சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்... வாங்க மூவி தியேட்டருக்கு...8

ம்ம்ம்க்ஹூம்... மைக் டெஸ்ட்....

அனைவருக்கும் வணக்கம்...

பெயருக்கேற்ற மாதிரி நல்ல நகைச்சுவையா ஒரு பட்டிமன்றத்தை நடத்தலாம்ன்னு நானும் மூளைய கொடன்ச்சி, "இன்றைக்கு மக்களை நன்றாக சிரிக்க வைக்கும் காமெடியன் யாருன்னு..." கேட்கலாம்ன்னு தான் நினைத்தேன்.......ஆனா அதுக்குள்ளே கூட்டத்துலயிருந்து பல குரல்...

ஒன்னு......." யாருமேயில்லன்னு"
அடுத்தது...." அசத்தப்போவது யாருன்னு"
அடுத்து...." கலக்கப்போவது யாருன்னு"

மூளைய கொடன்ச்சின்னு நான் சொல்றதுக்குள்ள யாரோ ஒரு குரல்
"இருந்தா தானே குடைவீங்க" இல்லாததையெல்லாம் விட்டுடுங்கன்னு, கேக்குதுங்க!!!!!!!!!

இன்னொன்னு இதோப்பார்ரா.......இதான் "காமேடியேன்னு".......

சரி ஏன் இப்படி இல்லாத ஒன்னுக்கு சண்டை போடனும்ன்னு நானே நினைச்சு அப்படியே ட்ராக்கை மாத்தி ஆன் தி ஸ்பாட் ல வேற தலைப்பை தேர்ந்தெடுத்துட்டேன்.

இன்றைக்கு நாம் எடுத்துக்கொண்டு பேச உள்ள தலைப்பு " உலக திரைப்படங்கள் மக்களிடத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மை பயக்குவையா? தீமை பயக்குவையா? "

பொதுவாக அக்காலத்தில் உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கருத்துள்ளவையாக இருந்தன.இக்காலத்தில் கதை,கருத்து...சிந்திக்க வைக்க கருத்துக்கள் உள்ளதா என்றே தெரியவில்லை... நீங்க சொன்னதான் நானும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
இந்த பட்டிமன்றத்தில் நாம் சராசரியாக ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்பு எப்படி பட்டது என விவாதித்து ஒரு தீர்வு காண்போம்.

இதில் "நன்மையே" என பேச இருக்கும் அணியினர்....

புதிய திருமதிகள்...
திரு...புலவர். அவர்கள்...
பணிபுரியும் உயர் அதிகாரிகள்...

இதில் "தீமையே" என பேச இருக்கும் அணியினர்...

இல்லத்தரசிகள்...
ஆசிரியர்கள்,பேராசிரியர்கள்...
கல்லூரி மாணவ,மாணவிகள்...

சரியோ, இரண்டு அணியிலும் அனைவரையும் அழைத்து விட்டேன்.
இதனால பட்டிமன்றத்துக்கு எல்லோரையும் நான் அழைக்கிறது பெரிய மூவி தியேட்டருக்கு... ஜாலியா பாப்கார்ன்,முறுக்கு,கூல்ட்ரிங்க்ஸ்,ஐஸ்க்ரீம் எல்லாம்(நீங்களே வாங்கிக்கோங்க!!!),இன்னும் என்னவெல்லாம் வேணுமோ சாப்பிட்டு சும்மா.............தெம்பா வந்து நாலு வரி சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டு போங்க.......

மேற்கு கோடியிலிருக்கும் எனக்கு பொழுது போகறதுக்குள்ள கிழக்கு கோடி நம் மக்களுக்கு பொழு விடிஞ்சி அடுத்த நாள் வந்துடுது..........அதனால இப்போவே போட்டுட்டேன்.

அனைவரும் வாரீர்!!! அனுமதி இலவசம்....!!!!!

அனைவரையும் அழைக்கிறேன்...
எல்லோரும் வந்து பார்த்துட்டு போயி நல்லா யோசிச்சு கொஞ்சம் நகைச்சுவையா... கொஞ்சம் சீரியஸா...உங்க கருத்துக்களை ரெடி பண்ணிட்டு திங்கள் வந்து உங்க வாதங்களை தொடங்குங்க...

