தீபாவளி ஸ்பெஷல் பிளான்

அன்பான தோழிகள் அனைவருக்கும் என் வணக்கம்,அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்

இன்னும் நான்கு நாளில் தீபாவளி,எல்லாரும் ஒரு பிளான் போட்டு இருப்பீங்க தானே,

இந்த வருஷம் என்ன செய்ய போறீங்க,எல்லாத்து வீட்டிலும் என்ன ஸ்பெஷல் மெனு,என்ன பலகாரம் செய்தீங்க,என்ன செய்ய போறீங்க அப்படின்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க,எல்லாத்துக்கும் யூஸா இருக்கும்..

வாங்க நான் குத்து விளக்கு எல்லாம் ஏத்திட்டேன்

அன்புடன்
ரேணுகா

அன்பான தோழிகள் அனைவருக்கும் என் வணக்கம்,அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்

இன்னும் நான்கு நாளில் தீபாவளி,எல்லாரும் ஒரு பிளான் போட்டு இருப்பீங்க தானே,

இந்த வருஷம் என்ன செய்ய போறீங்க,எல்லாத்து வீட்டிலும் என்ன ஸ்பெஷல் மெனு,என்ன பலகாரம் செய்தீங்க,என்ன செய்ய போறீங்க அப்படின்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க,எல்லாத்துக்கும் யூஸா இருக்கும்..

வாங்க நான் குத்து விளக்கு எல்லாம் ஏத்திட்டேன்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணு,
எப்படி இருக்கிங்க? உங்களுக்கு, பையனுக்கு இப்ப பரவாயில்லையா? நல்லா, ஜாலியான த்ரெட் தொடங்கி இருக்கிங்க! தீபாவளிக்கு ரொம்ப பிஸியா தயாராகிட்டு இருக்கிங்கப்போல! போன வாரமே உங்க பதிவு எங்கேயோ பார்த்தேன், நிறைய குறிப்புகள் எடுத்துக்கொண்டிருப்பதைப்பற்றி : ) ந‌ட‌க்க‌ட்டும், ந‌ட‌க்க‌ட்டும்... உங்களுக்கு என் அட்வான்ஸ்டு தீபாவளி வாழ்த்துக்க‌ள் ரேணு!.

எங்க வீட்டிலும்கூட தீபாவளி களைகட்ட தொடங்கிவிட்டது. இந்த வருஷம் தீபாவளிக்கு, அம்மா வேற என்கூட இருப்பதால், எனக்கு ரொம்பவே ஜாலியா இருக்கு! அவங்களோட சேர்ந்து வீக்கென்ட் நிறைய பலகாரம் செய்தேன். இன்னும்கூட எங்க‌ லிஸ்ட் பாக்கி இருக்கு... அதிரசம், முந்திரி கேக், பூந்தி லட்டு, இப்படி... இந்த வாரம் முழுதும் இருக்கே. தினமும் ஒன்னா செய்திட ப்ளான்! :)

இதுவரை செய்தவை... காரம் ‍- தேன்குழல், ஓமப்பொடி, (முள்ளு) முறுக்கு & ரிப்பன் பக்கோடா/முறுக்கு.
ஸ்வீட்ஸ் - மைசூர் பாக், ரவா லட்டு, சோமாஸி (அப்பாபாடி... எத்தனை வருஷமாகிவிட்டது, இது நான் சுவைத்து! எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ஐய்ட்டம் இந்த வருடம் செய்தாயிற்று! அம்மாவிற்கு நன்றி!)

தீபாவளி அன்று போட்டுக்கொள்ள புது ட்ரெஸ் எல்லாம் இருக்கு (இந்தியாவிலிருந்து கொண்டுவந்த‌‌வை!) அன்று எங்க‌ள் தோழி ஒருவ‌ர் வீட்டில், பெரிய‌ கெட்டுக்கெத‌ர் ஏற்பாடு செய்திருக்காங்க‌... பாட்ல‌க் டின்ன‌ர். நிறைய‌ ஸ்வீட்ஸ், சாப்பாடு, ப‌ட்டாசு என்று அம‌ர்க்க‌ள‌ப்ப‌டுத்த‌ ஏற்பாடு! ம‌ற்ற‌து சந்தேக‌மில்லை, ப‌ட்டாசு?! (வெத‌ர் ஒத்துழைக்க‌வேண்டுமே?!, ம்ம்ம்... பார்க்க‌லாம்).

