எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்

தேதி: October 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிறிய கத்தரிக்காய்கள்-6
பொடியாக அரிந்த தக்காளி-1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம்-அரை கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லி-கால் கப்
புளி- நெல்லிக்காய் அளவு
வெந்தயப்பொடி- அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள்-3 ஸ்பூன்
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
நல்லெண்ணெய்- 4 மேசைக்கரண்டி


 

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். வெங்காயம், தக்காளி, சேர்த்து குழைய வதக்கவும். கத்தரிக்காய்களை நீளமாக அரிந்து சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து குழைய வதக்கவும். புளியைக்கரைத்து ஊற்றவும். கத்தரிக்காய்கள் பாதி வெந்ததும் தூள்கள் சேர்த்து எண்ணெயில் குழைய வதக்கவும். உப்பு சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hai mano i cooked this. it came out very well. thanks i also live in uae(abudhabi)