நடுவர் அவர்களே!!! என் முதற்கண் வணக்கங்கள்... இந்த பட்டிமன்றத்தில் நான் நன்மை என்ற அணியில் பேசப்போகிறேன்.. என் வாதத்துடன் நாளை வருகிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, வாங்க முன்னாள் நடுவரே! டயர்டா இருப்பீங்கன்னு நினைச்சேன்...நீங்களாவது வந்தீங்களேன்னு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

வழக்கமாக ஏதாவது த்ரெட் போட்டுவிட்டு வாங்க! வாங்க!! வாங்க!!! ன்னு கூவி கூவி அழைக்கிறதே எனக்கு வேலையா போச்சு.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சனி என்னை விட்டு போகலை போலிருக்கு.......... இங்கேயும் அது தொடருதே...

பட்டிமன்றம் ஏன் இப்போவெல்லாம் நடக்கறதில்லை?, தொடர்ந்து நடத்துங்கன்னு சொன்னவங்களையும் கூட காணல.....இப்படியா ஒரு நடுவர பொலம்ப வைப்பீங்க............ வழக்கம் போல போயி என் சொந்த வேலைய பார்க்கிறேன்.........
வரட்டுமா...........இலா, உங்க கூட பிறகு வந்து பேசறேன்.

உமா.. உங்க புலம்பலை கண்டு மனசு தாளலை.. அதான் விரதத்தை உடைச்சு எழுதிட்டேன்.. பொதுவா திங்கள் காலை தான் ஆரம்பிக்கும்.. நம்ம நேரப்படி ஞாயிறு மாலை மாதிரி ஆரம்பிச்சிருக்கணும்.. கொஞ்சம் முன்னாடியே ஆரம்பிச்சுட்டீங்க.. உங்களுக்கு தெரியாதா.. சனி ஞாயிறு கூட்டம் கம்மியா இருக்கும்.. கவலை வேண்டாம் - போக போக வெற்றி நடை போடும்.. உங்களோட மத்த த்ரெட்ஸை போலவே.

என்னால இன்னும் கொஞ்சம் நாளைக்கு எதுலயும் கலந்துக்க முடியாது. பேசப் போற எல்லாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நடுவருக்கும் தோழிகளுக்கும் வணக்கம்.

நானும் இலா அணியே அதாவது நன்மை என்ற அணிக்கே என் ஓட்டு. இப்படித்தான் முதலில் நினைத்து பதிவு செய்து விட்டு ஒரு வாரப்பத்திரிக்கை படித்தேன். அந்த கணம் என் முடிவு மாறிவிட்டது. மனசாட்சிக்கு புறம்பாக என்னால் நன்மை என்று சொல்ல மனம் வரவில்லை. தீமையே என்ற அணியில் வாதிடவே விரும்புகிறேன். நன்றி
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவருக்கும் படம் பார்க்க வந்த தோழிகளுக்கும் மற்றும் விமர்சிக்க வந்திருக்கும் தோழிகளுக்கும் வணக்கம்.

இன்றைய படங்கள் சமூகத்தில் பெரும்பாலும் தீமை பயக்கின்றனவாகவே இருக்கின்றன என்பதே என்வாதம். நல்ல கருத்துக்கள் சொல்கின்ற படங்கள் வருகின்றன. இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால் இளையர்கள் மனதில் பட்டென்று பற்றிக்கொள்ளும் விதமாக தீய செயல்களை ஹீரோயிசமாக காட்டக்கூடிய படங்களே மிக அதிக அளவில் வருகின்றன என்பதே வேதனைக்குரிய விஷயம். இன்றைய பெரும்பாலான படங்களில் ரவுடிகளும் பொறுக்கிகளும்தான் ஹீரோ. அடிப்பவந்தான் ஹீரோ அடிவாங்குபவன் வில்லன் என்ற எண்ணம் இளையர்கள் மனதில் பதிக்கப்பட்டு விட்டன இப்படங்கள் மூலம்.

குழந்தைகள் படம் என்ற லேபிலோடு வரும் அனிமேஷன் சித்திரங்கள் பெரும்பாலானவற்றில் கூட வன்முறைகள்தான் காண்பிக்கப்பட்டுகின்றன. பசங்க போன்ற நல்ல படங்கள் உங்கள் கண்ணில் படுவதில்லையா என்று கேட்காதீர்கள். அது போன்ற நல்ல குழந்தைகளுக்கான தமிழ் படங்கள் ஆண்டுக்கு ஒன்றாவது வருகிறதா என்றால் பல ஆண்டுகளுக்கு ஒன்று என்ற ரீதியில்தான் வருகின்றன.

