விசேஷ நாட்களில் போட்டுக் கொள்ளக்கூடிய சுலபமான மெகந்தி டிசைன்

தேதி: October 14, 2009

4
Average: 4 (10 votes)

 

மெகந்தி கோன்

 

கோனின் அடிப்பகுதியில் சற்று மெல்லிய கோடுகள் வரும்படி நறுக்கிக் கொள்ளவும். கையின் பின்புறத்தில் நடுவில் மாங்காய் போன்ற டிசைனின் வளைவாக உள்ள மேல்பகுதி வலதுபக்கம் இருக்குமாறு முதலில் வரைந்து கொள்ளவும். அதன் உள்ளே சின்ன கோடுகள் வரையவும். மீண்டும் சின்ன கோடுகள் வரைந்து அதன் மேல் சின்ன சின்ன வளைவுகள் வரைந்து உள்ளே புள்ளி வைக்கவும்.
அந்த மாங்காய் டிசைனை ஒட்டிய மாதிரி ஒரு வளைவு வரைந்து கொண்டு அதன் மேல் சின்ன சின்ன வளைவுகள் வரையவும்.
பிறகு ஆள்காட்டி விரலில் படத்தில் காட்டியுள்ள டிசைனை வரைந்து கொள்ளவும்.
இப்போது மாங்காய் மற்றும் அதை ஒட்டி வரைந்த வளைவுகளில் சின்ன புள்ளிகள் வைக்கவும். அந்த புள்ளிகளுக்கு மேல் சிறு சிறு மாங்காய் போன்ற டிசைனை வரைந்துக் கொள்ளவும். அதன் எதிர் புறத்தில் முத்துக்கள் போன்ற டிசைனை வரையவும்.
அதன் கீழே மேலே வரைந்த மாங்காய் டிசைனின் வளைவான மேல்பகுதி இடதுப்பக்கம் வருமாறு வரைந்து அதனை சுற்றிலும் வளைவு டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
இரண்டு மாங்காய் டிசைனுக்கும் நடுவே சின்ன வளைவு வரைந்து அதன் மேல் பூ இதழ்கள் போல் வரையவும்.
சிறிது இடைவெளிவிட்டு அதன் கீழும் முதலில் வரைந்த அதே மாங்காய் டிசைனை வரையவும். இடைவெளிவிட்டிருக்கும் பகுதிகளில் பூ இதழ்கள் வரைந்துக் கொள்ளவும்.
வரைந்த மாங்காய் டிசைனுக்கு கீழ் படத்தில் உள்ளது போல் பூ இதழ்கள் வரையவும்.
அதன் கீழே இலை போன்ற வடிவம் வரைந்து அதை ஒட்டி பூ இதழ் போல் வரைந்து முடிக்கவும்.
இந்த டிசைன் முழங்கை முழுக்க வந்து விடும். பார்ப்பதற்கு கடினமாக இருப்பது போல் தோன்றினாலும் ஒரே மாதிரியான மாங்காய் டிசைனைதான் நீங்கள் மீண்டும், மீண்டும் வரைய வேண்டும். இதுப்போன்ற டிசைனை ஒரு முறை வரைந்து பழகிவிட்டால் மிக சுலபமாக கை நிறைய மருதாணி போட்டு விடலாம்.
விசேஷதினங்கள், பண்டிகை, பார்ட்டி போன்ற நேரத்தில் எளிமையாக போட்டுக் கொள்ளக்கூடிய மெகந்தி டிசைன் இது. கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், இந்த சுலபமான மெகந்தி டிசைனை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுபர்ப் வனிதா. அடுத்த ஃப்ளைட்ல சென்னை வர்றேன்.
அன்புடன் இமா

பி.கு :)
குறிப்பு வெளியான நேரம் முதல் பல முறை பின்னூட்டம் இட முயன்றேன். விடாமல் 'எரர்' வந்தார். பதியவே இல்லை என்று நினைத்தேன், இரு முறை பதிவாகி இருக்கிறது. :)

