திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன், ஆணும் பெண்ணும் தொலைப்பேசியில் பேசுவதால் ஏற்படும் நன்மை தீமை

திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன், ஆணும் பெண்ணும் தொலைப்பேசியில் பேசுவதால் ஏற்படும் நன்மை தீமைகளை இங்கே கூறுங்கள்.

என்ன தோழிகளே......... எல்லோருக்கும் இந்த அனுபவம் கண்டிப்பாக இருந்திருக்கும்.ஏன் யாருமே பதிவு போடவில்லை?உங்களின் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே......

loved to be loved

என் திருமண‌த்திற்கு முன் நானும் அவருடன் தொலைபேசியில் பேசினேன், ஆனால் வாரம் ஒரு முறை பேசினால் அதிகம். ஏனென்றால் அப்போது எஸ்.டி.டி.யில்தான் பேசமுடியும் என்பதால் செலவு அதிகமாகும். அதனால் சுருக்கமாகப் பேசிவிட்டு வைத்துவிடுவோம்.

ஆனால் இப்ப தொலைபேசுவது மிகவும் மலிவாக இருப்பதால் இன்றைய மணமக்கள் மணிக்கணக்கில் தினமும் பலமுறை பேசுகிறார்கள். அது பெரும்பாலும் சண்டையில் முடிகிறது. திருமணத்திற்குப் பின்னும் இது கருத்து வேறுபாட்டிற்கே வழிகோலுகிறது, "அப்ப அப்படி சொன்னீங்களே, இப்படி பேசினியே" என்று. இது நான் பார்த்த சில நெருங்கிய உறவுகளில் நேரில் கண்டது.

அதனால் பேசுங்கள், ஆனால் அளவோடு: வாரம் ஒருமுறை என்ற அளவில், பெற்றோர் கண்காணிப்போடு. இது எனது கருத்து.

பேசுங்க பேசுங்க மிஸ் பன்னிடாதீங்க..அப்ப பேசும்போது கிடைக்கும் த்ரில் பிறகு கிடைக்காது ..ஆனால் ஹுசேன் சொன்னது போல ஒரு அளவு இருப்பது நல்லது..ரெண்டு பேருக்குமிடையில் விரிசல் விழும்வகை பேச்சுக்களை தவிர்ப்பது புத்திசாலித்தனம்..அதாவது கடந்தகால காதல் கதைகளையும் தன் பின்னால் நடந்த ஆண்/பெண் பற்றிய கதைகளை தமாஷ் போல அப்ப பேசுபவர்கள் பின்னாளில் அதை சொல்லி சண்டை போடுவாங்களாம்...அதையெல்லாம் தவிர்க்கலாம் ரொம்ப வழியாமலும் இருக்கலாம்...இன்னுமொன்று திருமணத்திற்கு முன்பே ஒளிவுமறைவில்லாமல் எல்லாமே பகிர்ந்து கொளவதும் நல்லதல்ல..பின்னாளில் பேச எதுவும் மிச்ச மீதி இருக்காது மட்டுமல்ல..எதாவதொரு காரணத்தால் திருமணம் தடைபட்டால் கஷ்டமாகிவிடலாம்.

பேசவேண்டும், நிற்சயம் நன்றாக மனம்விட்டு பேசவேண்டும். சண்டைகள் பிடிக்கவேணும் சமாதானம் ஆகவேணும் இப்படி திரிலாக அந்தநேரத்தில் இருக்க வேண்டும். இப்படி இருப்பதால் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்பம். நீங்கள் பெற்றோர்களாக இருந்தால் நிறைய சந்தர்பம் கொடுங்கள். நீங்கள் நிச்சயிக்கப்பட்டவர்களாக இருந்தால் நிறைய சந்தர்பம் எடுங்கள். நன்றாக மனம்விட்டு பேசுங்கள். (தொடக்கத்திலேயே ஒத்துவராது என கண்டுகொண்டால் திருமணத்தை தவிர்ப்பது நலதல்லவே. பின் விவாகரத்து என்று போவதிலும் பார்க்க இது மேல்.)
திருமணத்தின்பின் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு சந்தோசமாக வாழ்க்கையை ஆரப்பிக்கலாம்.இது என் கருத்து.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