பெரும்பாலான படங்கள் நாம் குழந்தைகளுடனேயேதான் சென்று பார்க்கிறோம். ஆனால் நம்மால் நெளியாமல் சில படங்களை முழுமையாக பார்க்க முடிகிறதா? காமடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களும் பெண்கள் வெறும் போகப்பொருளாக காட்டப்படுவதும்தானே இன்றைய சினிமாக்கள். இன்றைய தமிழ் சினிமாவில் காமடி என்பதே அடிவாங்குவதுதானே! முன்பு செந்தில் கவுண்டமணியிடம் மட்டும் அடிவாங்கினார். இப்போது வடிவேலு ஊரெல்லாம் அடிவாங்குகிறார். மற்றவர் துன்பத்தை ரசிக்க கற்றுக்கொடுத்ததை விட இந்த சினிமாக்கள் என்ன செய்தன? கேட்டால் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று ரசிகன் மேல் பழியைப் போடுகிறார்கள். நல்ல படங்களை ரசிக்கும் படி எடுத்தால் யாரும் பார்க்கமாட்டோம் என்று சொல்வதில்லை. எடுத்துக்காட்டுக்கு பார்த்திபன் கனவு, மொழி, அபியும் நானும் போன்ற படங்கள். இவற்றை மக்கள் வெற்றியடைய செய்தார்களே! உடனே நல்ல படங்கள் வருகின்றன அதனால் அவை நன்மையே என்று எதிரணியினர் கொடி பிடிக்க வேண்டாம். இப்படிப்பட்டவை ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில்தான் வெளியாகின்றன. மற்றவை முக்கால்வாசியும் வெறும் குப்பைதான்

பெரியவர்களுக்கு தெரியும் திரையில் வருவது வெறும் fantacy என்று. ஆனால் குழந்தைகளும் பதின்ம வயது இளைஞர்களும் திரையில் காண்பவற்றை உண்மை என்றே நம்பி அது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சக்திமான்(தொலைக்காட்சி தொடர்களும் இதில் உட்படும்தானே) பார்த்து உயிரை விட்ட குழந்தைகள் எத்தனை பேர்?

ஆரம்ப காலங்களில் முதிர்ந்த இருவருக்கிடையே ஏற்படும் காதலைத்தான் திரைப்படங்கள் சொல்லியது. பின்னர் கல்லூரிக்காதல், ப்ளஸ் டூ காதல் என்று சொல்லி இப்போது பத்தாம் வகுப்பு காதலைப்பற்றிய படங்கள் வருகின்றன. அந்த வயதில் ஏற்படுவது வெறும் இனக்கவர்ச்சி என்பது கூட இயக்குனர்களுக்கு தெரியாதோ என்னவோ? இப்படிப்பட்ட படங்களை பார்க்கும் ரெண்டும் கெட்டான் வயது குழந்தைகள் காதல் என்ற பெயரில் சிக்கிச் சீரழிந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். சமூகத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை?!

அமிர்தத்தில் ஒருதுளி விஷம் கலந்தால் போதும். மொத்தமும் விஷமாகி விடும். ஆனால் முக்கால் வாசி விஷத்தோடு கால்வாசி அமிர்தத்தை கலந்து விட்டு அது அமிர்தம் என்று சொன்னால் நம்புவது கடினம் தோழிகளே!

நன்றி. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே.... முதலில் இப்பாலைக்குடித்து கூலாகுங்கோ. பின்னர்தான் என் பேச்செல்லாம் புரியும். பந்தி பந்தியாக எழுதவில்லையென்றாலும் என் பேச்சையும் கொஞ்சம் கவனியுங்கோ. இருப்பினும் ரொம்ப அநியாயம்... ரிக்கெட் மட்டுமா இலவசம்... ஏனையவற்றை நாங்களே வாங்க வேண்டுமோ?:).. பறவாயில்லை தொண்டை காயக்காயப் பேசிவிட்டுப் போகிறோமே:)..

