மாதுளை மிக்ஸ்டு ஜுஸ்

தேதி: October 10, 2009

பரிமாறும் அளவு: 2(டம்ளர்) _ நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மாதுளை பழம் - 3
ஆப்பிள் பழம் - ஒன்று
ஆரஞ்சு பழம் - ஒன்று
பால் - 1/2 டம்ளர்
சீனி - 6 மேசைக்கரண்டி
தண்ணீர் - ஒரு டம்ளர்


 

பழங்களை நன்றாக கழுவிக் கொள்ளவும். மாதுளை பழத்தை உதிர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் ஆப்பிள் வெட்டியும் மற்றும் ஆரஞ்சு பழத்தை உரித்தும் சேர்த்துக் கொள்ளவும்.
இப்பழங்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று ஓட விடவும்.
பிறகு சீனி, பால், தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின்பு அதை வடிக்கட்டி விட்டு நார்மலாகவும், சில்லென்றும் குழந்தைகளுக்கும் கொடுக்கவும்.(ஐஸ் இல்லாமலே நனறாக இருக்கும்.)


பொதுவாக குழந்தைகளுக்கு பாக்கில் உள்ள ஜூஸ்தான் பெரும்பாலும் குடிக்க பிடிக்கும். ஃப்ரஷ் ஜூஸ் என்றால் ஆரஞ்சு, மேங்கோவைத் தவிர வேறு எதையும் விரும்புவதில்லை. டாக்டர்கள் மாதுளை பழத்தை அதிகம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் அதை எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு வீட்டிலேயே தயாரித்து டேஸ்ட்டாக கொடுக்கும் போது கொஞ்சம் விரும்பி குடிக்கின்றார்கள்.
மாதுளை உள்ளே இருக்கும் வெள்ளை தோலையும் கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம். அது மிகவும் உடம்பிற்கு நன்று. பெரியவர்களுக்கும் ஏற்றது. இனிப்பை மட்டும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு போட்டுக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அப்சரா.. எங்க வீட்டு மாதுளை சேர்த்து சுவையான ஜூஸ் செய்துட்டேன். குழந்தைகளுக்கு பிடித்திருந்தது. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி நலமா...?
குழந்தைகளுக்கு பிடித்திருப்பதை தவிர நமக்கு என்ன வேண்டும் சொல்லுங்க...
கருத்தினை வந்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வனி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.