திருமதி.ஜாகப் தோழிக்கு.....கண்டிப்பாக பேச கூடாது என்பது எனது கருத்து.....(எல்லாம் ஒரு அனுபவம் தான்)கல்யாணம் என்பது ஒரு பெண்ணிர்க்கு மிகவும் முக்கிய மான நேரம் வர போகும் கணவர் எப்படி பேசுவார்..எப்படி சிரிப்பார்..நம் அன்னன் தம்பிகளின் குறள் போல் இருக்குமா,இல்லை வித்யாசமா இருக்குமா நமக்கு பிடித்த சினிமா அவருக்கு பிடிக்குமா..இது போல் இன்னும் நிரையா சொல்லலாம் இது எல்லாமே கல்யாணத்துக்கு முன்னயே தெரிந்தால் அதில் என்ன சுவாரசியம் இருக்கும் சொல்லுங்க...எதிர் பார்போடு இருக்கும் மண பெண்ணின் உல்லம் இருக்கே எதற்க்கும் ஈடு இல்லை.........

ningal solvadhu seriyanadhu suvarasyam kalyanathirku pinbu pesuvadhilthaan irukiradhu.yaaruku yaar endru iraivan namakku munbae mudivu seidhu vittan. idhil thirumanathirku munbu pesuvadhal, purindhu kolvadhal, endha matramum illai aagavae namakku eatra thunaivarahathaan iruppar endru pesuvadhai thavirpadhu miga sirandhadhu idhil prachanaigalukkum velai illai..assalamu alaikum

Thirumanathirkku munbu phone-ill pesuvathu nallathu thaan. appothu thaan namakku avarodaiya nalla mattrum ketta vizhyangal pattri theriya varum. pengal pesum pothu niraiya gavanathudanum jaakirathaiyagavum pesa vendum. yenendral mulli selai vizhunthall selaikku thaan nazhtam. nammakku avarudaiya character-s pidithirunthal antha thirumanathirkku 100% oppudal tharalam. avarudaiya character-la 50% doubt irunthalum antha thirumanathai patri nandraga yosikka vendum. ithu gents & ladies-kku porunthum. ithu theriyamal kalayanam panni kondu vazhnaal muzhuvathum naragathai pola kazhikka vendi irukkathu. gents & ladies rendu perum phone-la pesum pothu prachainaikkuriya topics varumpothu nandraga analaise panni mudivukku varalam. eduthom kavzhuthom endru irukka kudathu. appadi seivathal oru nalla vazhkkai thunaiyai kuda naam izhakkalam. ithil mukkiyamanathu ennavendral thayavuseithu 3rd person pechai kettu ungal vazhkaiyai keduthu kollatheergal. ungal vazhgai ungal kaiyil endru nambungal. yenendral ennudaiya kalyanathil kuda niraiya per enna kuzhappa paarthargal, naan migavum theliva irunthathaal avargal pechai ketkavillai. kettirunthaal ippothu enakku kidaithirukkum nalla vazhkaiyai izhanthiruppen. naanum kalyanathikku munbu ennavarodu 4 maathangal phonil pesinen (naan phone seithu pesa maaten avar thaan pesuvar, yen endral avar iruppathu Congo, ennal ISD pottu daily pesa mudiyathu).

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

nalla payanulla tagaval future enakkum itu use agalam thx a lot

but intha way namba 1tavangala terinjika usefulla irukum thane solunga pakalam??pesuvathil enna tappu irukka kuduum?incase pesamaliyae kalyanam nadanta after kuda feel panalam thane aioo tappu panitomnu solli...seriya tavara nu terilla bt ask pananum nu tonichi soliten tappuna manichirungga

அப்பதான் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முடியும். நம்மை பற்றி அவருக்கு ஓரளவுக்காவது தெரிய வேண்டும். திருமணத்திற்கு முன்பு அவர்களுக்கு நீயின்றி நானில்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தால் தான் திருமண வாழ்வில் விட்டு கொடுத்து சுகமாக வாழ முடியும்.

ஆனால், அவரை பற்றி மட்டும் பேசாமல் அவரது குடும்பத்தை பற்றியும் பேசி அவர்களையும் புரிந்து கொள்ள வேண்டும், அப்போது புதிதாக திருமணம் முடிந்து அவங்க வீட்டுக்கு போகும்போது அவங்க குடும்பத்தில் இருப்பவர்களையும் நன்கு கவனிக்க உதவும்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்