தொடர் விரதங்களால் எனக்கு ஒழுங்கா ஓடி ஓடிப் பதிவுகள் போட முடியாமல் இருக்கு.

சொன்ன சொல்கேட்டு கரெக்ட்டா நேரத்துக்கு தலைப்பைப் போட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள். அதுசரி இத்தலைப்பு நீங்களே தெரிவு செய்ததோ? ஏதோ இங்குள்ள தலைப்புக்களில்தான் தெரிவு செய்யவேண்டும் எனவும் ஒரு விதிமுறை இருக்கெல்லோ. எனக்குச் சரியாத்தெரியேல்லை.. எனக்கெதுக்கு ஊர்வம்பு:). நீங்கள் நல்லதலைப்பையே போட்டிருக்கிறீங்கள்... தொடரட்டும் வாழ்த்துக்கள்.

நானும் இம்முறை இலா கட்சிதான். சினிமாவால் நன்மையே அதிகம். தீமை இல்லையெனச் சொல்லவில்லை, குறைவுதான்.
இப்போ மக்கள் அன்னம் போல வாழப்பழகிக்கொண்டார்கள், எனவே அவர்களுக்கு நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கத்தெரியும். சினிமாவை எல்லோரும் பொழுதுபோக்காகவே பார்க்கிறார்களே தவிர சீரியசாக எடுப்பது குறைவே. இன்னும் சொல்லப்போனால் எமக்கு தெரியாத, பல நாட்டு விஷயங்களை சினிமா எமக்குக் காட்டுகிறது. சீரியல்கள்கூட குடும்பங்களில் நடக்கும் சிக்கல்களைக்காட்டும்போது, எமக்கும் நல்ல எண்ணங்கள் உதிர்க்கிறது.

மனம் சோர்வாக இருக்கும்போது வடிவேல்/விவேக்கின் நகைச்சுவைகளைப் பார்த்தால் எம்மையும் மீறிச் சிரிப்பு வருகிறது. இதனால் மனதுக்கு புத்துணர்ச்சியே கிடைக்கிறது. இன்னும் எழுதுவேன்... நேரம் போதாமல் இருக்கு மீண்டும் வருவேன். யாரையும் காணவில்லையே எனப் புலம்பி மனம் சோரக்கூடாது நடுவரே.... நிட்சயம் வருவார்கள் எல்லோரும்.

சந்தனா... நழுவக்கூடாது.. ஒரு கட்சியைச் சொல்லி பதிவும் போடவேண்டும்.

கவிசிவா.. ஆகா இம்முறை எதிர்க்கட்சியில்... பார்ப்போம் சனிமாற்றம் எந்தப்பக்கம் காற்றை "ஏத்துகிறதென்று".

பி.கு:)
வழக்கமாக ஏதாவது த்ரெட் போட்டுவிட்டு வாங்க! வாங்க!! வாங்க!!! ன்னு கூவி கூவி அழைக்கிறதே எனக்கு வேலையா போச்சு//// எதுக்கும் மனம் சோரக்கூடாது.

இன்னொரு விஷயம், என் அனுபவத்தில் கண்டது. எப்பவும் எல்லோரும் வந்து என் வீட்டிலேயே தேத்தண்ணி குடிக்கவேணும் என நாம் நினைக்கக்கூடாது, நாமும் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் போய்த் தேத்தண்ணி குடித்தால்தான், அவர்களும் எம் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். அறுசுவையும் கலகலப்பாக இருக்கும். இதை போன பட்டிமன்றத்திலும் நான் சொன்னதாக நினைப்பிருக்கு. இது எல்லோருக்கும் பொதுவான ஒரு கருத்துத்தான். நல்ல கருத்தைச் சொன்ன அதிராவோடு யாரும் கோபித்திடக்கூடாது.

///பட்டிமன்றம் ஏன் இப்போவெல்லாம் நடக்கறதில்லை?, தொடர்ந்து நடத்துங்கன்னு சொன்னவங்களையும் கூட காணல.....இப்படியா ஒரு நடுவர பொலம்ப வைப்பீங்க............/// உண்ட களை தொண்டனுக்கும் உண்டு, என்பதுபோல, சொன்னவர்களுக்கும், பிரச்சனைகள், வரமுடியா சூழ்நிலைகள் வரலாம். எனவே தாமதமானாலும் எல்லோரும் வருவார்கள்.