அப்புறம் ரேணு, நீங்க என்ன குத்துவிள‌க்கு ஏற்றிய‌தோட விட்டிட்டிங்க‌? உங்க‌ வீட்டு கொண்டாட்ட‌ங்க‌ளையும் சொல்லுங்க‌...
ம‌ற்ற‌ தோழிக‌ளும் வாங்க‌ப்பா... எல்லோருக்கும் அட்வான்ஸ்டு தீபாவளி நல் வாழ்த்துக்க‌ள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ தீபாவளி அம்மாவோடயா! நல்லா என்ஜாய் பண்ணுங்க.
ரேணு உங்களோட தீபாவளி ஸ்பெஷல் என்னான்னு சொல்லலியே!

எங்கள் தீபாவளி இந்த வருடம் சிங்கப்பூரில் என் நாத்தனார் குடும்பத்தோடு. முறுக்கு, ஓமப்பொடி மற்றும் மைசூர்பாக் செய்தாச்சு. இன்னும் குலாப்ஜாமூனும் தட்டையும், மிக்சரும் செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலையில் ரசவடை செய்ய வேண்டும். சிங்கையில் வெடிகள் எதுவும் வைக்க முடியாது. ஒன்லி கம்பி மத்தாப்பூ...

நாங்கள் இருக்கும் இடத்தில் தீபாவளி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களோடு நவம்பர் முதல் வாரத்தில். அன்றுதான் ஆசை தீர வெடி வெடிக்க வேண்டும் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய்
நான் இந்த வருடம் தீபாவளிக்கு டிரஸ் எடுத்தாச்சு,இந்த ஊரு டிரஸ் தன ;-(.
இன்று தான் ஒரு பலகாரம் செய்தேன்.பக்கத்துக்கு வீட்டு ஆந்தர அம்மணி ஒரு புது வகையான முறுக்கு சொன்னார்.சூப்பரா வந்து இருக்கு.ஸ்வீட் என்ன செய்வது என்று யோசிக்கணும்.

இங்கு வந்த முதல் வருடம் எல்லடை மற்றும் மைசூர் பாக் செய்தேன்.செம காமெடி.எல்லடை இல நெறைய வெண்ணை போட்டதில் அடுப்பில் போட்டவுடன் உதிர்ந்து ஓடி விட்டது.
மைசூர் பக வழித்து சாப்பிட வேண்டியது ஆகிடுச்சு.பாயசம் போல பதம் ஆகி விட்டது.அதில் இருந்து தீபாவளி என்றாலே என் கணவர் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவர்.என்ன பலகாரம் என்று சொல்லி விடு குடு நான் பாட்டும் பாயசம் அன்று மைசூர் பக சாப்பிட போகிறேன் என்றஉ ;-)

Anbe Sivam

Anbe Sivam

ஸ்ரீ நான் நலமே,பையனும் நலம்.ஸ்கூலுக்கு போகிறான்.

பிஸி இன்னும் ஆரம்பம் ஆகலை ஸ்ரீ.உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீ.
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்

உங்கள் பிளான் சூப்பரா இருக்கே,அம்மா கூட இருப்பதால் ஜாலியா பலகாரம் செய்யறீங்களா?ம்ம் நடக்கட்டும் விருந்து,நீங்களும் அம்மாவுக்கு புதுசா
ஸ்வீட் செய்து கொடுங்க,ஆபிஸ் எப்படி போயிட்டு இருக்கு?பிஸி இல்லையா?

