முந்திரி பிஸ்கட்

தேதி: October 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

மைதா - 150 கிராம்
வெண்ணெய் அல்லது டால்டா - 100 கிராம்
பொடித்த சர்க்கரை - 75 கிராம்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10


 

முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் டால்டா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து கலக்கவும். பிறகு பொடித்த சர்க்கரையை சேர்க்கவும். இறுதியில் மைதா மாவை சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை ஒரு ஏர்டைட் கன்டைனரில் போட்டு மூடி 2 மணி நேரம் வைத்திருக்கவும்.
2 மணி நேரம் கழித்து பிசைந்து வைத்த மாவை எடுத்து சப்பாத்தியை போல் தேய்க்கவும்.
சப்பாத்தியை போல் தேய்த்த மாவை வட்டமான பிஸ்கட்களாக வெட்டி எடுக்கவும்.
மைக்ரோவேவ் சேஃப் ப்ளேட்டில் பிஸ்கட்களை அடுக்கி அதன் மேல் முந்திரியை வைத்து லேசாக அழுத்தி விடவும். கன்வெக்ஷனில் 200 டிகிரி சூட்டில் 10 அல்லது 12 நிமிடங்கள் வேக விடவும்.
பிஸ்கட்கள் பேக் ஆனதும் எடுத்து விடவும். இந்த பிஸ்கட்டை செய்து காட்டியவர் அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. மாலதி </b> அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முந்திரி பிஸ்கட் பார்க்கவும் நன்றாக இருக்கு, செய்யவும் சுலபமாக இருக்கு. இது யார் மாலதி அக்காவோ? (மாலதி மோகன்).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமாம் அதிரா...!! நானேதான் அது. செய்து பார்த்தீர்களா? இப்படி மாவை பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு செய்தால் இன்னும் அதிக சுவையுடனும் சாஃடாகவும் இருக்கிறது. தேங்க்யூ...!!

மாலதியக்கா...
சந்தேகமாக இருந்தது அதுதான் கேட்டேன். அப்போ நீங்கள்தானோ இது? இது உங்கள் முதல்க் குறிப்போ? நன்றாகச் செய்திருக்கிறீங்கள். தொடர்ந்து அனுப்புங்கோ.

உங்களைக் காணவில்லையே எங்கேயும்? ஏன் இப்போ வருவதில்லை. நேரமுள்ளபோது வாங்கோ. நிட்சயம் வரவேண்டும். எல்லாவற்றிலும் பங்குகொள்ளவேணும் முன்பைப்போல.

நான் உங்களை அரட்டையில் பெயர்போட்டுக் கூப்பிட நினைத்தேன், பின்னர் பார்க்கமாட்டீங்களோ என கூப்பிடாமல் விட்டேன். இப்போ சந்தோஷமாக இருக்கு.

நான் இன்னும் செய்யவில்லை இது, செய்து பார்த்துவிட்டுச் சொல்வேன். இப்போ நான் விரதமென்பதால் கறிவகைகள் தவிர ஏனையவை ஏதும் செய்ய வெளிக்கிடவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா..!! முன்பு மாதிரி அடிக்கடி அறுசுவைக்கு வரமுடியவில்லை. இப்ப ஹிந்தி க்ளாஸ் போய் கொண்டு இருக்கிறேன். மேலும் டயாபட்டிக் கன்ட்ரோலுக்காக காலை, மாலை இரு வேளையும் தவறாமல் வாக்கிங் போக வேண்டியுள்ளது. கண்ணாடியில் பெயிண்டிங் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். அதனால் நேரம் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. புதிதாக தொடர்கதை எழுதும் பகுதி ஆரம்பித்திருக்கிறார்கள் அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று ரொம்ப ஆர்வமாக இருக்கிறது.......பார்க்கலாம்.....

என் போன்ற கடை நிலை சமையல்காரர்களுக்கும் இது போன்ற டிப்ஸ் மிகவும் உபயோகமாக இருக்கும் சகோதரிகளே!

மாலதி மேம் உங்கள் முந்திரி பிஸ்கட் செய்தேன் மிக அருமை .
படங்கள் தெளிவா இருக்கு வாழ்த்துக்கள்.

வாழு, வாழவிடு..