உங்கள் பட்டிமன்ற ஆரம்பம் மிக நன்றாக இருக்கு. எனவே தொடர்ந்து நல்லபடி நடாத்துவீங்கள்.. என்ற நம்பிக்கை அதிகமாயிட்டுது. கீப் இற் அப்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அனைவருக்கும் என் வணக்கம்,
நான் தீமையே, என்று ஆரம்பித்து கவிசிவா அணியில் இணைக்கிறேன்.
சினிமா என்பது பொழுதுபோக்கு தான்.ஆனால் அது தரமாக இருந்தால் தான் குடும்பமாக இணைந்து பார்த்து கதை,நகைசுவை,பாடல்களை ரசிக்கவும்,சிரிக்கவும் முடியும்,இல்லையெனில் தவறாக நடத்தி தீமை தரும் குடி,சீட்டாட்டம்,சூதாட்டம் போன்ற பொழுதுபோக்குகளில் ஒன்றாக கருதப்படும்.இப்போது தரம் வாய்ந்ததா இல்லையா என்று பார்த்தால் நிச்சயமாக நூற்றில் 90%படங்கள் தரம் இல்லை.10% மட்டுமே நல்ல கதை,சிரிப்பு உள்ளது.ஹீரோயினிக்கு பணபற்றாக் குறைக் காரணமா என்ன என்று தெரியவில்லை,ரசிகர்களின் பெயரை சொல்லி துணிகளை குறைக்கின்றனர்.ஒரு சிலரே நாகரீகமாக படம் எடுக்கின்றனர்.எந்த வீட்டிலாவது அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,தங்கை உடன் அமர்ந்து சினிமா முழுமையாக பார்க்கமுடியுமா?இப்ப வரும் பாடல் காட்சிகளில் நாம் இசையே,பாடல் வரிகளை ரசித்தால் கூட அண்ணனோ,பாட்டி,தாத்தா என யாரோ குடும்பத்தில் முகம் சுளிப்பர்,என்னப்பா வேறு மாத்து என்பர். இதுமட்டுமின்றி இன்னும் நிறைய தீமை பற்றி கூற மீண்டும் வருவேன்.
வாய்ப்புக்கு நன்றி.
அன்புடன்
சுபத்ரா.

with love

உமா, இப்பெல்லாம் பட்டிமன்றம் ஸ்லோவாகவே போகிறது. அதற்காக நீங்க கவலைப் படவேண்டாம். நீங்களாக முன்வந்து நடுவர் பொறுப்பை ஏற்றதற்கு ஒரு ஷொட்டு (குட்டு இல்லை:) அப்புறம் இந்த தலைப்பில் நீங்க உலக திரைப்படங்கள் என்று சொல்லியுள்ளதால் நானும் என் மூளையை குடைஞ்சிட்டு பிறகு வருகிறேன்:)

நடுவரே! என்னோட வாதங்களுடன் வந்தாச்சு... போன வார இறுதியில் விருந்தினர் வந்ததால் இந்த தாமதம்....
உலக திரைப்படம்ன்னு சொல்லியதால் தான் இந்த அணியிலே சேர்ந்தேன்...
வாங்க கவிசிவா!!! எனக்கு தெரியும் கொஞ்சம் வேலையா அசந்து இருந்தா முதல் ஆளா வந்துடுவீங்கன்னு...
என்னம்மா செய்ய எவ்வளவு காலமா ராமாயணத்தை சொன்னாலும் எல்லா கருத்தையுமா மக்கள் எடுத்துக்கிறங்க... அது தான் இந்த திரைபடங்கள் மூலமா குட்/பேட் போன்றவற்றை சொல்ல வேண்டி இருக்கு.. வருஷத்தில ஒரு நாள் தீபாவளி லேகியம் சாபிடவே பிடிக்கலியே அப்புறம் நல்ல கருத்தாவே சொல்லிட்டு போனா இன்று திரை உலகம் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காது.. எப்பவோ முடிந்து இருக்கும். அப்புறம் இன்னமும் நாடகங்கள் ( என் ஃபேவரிட்) மட்டும் தான் இருக்கும்.. உலக அரங்கில் என்று சொல்ல போனா மியூசிகல்ஸ்...

