பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

//பின் வரும் சந்ததி இந்தியச்சுதந்திரத் தினம், குடியரசு தினம், குழந்தைகள் தினம், பழைய மன்னவர்கள், இலட்சியம், வீரம் மற்றும் பலவற்றை அறியாமல் அழிந்து பாரம்பரியம், கலாச்சாரம் மறைந்து மண்ணோடு போய் விடும், எனவே ஆரம்பமான ஆணிவேர் முக்கியமானது.//

இத்தனை காலம் வரலாறு பாடம் பள்ளிகளில் கற்றுக்கொள்கிறோம். இன்று எத்தனை பேருக்கு நம் நாட்டு தேசிய கீதத்தை தடங்கல் இல்லாமல் முழுவதுமாக பாடத் தெரியும்? நாட்டின் தேசிய கீதம் கூட தெரியாமல்தான் குழந்தைகள் கல்வி கற்கிறார்கள். அதனால்தான் ஒரு சிறு குழந்தை யூ ட்யூபில் தேசிய கீதம் பாடுவதை ஆஆஆ... வென்று வாயை பிளர்ந்து பார்க்கிறோம். இப்படிப்பட்ட பாடத் திட்டத்தை வைத்துக் கொண்டுதான் சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் குழந்தைகள் அறிந்து கொள்கிறார்களா? வேடிக்கைதான். உண்மையில் இத்தினங்கள் விடுமுறை என்பதால்தான் குழந்தைகளுக்கு(சில பெரியவர்களுக்கு கூட) நினைவில் நிற்கிறது. வேதனைப் பட வேண்டிய விஷயம்.

நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை பற்றி பக்கம் பக்கமாக படிக்கிறோம். ஆனால் எத்தனை பேர் காந்தி ஜெயந்தி அன்று மட்டுமாவது அவரது கொள்கைகளில் சிலவற்றையாவது பின் பற்றுகிறார்கள்? பொதுமக்களைப் பொறுத்தவரை ஒருநாள் விடுமுறை. தொலைகாட்சிகளுக்கு நடிக நடிகையரைக் காட்டி வருமானத்தை பெருக்க ஒரு நாள். அரசாங்கமே அன்று ஒரு நாளாவது மது அருந்தாமல் இருக்கட்டுமே என்று மதுக்கடைகளை அன்று மூடினால் நம் பொறுப்பான 'குடி'மகன்கள் முந்தைய நாளே சரக்கு வாங்கி ஸ்டாக் வைத்து ஃபுல்லா ஊற்றி விடுமுறையை அனுபவிக்கிறார்கள். இதுதான் நாம் வரலாற்று பாடம் படித்த லட்சணமா?

இப்படிப்பட்ட வெறும் ஏட்டுச்சுரைக்காய் வரலாறு பாடம் தேவையில்லை என்பதே எங்கள் வாதம்.