தீபாவளி டிரெஸ் ரெடி எனக்கு ஊருக்கு போகும் முன் எடுத்தேன்,அதே புதுசா இருக்கு
என்னவர் பக்ரித் க்கு எடுத்துக்கோ எனக்கு இப்ப நேரமில்லை என்று சொல்லிவிட்டார்

பையனுக்கும் அவருக்கும் எடுத்துட்டேன்,இங்க பட்டாசு இல்லை:(எனக்கு அதான்
பெரிய கவலை,பிரெண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க,
குறிப்பா இந்த முறை என்னவர் ஆபிஸ் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார்:))

விடுமுறை நாளில் வருவதே பெரிய மகிழ்ச்சி,எப்பொழுதும் நன்பர்கள் எல்லோரும் மாலையில் வருவார்கள்,இந்த முறை விடுமுறை நாள் என்பதால் எந்நேரம் எல்லாருக்கு ஒத்து
வரும் என்று யோசித்து கொண்டே இருக்கேன்

கவிசிவா உங்கள் வீட்டுலையும் தீபாவளி பலகாரம் மணக்க ஆரம்பித்துவிட்டதே,கம்பி மத்தாப்பு உண்டா நல்லது.எனக்கு அந்த கம்பி மத்தாப்பும் இல்லை:(((என் பிள்ளைக்கு தீபாவளியன்று ஊரில் காட்ட வேண்டும் என்று ஆசை
ஆனால் அது ஒத்து வரமாட்டீங்குது,டிரெஸ் எல்லாம் எடுத்து விட்டீங்களா?

சுடர் உங்க கதை என்னோடு ஒத்து வருது,நானும் ஆரம்பத்தில் இப்படி தான் சமைத்தேன்
ஆனால் இப்போ தேறிட்டேன்,எல்லாம் பழக பழக வந்திடும்,

ஸ்ரீ கவி என் திபாவளி லிஸ்ட் புழுங்கலரிசி முறுக்கு,கார சேவ்,மைதா பிஸ்கட்
ஸ்வீட் சேவ்,கோதுமை உருண்ட,ரவா உருண்டை,லட்டு,சோமாசா,நானாகத்தா,பிளவர் கேக்,குலோப் ஜாமுன்
இது வரை யோசித்தது,இன்னிக்கு காரசேவு செய்தேன்,முறுக்கு இன்ரு இரவு செய்யனும்,என்னவர்அவர் இருக்கும் போது தான் செய்யனும் என்று சொல்லிட்டார்,இல்லை என்றால் இன்னேரம் முறுக்கு சுட்டு முடித்து இருப்பேன்,சிலது புதுசா டிரை பன்னறேன்,போன வருடம் செய்ததே இந்த வருடம்
செய்ய பிடிக்கலை,அதான் புதுசா தேடி தேடி செய்து கொண்டு இருக்கேன்,அட மற்றவர்கள் எல்லாரும் எங்கப்பா போனிங்க கொஞ்சம் வந்து தலைய காட்டிட்டு ஓடுங்க

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தீபாவளிக்கு நான் இதுவரை யாரையும் மதியம் அழைத்தது இல்லை,காலை அல்லது இரவு என்றால் டிபன் அயிட்டம் வெரைட்டியா பன்னிடுவேன்,இது வரை அப்படி தான் செய்தேன்
இந்த முறை எல்லோரும் லன்ஞ்க்கும் இருப்பார்கள் என்ன செய்தால் நல்லாருக்கும்,நான் நெய் சோறும்,வெஜ் பிரியானியும் யோசித்து வைத்துள்ளேன்,இதுக்கு என்ன மேட்ச் ஆகும், வேற என்ன சாப்பாடு செய்தால் நல்லா இருக்கும்,கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க,

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அடடா சென்னையில தீபாவளி பட்டாசெல்லாம் சும்மா சூப்பரா விண்ணில் பறக்குது வானமே கலர்புல்லா இருக்கு....ரேனு கவிசிவா ஸ்ரீ நலமா?நா ஊருது உங்க பலகாரங்களைலாம் பார்குறப்ப எனக்கு ஒரு பார்சல் போட்டுடுங்க பாவம் கை பிள்ளைகாரி இல்லை இல்லை தவளும் பிள்ளை காரி :D

ஆமா பண்டிகை அப்ப அசைவம் செய்ய மாட்டீங்களா சின்ன சந்தேகம்

ஹாய் Chudar2009 நலமா?புதுவரவா உங்க போன வருஷம் மெனு ரொம்பவே சூப்பர் :)

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

தீபாவளி கொண்டாடப் போகும் எல்லாத் தோழிகளுக்கும் என் மன்மார்ந்த வாழ்த்துக்கள்!!

