சமைத்து அசத்தலாம் பகுதி - 21, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -20, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -21 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை , beevi... (43), caroline..(42). Nithyagopal(39), Deva.(39), mdf...(37) ஐவரினதும் குறிப்புக்களைச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை நால்வரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (20/10) முடிவடையும். புதன்கிழமை(21/10), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

இத்தலைப்பில் கலந்து கொண்டவர்கள் இலா, இமா, ரேணுகா, வின்னி, ஹைஷ் அண்ணன், ஸ்ரீ, வத்சலா, ராணி, அம்முலு, சீதாக்கா, லஷ்மிசங்கர், லாவன்யாமூர்த்தி, கவிசிவா, ஜலிலாக்கா, சுவர்ணா, துஷ்யந்தி, ஆசியா, மாலி, வனிதா, விஜி, திருமதி.ஹுசைன் அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(12/10) சமைக்கத் தொடங்குவோம், நிறைய சமைத்து, அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நானும் வரட்டா, என்னையும் உங்க ரெயினில் சேர்த்துப்பீங்களா... இம்முறை இரண்டு சமையலாவது செய்து பார்த்துடறேன்.....சரியோ....

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

பொப்ஸ் உமா நல்வரவு. வாங்கோ... சமைத்துக்கொண்டுவந்தபின்னரேதான் ரீ தருவோம்:). ஏமாத்தமாட்டோம்:), கெதியா வாங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நான் சமைக்க ஆரம்பித்து விட்டேன்,என் கணக்கை ஓபன் பன்னுங்க,பீவி - சாண்விச் இட்லி இன்று காலை டிபன்,மீதம் சமைத்து சொல்கிறேன்,

உமா உங்களுக்கு இல்லாத டீ யா?கட்டாயம் தருவேன் சமையலை முடித்து கொண்டு வாங்க,உடனே டீ உங்களை தேடி வரும்,

அனைத்து தோழிகளும் குட்டி குட்டியா நிறையா சமைக்க வேனும் என்று அன்போடு கேட்டுகொள்ள்கிறோம்,இந்த முறை அதிகம் சமைப்பவர்களுக்கு தீபாவளி ஸ்பெஷலா ஒரு கம்பி மத்தாப்பு,ஒரு சங்கு சக்கரம், ஒரு புஸ்வானம்,ஒரு சாட்டை,இதெல்லாம் தருவோம்,அதுவும் இங்கே எனக்கு கிடைக்காது,அதனால் என் சார்பாக பாபு அண்ணன் வாங்கி ஹைஷ் அண்ணனிடம் கொடுப்பார்,அவர் உங்களுக்கு எல்லாம் சேர்த்து விடுவார்:))))))))அண்ணா அப்படியே எனக்கு ஒன்னு கொடுத்திட்டு போங்க:)))

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நாங்களும் முதல் பொட்டிக்கு வந்துட்டோமேல்லே.
நான் இப்பவே சமைக்க ஆரம்பித்து விட்டேன்:)
ரேணுகா! நிச்சயம் தீபாவளி ஸ்பெசல் உண்டுதானே ?
காமடி கிமடி பண்ணேல்லையே ?
இன்று நான் சமைத்தது கரோலின் மிருதுவான கேக்
நித்தியாவின் காரட் சூப்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அதிரா, ரேணுகா

நான் சமைத்தது:

பீவியின் குறிப்புகளில் இருந்து:

சரவண பவன் ஹோட்டல் சாம்பார்
ஆந்திரா பெசரட் தோசை.

சமீபத்தில் சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸில் உள்ள ரெஸ்டாரண்டில் பெசரட் தோசை சாப்பிட்ட போது, அதனுள்ளே ரவா உப்புமா வைத்து தந்தார்கள். அட, வித்தியாசமாக இருக்கிறதே, அறுசுவையில் பெசரட் தோசை குறிப்பு தேடி, செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், பீவி அவர்களின் குறிப்பில் ரவா உப்புமா வைத்துப் பரிமாறலாம் என்று எழுதி இருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சி.