சும்மா மன்னர்கள் மன்னராட்சி என்று பேசாதீர்கள். ஏற்கெனவே நம் நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் வாரிசு ஆட்சி(மன்னராட்சி) தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இப்படி மன்னர் வரலாற்றைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்படையான மன்னராட்சி வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை :-(
வரலாற்றில் மேப் கொடுத்து இடங்களை குறிப்பிட சொல்வார்கள். அசோகர் ஆண்ட பகுதி, பாபர் ஆண்ட பகுதி இப்படி பல . ஆனால் விஷயம் என்னன்னா எனக்கு இப்போதைய இந்திய வரைபடத்திலேயே சந்தேகம். நமக்கு இந்திய வரைபடம்னா காஷ்மீர் என்னும் தலையோடுதான் ஞாபகம் வரும். ஆனால் சில தொலைக்காட்சிகளில் பிரச்சினைக்குரிய காஷ்மீர் பகுதி நீங்கலாகத்தான் (தலை இல்லாமல் :-( )இந்திய வரைபடம் காண்பிக்கப் படுகிறது. இப்போ எதை நான் நம்புவது? இப்பவே சம காலத்துலேயே இந்த குழப்பம்னா வரலாறுங்கற பெயர்ல நாளை நம் சந்ததிகள் எதை படிப்பார்கள்? இப்போ புரியுதா வரலாறு அத்தனையும் உண்மையில்லைன்னு. முற்றிலும் உண்மையில்லாத ஒன்றைப்பற்றி படிக்கணுமா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்படி போடுங்க கவிசிவா..... அது மட்டுமா???? சீன சுவரை பற்றி வரலாறு சொல்லி குடுக்கும் பாட புத்தகம், இன்றும் நம் நாட்டுக்கும் சீனாக்கும் இடையே சரியான பார்டர் இல்லை, அதனால் இன்னும் ஏற்படும் பிரெச்சனைகள் பற்றி சொல்கிறதா??? இது கூட தெரியாமல் வளர்ந்த குழந்தைகள் (நம்மையும் சேர்த்து தான்) எத்தனை???? என்ன சொல்கிறது வரலாறு புத்தகம்??? நான் படிச்ச காலத்தில் இருந்து இன்னும் அதே பழைய புராணம் தான் !!! முல்லைக்கு தேர் குடுத்தார் லொட்டு லொஸுக்குன்னு சொல்லி குடுக்கறாங்க.... இங்க நம்ம பழைய அரசியல் வாதிகள் நாட்டையே நிறைய பேருக்கு பங்கு குடுத்துட்டு போன கதையெல்லாம் யாரும் வருங்கால சங்கதிக்கு சொல்லல.... இன்னும் கொஞ்சம் நாள் போனா நாட்டின் வரை படம் எதுன்னே குழந்தைகளுக்கு தெரியாம போயிடும். நீங்க சொல்ற மாதிரி ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒன்னொன்னு காட்டுதே !!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுருங்கச்சொன்னாலும் சூப்பராக சொல்லி நம் அணிக்கு பலம் சேர்த்த உங்களை பாராட்டாமல் இருக்க முடியலை.
வனிதா சிரியா வரலாற்றை கூட அருமையாக அறியச்செய்த தாங்களா வரலாறு பாடம் வேண்டாம் என்று சொல்வது?நம்ப முடியல.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தங்கள் கருத்துக்களை இங்கே பதித்ததற்கு மிகவும் நன்றி, மற்றும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்... வரலாறு ஈஸியான+ரிலாக்ஸா படிக்கும் பாடம் அதனால தேவைனு சொல்லி இருக்கீங்க, சூப்பர்..வித்தியாசமான சிந்தனை.. தலை இல்லாமல் வால் இருக்கவே இருக்காது...

ரொம்ப நன்றிங்க உங்கள் வேலைக்கு நடுவிலும் பதிவு எழுதியதற்கு..

சுதந்திர தினம் அன்று ரிமோட் படும் அவஸ்தை பெரிய அவஸ்தையாக இருக்கும், இதுல எங்க சுதந்திரத்தையும் அத வாங்க காரணமானவங்களை பற்றியும் நினைக்கமுடியும்?

வரலாற்று சின்னங்களை நாம் பாதுகாப்பதில்லை என்பதோடு அதன் அழிவுக்கு நாம் தான் பெரிய காரணமாகவும் இருக்கிறோம் என்பதும் உண்மை...

வரலாற்றில் உண்மை நிறைய மறைக்கபட்டு இருக்கும் என்பது தான் எனது யூகமும்..

அன்பு, கருணை, சகிப்புதன்மை, உண்மை, நேர்மை எதுவுமே இல்லாமல் வரலாறு மட்டும் தேவையில்லை என்பது நல்ல பாயிண்ட்...

நேரம் இருந்தால் திரும்ப வாங்க...

ஹாஹா எனக்கும் ஒரே சிரிப்பா வருது, வரலாறு தெரிந்து அறிவு பெருக்க யாருக்கும் விருப்பமில்லை, ரெஸ்ட் எடுக்க மட்டும்தான் தேவையா? நல்ல காரணம்?!!!!..திரும்ப வாங்க...

பின்னாளில் தெரிவு செய்ய முன்னாளில் எல்லா துறையிலும் அறிமுகம் வேண்டும், வரலாறு மட்டுமின்றி எல்லா பாடங்களும் தேவை என்ற உங்கள் கருத்து ஏற்புடையதே!நன்றிப்பா நேரம் கிடைத்தால் திரும்ப வாங்க...