‍- இமா க்றிஸ்

சுபர்ப் வனிதா. அடுத்த ஃப்ளைட்ல சென்னை வர்றேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா.... :) திரு ஹைஷ் டிக்கட் அனுப்பிட்டாரா??? இல்லை என்றால் சீக்கிரம் அனுப்ப சொல்லுங்கோ.... முடியலன்னா அனுப்ப சொல்லி பாபு அண்ணா'வை கேக்கலாம். ;) ஹிஹிஹீ....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கும், பாபு அண்ணா, செண்பகா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், தீபாவளி நல் வாழ்த்துக்களும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா..,எப்படி இருக்கீங்க?வழக்கம்போலவே அழகான டிசைனை போட்டு அசத்தி இருக்கீங்க.நல்ல அழகான சிந்தனை.உங்கள் டிசைனை எல்லாம் வரைந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.மெகந்தி மூலம் கையில் விட்டு பார்க்க முடியவில்லை.உங்க அளவுக்கு நீட்டா போட வருமான்னு தான் தெரியவில்லை.போட்டு கண்பிக்கும் உங்கள் கைகளை குலுக்கியதுப் போல் இங்கிருந்தே என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வனிதா உங்க டிசைன் எல்லாமே ரொம்ப அருமை...இதை பாத்த்தும் இப்பவே மருதாணி போடனும் போல ஆசையா இருக்கு :-)

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

வழக்கம் போல் இந்த டிசைனும் அருமை.தீபாவளிக்கு வெளியிட்டது மிகச்சிறப்பு.வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி அப்சரா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கனும்.... வெகு நாட்களாக அறுசுவையில் நேரம் ஒதுக்க முடியாமல் போனது. கையில் போட்டு பாருங்கள், பழக்கம் வந்துவிடும். என்னைவிட அழகாக போடுவீர்கள். :)

மிக்க நன்றி ஹாஷினி.... ஆசை பட்டுட்டீங்கல்ல..... போட்டுடுங்க. ;)

மிக்க நன்றி ஆசியா..... நீங்க எப்போ போட்டு உங்க கையை அறுசுவைக்கு அனுப்ப போறீங்க??? நான் ரொம்ப ஆசையா பார்த்துகிட்டு இருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

eneyaelayal

nala easy ya eruku nan try panna poran
thanks

eneyaelayal

வனிதா,
எனக்கு இனி 'ப்ளைட்' தேவை இருக்காது. என் 'வளைகாப்பு' படம் பார்த்தீங்க இல்ல? :) 'அழகாக இருக்கு,' என்று சொன்ன சுபாவுக்கு என் நன்றிகள். :))

‍- இமா க்றிஸ்

வனிதா சொல்ல வார்த்தையே இல்லைங்க உங்கலுடையா அனைது குறீப்பும் பார்க பார்க ஆன்ந்தம் .இதை பெருமையா சொல்லுரெஙக சந்தோஸ்ம்ங்க

do fast mathi

மதி... உங பின்னூட்டம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. :) மிக்க நன்றி. நீங்கள் அறுசுவை'கு புதிதா? இதுக்கு முன்னாடி பேசின நியாபகம் இல்லை... அதான் கேட்டேன். இனி அடிக்கடி பேசுவோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

i dont get mehendhi cones here at my place
plz tel me how to make cone if i make the cone the henna just falls out

என்றும் அன்புடன்,
கவிதா

தோழி உங்க பெயர் எனக்கு தெரியல மன்னியுங்க. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. நம்ம அறுசுவையில் உமா பாப்ஸ் அவர்கள் தந்த் அமுதல் ஹென்னா குறிப்பு கைவினை பகுதியில் இருக்கு. அதில் அழகா சொல்லி இருப்பாங்க கோன் செய்ய. "மெகந்தி டிசைன் மற்றும் தயாரிக்கும் முறை"

http://www.arusuvai.com/tamil/node/13526

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta