுகிறேன். மன்னிக்கனும். சுத்தமா இந்த பக்கம் வரவேயில்லை. :(
நானும் வால்மார்ட்டில் பார்த்திருக்கிறேன் வின்னி, நீங்க சொல்லும் இந்த ப்ராண்ட்டை. 1 கப், 2 கப் சைஸில் பார்க்க அழகா, அடக்கமா இருக்கும். வாங்கி யூஸ் பண்ணி பார்க்கிறேன். ஆக்சுவலா, இப்ப ஒரு வாரம் முந்தி, Target-ல், 10 Pcs செட் by Pyrex ப்ராண்ட் நல்ல சேலில் கிடைத்தது. கொஞ்சம் பெரிய அளவில், சாதம், குழம்பு எல்லாம் ஸ்டோர் பண்னி வைத்துக்கொள்ளும் சைஸில். நன்றாக இருந்தது என்று வாங்கி இருக்கிறேன். இனிமேதான் யூஸ் பண்ணி பார்க்கனும். மீண்டும் பிறகு பார்க்கலாம்/பேசலாம். Bye!
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
plastic
lock and lock box is very useful for re heating.pls keep the box without
lid .
mahaboob