காந்தி ஜெயந்தி அன்று குடிமகன்கள் குடிக்கிறார்கள் என்பதற்காக குட்டீஸ்க்கு காந்தியை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டாமா!!!!!!!!!!!!!ரொம்ப அநியாயமா தெரியுதுங்க..................
வரலாறு பாடம் மன்னர்கள் பெருமைகள் மட்டுமா சொல்லிக் கொடுக்கிறது ???????ஔரங்கசீப் போன்ற மன்னர்கள் எப்படி அப்பாவை போட்டுத் தள்ளினார்கள் என்றும் சொல்லி தரப்படுகிறது....
நாம் இன்றும் அரசியலை சாக்கடை என்றுப் பேசிக் கொண்டே இருக்கிறோம்,,,,என்று சுத்தம் செய்யப் போகிறோம்...
நாம் இன்று வரை படிப்பதை பணம் சம்பாதிக்க ஒரு வழியாக கருதுகிறோமே தவிர அதனை நமது அறிவை வளர்க்க உதவும் சாதனமாக பயன்படுத்துவதில்லை....

மேப் பற்றி சொல்ல சிறிது குழப்பம்தான்...உலகநாடுகள் எல்லாம் ஒரே மாதிரி எடுத்துக் கொள்வதில்லை...ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரி...சில நாடுகள் பாக்கிஸ்தானை ஆதரிக்கும் சில இந்தியாவை ஆதரிக்கும்...எனவே அவரவர் தீர்மானிக்கின்றனர்...இரு சகோதரர்க்குள் பாகம் பிரிக்கும்போதே வெட்டுப்பழி குத்துப்பழி!!!!!!!!!!! இரு நாடுகள் என்னும்போது இந்த பிரச்னை இருக்கவே செய்யும்....

வாரிசு அரசியல்.....கவிசிவா உங்களை மாதிரி நல்லவர்கள், வல்லவர்கள் :) இந்தோனேசியாவில் முடங்காமல் இந்திய அரசியலில் இறங்கினால் இவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்க(முயற்சிக்க)லாம்.......

வனிதா முல்லைக்கு தேர் கொடுத்தவரைப் பற்றி நான் வரலாற்றில் படித்ததில்லை...

அந்த காலத்தில் நடந்த எல்லா நன்மை.தீமைகளை தெரிந்து கொள்ள வரலாறு அவசியம், நல்ல கருத்து...

வரலாறு சரி நவீன வரலாறு தெரிந்து கொள்ள ஆரம்பித்தால் எல்லாருக்கும் தலை சுத்திவிடுமே?!

நன்றிப்பா நல்ல பாயிண்ட்ஸ், திரும்ப வாங்க நேரம் கிடைக்கும் போது நன்றி..

வாங்க வாங்க, ரொம்ப நன்றி நல்ல தலைப்புனு எடுத்து சொல்லியதற்கு,வரலாறு தேவை இல்லனு ஆணித்தரமா சொல்லிட்டீங்க,

அந்த காலத்துல என்ன நடந்ததுனு பாக்கிறதவிட இப்போ என்ன நடக்குதுனு பார்த்தால் வாழ்க்கைக்கு பிரயோசனாமா இருக்கும் நீங்க சொன்ன பாயிண்ட் இஸ் எக்சலண்ட்...

ஹிட்லர் நெப்போலியன் முடிவு என்ன?அது உண்மையா? ஆசிரியருக்கே தெரியாது என்று நீங்க சொன்னது எனக்கு சின்ன சிரிப்பு வருது..குட்

நீங்க 4வது பாரா-வில் சொன்ன விஷயங்கள் அனைத்தும் அருமை..

நான் எப்போதும் கட்சி ஆட்களின் எண்ணிக்கை பார்ப்பது இல்லை, வாதங்கள் எவ்வளவு ஸ்ட்ராங் என்பதை தான் பார்க்கிறேன், இப்போதைக்கு 2அணியிலும் நிறைய இம்ப்ரஸிவ் பாயிண்ட் இருக்கு..நன்றி வனிதா...

மேலும் சில பதிவுகள்