வாழைப்பூ வடை

தேதி: October 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (7 votes)

 

வாழைப்பூ - 150 கிராம்
பொட்டுக்கடலை - 6 மேசைக்கரண்டி
செத்தல் மிளகாய் - 5
பெருங்காயம் - கால் தேக்கரண்டியை விட குறைவு
தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 30 கிராம்
மோர் - ஒரு டம்ளர்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

வாழைப்பூவை மோர் சேர்த்து, அவித்து எடுத்து நன்கு பிழிந்துக் கொள்ளவும் (அதிகம் வேக வைக்க தேவையில்லை). பொட்டுகடலை, மிளகாய் வற்றல், தேங்காய்ப்பூ சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பூவுடன், நறுக்கின வெங்காயம் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
வாழைப்பூ, வெங்காயத்துடன் அரைத்த கலவை, 1 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி தட்டையாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடைகளை ஒன்றொடு ஒன்று ஒட்டாமல் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான, சத்தான வாழைப்பூ வடை தயார். இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள், திருமதி. சீதாலெஷ்மி அவர்களின் குறிப்பான வாழைப்பூ வடை செய்து பார்த்ததை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ,அதிரா அவர்களுக்கு ரொம்ப நன்றி .நான் இவ்வளவு நாளா வாழை பூவை வீணாக்கி உள்ளேன் .நீங்கள் செய்த வாழை பூ கரி நேற்று தான் செய்தேன் .ரொம்ப நன்றாக இருந்தது .நீங்கள் கட் பண்ணிய விதம் பார்த்து நான் வியந்து
போய்விட்டேன் .இன்று வாழை பூ வடை பார்த்தும் ஆகா என்று செய்ய தோன்றுகிறது .நான் முதன் முதலில் இப்போதுதான் உங்கள் வாழைபூ கரி செய்து உள்ளேன் .இனி தான் உங்கள் சமையலை தேடி கண்டு பிடித்து சமைக்க வேண்டும் .
அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

நான் எதிர்பார்க்கவில்லை!!!
இத்தனை விரைவாக குறிப்பு வெளிவரும் என்று. மிக்க நன்றி. நன்றி சொல்ல வார்த்தையில்லை....

ஐஸ்வர்யலஸ்மி... கறி செய்தீங்களோ? மிக்க நன்றி. இதுவும் நன்றாக இருந்தது. செய்துபாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எனக்கு இந்த வடை ரொம்ப பிடிக்கும் அதிரா,ஊரில் ஒரு முறை சாப்பிட்டதுண்டு,பிறகில்லை.
ஆனால் இங்கே வாழைப்பூ வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஒரே கசப்பு... என்ன செய்யறது... கசப்பை எப்படி போக்கறதுன்னு சொல்லுங்க நானும் மூன்று முறை கூட முயற்சித்து விட்டேன். நீங்க பதில் சொன்னால் திரும்பவும் ட்ரை பண்றேன்.

உங்க குறிப்பு நான் பல செய்துள்ளேன்.மிகவும் நன்றாக இருக்கும்.........ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கொரு ரீ கொடுங்க...

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

அதிர
இது என்னகு ரொம்ப பிடித்து.என் அம்மா செமையா செய்வார்கள்.அம்மா சமையல் நாபகம் வந்து கஷ்டமாகி விட்டது.ரொம்ப நன்றி.

உமா
வாழை பூ வாங்கும் பொது Dark நிறத்தில் வாங்கவும்.அது அவளவாக கசக்காது.

Anbe Sivam

Anbe Sivam

அதிரா.... இன்று தான் கவனித்தேன் இதை. எப்படி இப்படிலாம்??!!! படத்தை பார்த்ததுமே சாப்பிட தோனுது..... சூப்பர் அதிரா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்தாங்க ரீ..:)
உமா ரீதானே... இந்தாங்கோ குடித்திட்டு வடை சுடுங்கோ:).

வாழைப்பூவுக்கு, எங்கள் அம்மா சொல்வா, ஏதோ மொந்தன் பூ(கறிவாழை) என்றால் கைக்கும், ஏனையது கைக்காதென. அது சிலருக்கு பூவைப் பார்த்தே சொல்வார்கள், எனக்கதெல்லாம் தெரியாது. கடையில் விற்பனைக்காக எல்லாம் விற்பார்கள். ஆனால் என் அனுபவம், வாழைப்பொத்தியை வாங்கி வந்ததும் உடனேயே அரிந்து, பிரீஷ் பண்ணிவிடுவேன். பின்னர் தேவைக்கு எடுத்து சமைக்கும்போது எந்தப் பூவும் கைக்காது. இப்படி முயன்று பாருங்கள். சிலதுக்கு உப்பு கொஞ்சம் கூடினாலும் கைப்பைக் கொடுக்கும். மிக்க நன்றி.

சுடர், வனிதா மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்