நிப்பட்(வேர்க்கடலை தட்டை)

தேதி: October 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

வேர்க்கடலை பொடி - கால் கப்
அரிசி மாவு - ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
எள்ளு - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
டால்டா - அரை மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 கப்


 

நிப்பட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலையை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து வைக்கவும்.
அதை போல மிக்ஸியில் பொட்டுக்கடலையை போட்டு பொடி செய்யவும்.
ஒரு தட்டில் அரிசி மாவு, வேர்க்கடலை பொடி, பொட்டுக்கடலை பொடி, உப்பு, எள்ளு மற்றும் மிளகாய் தூள் போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.
அதில் டால்டாவை உருக்கி ஊற்றி நன்கு பிசைந்து விட்டு அரை கப் அளவு தண்ணீரை மேலே தெளித்து விட்டு நன்கு பிசையவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவில் பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி ஒவ்வொரு உருண்டையாக வைத்து வட்டமாக தட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தட்டி வைத்திருக்கும் வில்லைகளை போட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
மொறுமொறு வேர்க்கடலை தட்டை ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. ரஜினி மோகன்குமார் </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ரஜினி மோகன்குமார் அவர்களே, உங்க பெயரும் குறிப்பின் பெயரும் என்னை பதிவுப்போடசெய்துவிட்டது. தீபாவளி சமயம் மிகவும் நல்ல குறிப்பு கொடுத்துள்ளீர்கள். செய்வதற்கும் ஈசி போல் தோன்றுகிறது.

தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்...நீங்க புதியவரா? இதுவரை உங்க பெயரை பார்த்ததில்லை போல் தோன்றுகிறது.

அருமையான குறிப்பிற்கு மிகவும் நன்றி.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

அருமையான குறிப்பாக இருக்கே,ரஜனி என்று u.a.e -யில் என்னோடு வேலை செய்த ஒரு தோழி உண்டு நீங்கள் அவராக இருக்குமோ?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் திருமதி ரஜினி! தீபாவளிக்கு நல்ல ரேசப்பி கொடுத்து இருக்கின்றிர்கள்.
செய்து அசத்திட வேண்டியதுதான். செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம்
கொடுக்கின்றேன். நன்றி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரொம்ப சூப்பரா இருக்கு வேர்கடலை தட்டை

Jaleelakamal

ஹாய் ரஜினி! உங்கள் வேர்கடலை தட்டை செய்து பார்த்தேன்
வித்தியாசமான டேஸ்ட், நன்றாக இருந்தது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.