என் இளைய மகன் பட்டாசு வெடிப்பதற்காக தீபாவளிக்கு சனிக்கிழமை மட்டும் இந்தியாவுக்குப் போகலாம் என்று அரித்துக் கொண்டிருக்கிறான்!

அப்புறம் ரேணு, என் தீபாவளி ப்ளான் என்னன்னு கேட்டீங்கன்னா, இந்த முறை தீபாவளி சனிக்கிழமை வர்றதினால எனக்கு லீவுதான்!! ஆனா பாருங்க தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்க என் வீட்டில் சன், கலைஞர் போன்ற சேனல்கள் எதுவும் இல்லை. அதனால நான் ரொம்பவே ஃப்ரீ!!

ஸோ, என்னை தீபாவளி விருந்துக்கு யார் அழைப்பாங்கன்னு பார்த்துட்டிருக்கேன்!! பார்க்கலாம், எனக்கு விருந்தளிக்கும் பாக்கியம் பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யாருன்னு!!

இதான் சாக்குன்னு இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கால இருக்கவங்க எல்லாம் வாங்க, வாங்கன்னு கூப்பிடக்கூடாது!! யு.ஏ.இ காரங்க, அதிலும் அபுதாபிகாரங்களுக்குத்தான் முன்னுரிமை!!

(பி.கு.: ரேணுகாவும் அபுதாபிதான்!!)

மர்ழியா எப்படி இருக்கீங்க?பேசி ரெம்ப நாள் ஆகுது,மர்ழி உங்களுக்கு இல்லாததா அட்ரஸ் கொடுங்க உடனே அனுப்பறேன்:)குழந்தைங்க எப்படி இருக்காங்க??பொண்ணு சமத்தா ஸ்கூல் போறாளா?பையன் தவள ஆரம்பித்துவிட்டானா?எத்தனை மாதம் ஆகுது?
எனக்கும் கம்பி மத்தாப்பு மட்டும் பார்சல் அனுப்புங்க அது தான் நான் பயம் இல்லாமல் வெடிக்கும் ஒரே பட்டாசு:))))

பண்டிகை போது செய்ய மாட்டாங்க,ஆனால் தீபாவளிக்கு செய்வாங்க,மற்ற எதுக்கும் செய்ய மாட்டோம்.ஆனால் தீபாவளி இந்த முறை சனிகிழமை புரட்டாசி மாதம் வருவதால் முக்கால் வாசி பேர் சமைக்க மாட்டாங்கப்பா..

அன்புடன்
ரேணுகா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மர்ழியா எப்படி இருக்கீங்க?பேசி ரெம்ப நாள் ஆகுது,மர்ழி உங்களுக்கு இல்லாததா அட்ரஸ் கொடுங்க உடனே அனுப்பறேன்:)குழந்தைங்க எப்படி இருக்காங்க??பொண்ணு சமத்தா ஸ்கூல் போறாளா?பையன் தவள ஆரம்பித்துவிட்டானா?எத்தனை மாதம் ஆகுது?
எனக்கும் கம்பி மத்தாப்பு மட்டும் பார்சல் அனுப்புங்க அது தான் நான் பயம் இல்லாமல் வெடிக்கும் ஒரே பட்டாசு:))))

பண்டிகை போது செய்ய மாட்டாங்க,ஆனால் தீபாவளிக்கு செய்வாங்க,மற்ற எதுக்கும் செய்ய மாட்டோம்.ஆனால் தீபாவளி இந்த முறை சனிகிழமை புரட்டாசி மாதம் வருவதால் முக்கால் வாசி பேர் சமைக்க மாட்டாங்கப்பா..

அன்புடன்
ரேணுகா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்