திரைப்படங்களது வேலை என்டெர்டெயின்மென்ட் யாராவது எஜுகேஷனல் என்று சொன்னார்களா.. திரைப்படம் என்று எடுத்தால் இன்டஸ்ட்ட்ரி வந்து பொழுதுபோக்கு.. அதுல அங்க இங்க கொஞ்சம் நல்லதை கலந்து தான் கொடுக்க முடியுமே தவிர எல்லா படமும் எஜுகேஷ்னலா இருந்தா அவார்ட் மூவி மாதிரி யாருக்குமே தெரியாது...

ரெண்டாவதா இன்னும் ஒரு டிபேட்டபிள் பாயிண்ட்.. எக்ஸ்கியூஸ் மி!!!
//இளையர்கள் மனதில் பட்டென்று பற்றிக்கொள்ளும்
இன்றைய மக்கள் வாழ்க்கையில் பார்க்காததையா படமா எடுக்கிறங்க... அதுக்கு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி எல்லாம் வேணும்... அதெல்லாம் இப்ப ரொம்ப இல்ல படம் எடுப்பவர்களிடம்... அப்புறம் இளையவர்கள்ன்னு சொல்லி எடுத்த எடுப்பிலே என்னை பேச வைக்கிறீங்க..

யார் சொன்னாங்க.. இளைஞர்கள் பத்தி.. சொல்லுங்க.. ஒரு குடும்பத்தில யாரவது ரோல் மாடல் அம்மா/அப்பா/உறவினர்.. இப்படி இருந்திட்டா ஏன் ஹீரோ எல்லாம் காட்பாதரா வழிபடுகிறார்கள்.. அதனால் இது மக்களின் குணக்கேடே தவிர திரைப்பட துறையினரின் பணி அல்ல... The present day youth does not have proper guidance or role model to follow. We do not have responsible adults to be a role model for our adolescents

//குழந்தைகள் படம்
பெற்றோருக்கு படம் எப்படி இருக்கும் என்று தெரியனும்.. கேட்ட்க்கணும்... பிஜி 13 ஆ... 5 வயதுக்குள்ளான குழந்தைக்கு ஏற்ற அளவில இருக்குமா இல்லையான்னு..... குழந்தைகளை கூட்டி போகும் முன்.. எப்படியாவது இதுகள் தொல்லை ஒரு 2 மணி நேரத்துக்கு இல்லாம இருந்தா சரின்னு இருக்கவங்க தான் அதிகம்...
என்னைக்கேட்டா குழந்தைகளுக்கு ஏற்ற படம் இல்லைனா கூட்டி போகவேண்டாமே... நீங்க மட்டும் போகணும்ன்னா குழந்தைகளுக்கு ஏற்ற பேபி சிட்டிங் ( இன் - லாஸ்) ஏற்பாடுசெய்திட்டு போங்க...

உலக அளவிலன்னு சொன்னதால சொல்கிறேன்.. அருமையான படங்கள வருது.. எனக்கு அனிமேட்டட் படங்கள் ரொம்ப பிடிக்கும்.. முதல் நாள் முதல் வரிசை கோஷ்டி.. பல படங்கள் பார்க்கும் போது மோட்டிவேஷன் அதிகமா வரும்... உதாரணம்... பர்ச்யூட் ஆஃப் ஹாப்பினெஸ்... ஹோம்லெஸ் டு ஹார்வேர்ட்... ப்ஃபேசிங் த ஜயன்ட்ஸ் ( கட்டாயம யூடூப் வீடியோ பாருங்க).. ராக்கி ... பில்லியன் டாலர் பேபி....
பிற மொழிப்படங்கள் ( பிரெஞ்ச்.. டச்சு.. ஜெர்மன்.. ஜப்பானீஸ்... அரபிக்) எல்லாப்படங்களும் ( கீழ டிரான்ஸ்லேஷன் வருமே :)) இதே மாதிரி தான் ஒரு காமிபினேஷன்.. உங்களுக்கு மோட்டிவேஷன் வேணுமா பொழுது போகணுமா.. அவ்வளவு தான் கேள்வி..

அமிர்தம் விசம் என்று குழம்பாதீங்கோ கவிசிவா... ஜஸ்ட் ஃபார் ஃபன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்