கரோலின் குறிப்புகளைப் பொறுத்தவரை கேக், பிஸ்கட் வகைகள்தான் இருக்கிறது. நான் முட்டை சேர்த்து சமைத்தது இல்லை. பிஸ்கட் வகைகளும் இது வரை செய்ததே இல்லை. கேக், பிஸ்கட் வகைகள் பொறுத்த வரையில் நல்ல பிராக்டிகல் பயிற்சி வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பை மட்டும் படித்துப் பார்த்து செய்து பார்க்க தயக்கமாக இருக்கிறது.என்னிடம் உள்ள மைக்ரோ ஓவனில் பேக் செய்ய முடியுமா என்றும் தெரியவில்லை.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

யாரங்கே..... அந்த கணக்கபிள்ளையை கையோடு இழுத்து வாங்கோ.... என் கணக்கை சரியா துவக்க வேணும்.... புரிந்ததோ??!!!

பீவி குறிப்பில் இருந்து:

ஹோட்டல் தக்காளி சட்னி
சரவண பவன் ஹோட்டல் சாம்பார்

இரண்டு சமைச்சதுக்கு தான் இந்த சீனா'னு திட்டுறது கேக்குது.... நாளைக்கும் வருவோம்'ல..... ;) உஷாரா இருப்போம்ல.

சீதாலக்ஷ்மி.... கரோலின் அவர்கள் குறிப்புகள் நன்றாக இருக்கும். ஆனால் மைக்ரோவேவில் செய்யும் கேக் குறிப்பு இருக்கா அவருடையதில் என்று எனக்கு தெரியல. நேரம் கிடைத்தால் நான் தேடி தருகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பீவி சமையல் - ப்ரெட் பஜ்ஜி,காரட் சாலட்.இரண்டும் அருமை. என் கணக்கில் சேர்க்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ராணி தீபாவளி ஸ்பெஷல் அதிகம் சமைப்பவர்களுக்கு உண்டு,நிச்சயம் இங்கே பட்டாசு இல்லை,நம்ம அட்மின் அண்ணா என் சார்பா அனுப்புவார்,:)உங்க வீட்டுக்கு மேலே பிளைட் பறக்குதா என்று பாருங்க,நம்ம ஹைஷ் அண்ணா வருவார்,பரிசு தர:))))மிக்க நன்றி ராணி,தொடர்ந்து வாங்கோ

சீதா அக்கா முன்னமெ வந்துட்டீங்கள் மிக்க நன்றி,தொடர்ந்து வாங்க,கரோலின் குறிப்பில் பட்டர் பட்டன்,வளைவு பிஸ்கட் முட்டை அல்லாமல் இருக்கு,வேறு எதும் உண்டா என தெரியவில்லை,டிரை பண்ணி பாருங்க,எல்லாம் நல்லா வரும்,மிக்க நன்றி அக்கா ,தொடர்ந்து வந்து போங்கள்

அய்யோ வனி நான் பயந்தே போயிட்டேன்,அதிரா தான் நான் தீபாவளிக்கு பட்டாசு தரேன் சொன்னதும் எம்மை திட்ட வந்தார்களோ என நினைத்தேன்,வனிதா என்று பெயர் பார்த்ததும் நிம்மதி ஆனது:))))))))))தொடர்ந்து வரவீங்க,வரமுடியலை என்று சொன்னாலும் உங்களை யார் விட்டது,அப்பாடா கொஞ்சம் பயம் படுத்தாமல் வாங்க:))

ஆசியா அக்கா நலமா?நீங்கள் இங்க இருந்த போது நம்பர் அனுப்பியிருந்தால் நான் பேசியிருப்பேனே,அடுத்த முற்றை இங்கு வந்தால் நம்பரையும் அனுப்புங்க சரியா?தொடர்ந்து வாங்க அக்கா

அதிரா நான் செய்தது ஷாஹி தூக்ரே - பீவி,ரத்னா கபே சாம்பார் நித்யா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நேற்றும் இன்றும் நான் சமைத்தது
பீவியின் காரட் சலாட், பச்சைபயறு தோசை இரண்டும் நன்றாக இருந்தது
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்