ஆட்டுக்கால் சால்னா(பாயா)

தேதி: October 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (20 votes)

 

ஆட்டுக்கால் - 2 செட்
வெங்காயம் - 2 (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மல்லிக்கீரை, கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 8
மைதா - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரையை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை நன்றாக அரைத்து வைக்கவும்.
ஆட்டுக்காலை வக்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும். இல்லையெனில் வக்கிய ஆட்டுக்காலே கடையில் கிடைக்கிறது.
சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 2-3 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும்.
கால் வெந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காய் வாடை அடங்கி சால்னா நெலுநெலுப்பாக இருக்கும்.
பின்பு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி கொட்டவும்.
சுவையான சத்தான ஆட்டுக்கால் சால்னா ரெடி. இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

இதனை பரோட்டா, சப்பாத்தி, இடியப்பம், ஆப்பம், தோசை, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சில்லி பவுடர் விருப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும், தனித்தனியாக மசாலா சேர்க்காமல் கறி மசாலா மட்டும் சேர்த்தும் செய்யலாம். அவரவர் சுவைக்கு தக்க மசாலா சேர்த்து இந்த முறையில் சமைத்தால் அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆசியா.... சூப்பர். அடுத்தமுறை ஆட்டுகால் இதுக்காகவே வாங்கனும் போல.... பார்க்கவே ஆசையா இருக்கு. கண்டிப்பா இன்னும் 1 வாரத்தில் செய்துட்டு சொல்றேன். நீங்க கொடுக்கும் குறிப்பும், அதை நீங்க கொடுக்கும் விதமுமே அதை செய்ய வெச்சுடுது. நல்ல குறிப்பு... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆசியா.... சூப்பர். அடுத்தமுறை ஆட்டுகால் இதுக்காகவே வாங்கனும் போல.... பார்க்கவே ஆசையா இருக்கு. கண்டிப்பா இன்னும் 1 வாரத்தில் செய்துட்டு சொல்றேன். நீங்க கொடுக்கும் குறிப்பும், அதை நீங்க கொடுக்கும் விதமுமே அதை செய்ய வெச்சுடுது. நல்ல குறிப்பு... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மிக்க மகிழ்ச்சி.நான் என் மகனுக்காக செய்யும் பொழுது கிளிக்கியது.மசாலா உங்க டேஸ்ட் க்கு மாற்றியும் செய்யலாம்.கருத்துக்களே இல்லையே என்று சிறிது ஏமாற்றம் இருந்தது,உங்கள் பதிவு இரட்டிப்பு மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆசியா மேடம் எப்படி இருக்கீங்க?பார்க்கவே மிகவும் நன்றாக உள்ளது.நான் முதலிலேயே பார்த்து விட்டு பின்னூட்டம் கொடுக்க வந்தேன்.ஆனால் கருத்து தெரிவிக்கும் பக்கத்தை க்ளிக் செய்தால்,எர்ரர் என்றே வந்து படுத்தியது.அதான் தாமதமாக சொல்ல வேண்டியிருந்தது.மன்னிக்கவும்.
ஆசியா மேடம் செய்த குறிப்பினை பார்த்து நன்றாக இருக்கு என சொல்லாமல் இருப்பார்களா..என்ன?அசத்தலான குறிப்பிற்க்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.எனக்கும் கூட இப்ப அதிகம் நேரம் கிடைக்காததால் சில சமயம் அறுசுவைக்கு அவசரமாக வந்து செல்கிறேன்.எதற்கு மன்னிப்பு எல்லாம்.உங்கள் அன்பே பெரிது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஐயோ ஆட்டுக்கால் குருமா பார்க்கும் போதே நாக்குல நீர் ஊறுது..ஏங்க வச்சுட்டீங்களே படத்தைப் போட்டு..ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குக்கா..

நிச்சயம் செய்து பாருங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரொம்ப சூப்பரான குறீப்பு ஆசியா, நம் இஸ்லாமிய இல்லஙக்ளில் செய்யும் முறை,

மைதா சேர்த்து எதுக்கு கழுவனும்.

Jaleelakamal

மைதா உப்பு சேர்த்து ஊறவைத்து கழுவதால் கால் வக்கிய வாடை,அழுக்கு போய் ஃப்ரெஷ் ஆக பளிச்சென்று இருக்கும்,வெந்தாலும் சதைப்பற்று கழண்டுவிடாமல் அருமையாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று (13.12.2009) ஆட்டுக்கால் சால்னா என் துணைவியார் மீனா அவர்கள் செய்தார்கள். சிறப்பாக இருந்தது. என் மன்களான அன்பு, திலிபன் சுவைத்து உண்டார்கள். உங்களின் சார்பாக மீனாவுக்கு வாழ்த்து தெரிவிப்போம். நன்றி. இனி ஒவ்வொரு ஞாயிறு கிழமையும் அறுசுவையே

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து மற்ற குறிப்புக்களை மீனாவிடம் செய்து பார்க்கச் சொல்லவும்.நீங்கள் அறுசுவைக்கு புதிதா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

hai,i'm new to this forum.i've gone thro' all ur receipes.where ever i see aattu kaal,it tends me to buy.since i don't know the exact preperation i left it.this time i'm not going to miss it.moreover everyone is giving their feedbacks in tamil.please help.

ஆட்டுகால் சால்னா சூப்பரா இருக்கு. குறிப்புக்கு ரொம்ப thanks.

ஏமாறாதே|ஏமாற்றாதே

Not mentioned about coconut scraping when to be mixed in paya

Ameenudeen 6 வது படத்தையும், அதன் செய்முறை வரிகளை படிக்கவும்.

we prepared your aatukaal paya second time...it came very well and superb taste...thank u so much...my 3 years baby ate more...

Leela Nandakumar

I tried ur receipe.....Its so tasty..My hubby likes it very much...Thanks for ur gud receipe.. Keep giving gud receipes...
rajirajesh

I tried ur receipe.....Its so tasty..My hubby likes it very much...Thanks for ur gud receipe.. Keep giving gud receipes...
rajirajesh

I tried ur receipe.....Its so tasty..My hubby likes it very much...Thanks for ur gud receipe.. Keep giving gud receipes...
rajirajesh