பட்டிமன்றம் 9 - வரலாறு

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

தலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா? இல்லையா?”

இன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா? தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

சின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..

இந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..

அன்புடன்
தாமரை

சந்தனா! நலமா? நாங்கள் எந்த பில்டப்பும் விடலபா..! உங்களுக்கான பதில் உங்கள் வாதத்திலேயே இருக்கிறது. "எனக்கு இந்த எதிரணி சொல்லுவது போல ஏதாவது உண்மையாலுமே இருக்கான்னு தெரியனும்.. "ம்ணு சொல்கிறீர்களே? ஒண்ணுமில்லாமல், எங்கள் பக்கம் ஜெயிக்கவேண்டும் என்று வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போவதற்கு இது ஒண்ணும் பொழுது போக்கு கதை அல்ல சந்தனா! நம் தாய் திருநாட்டின் வரலாறு பற்றி, அதில் மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட உண்மை வரலாறு இந்த உலகுக்கு தெரியவந்து, அதன் மூலமாவது சமூக நல்லிணக்கம் வராதா? என்ற ஏக்கம் கலந்த ஆவலில் சொல்லியிருக்கிறோம். நாங்கள் சொல்வது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், அதற்குதான் உங்க வாதத்திலேயே உங்களுக்கான பதில் உள்ளது என்றேன். //ஆர்வமுள்ளவர்கள் மேலும் படியுங்கள்...தெரிந்து கொள்ளுங்கள்.. // இதையே உங்களுக்கும் சொல்கிறேன், இப்போது யாரிடமிருந்தும் அவசரமா நீங்கள் கேட்கும் பார்சல் வராவிட்டாலும் பரவாயில்லை :) பொறுமையா தேடி படியுங்கள். ஆனால் நீங்கள் இப்போது படிக்கவேண்டியது, வரலாற்று ஆய்வாளர்களின் முடிவுகளைதான்! நான் ஏற்கனவே சொன்னதுபோல், திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாறுகளை அல்ல!

//எனக்கு நினைவு இருக்கும் வரை....// நல்ல வேளை சந்தனா! நல்ல விஷயங்கள் மட்டும் உங்களுக்கு நினைவில் இருக்கிறது :) நீங்கள் சொல்வதுபோல், நானும் ஓரளவு நல்ல விஷயங்களை நினைவில் வைத்துள்ளேன்.

ஜான்சி ராணியின் வீரத்தை எண்ணி வியந்திருக்கிறேன். 'உப்பு சத்தியா கிரகம்' இந்திய‌ ம‌க்க‌ளிடையே ஏற்ப‌டுத்திய‌ உத்வேக‌த்தை நினைத்து ம‌கிழ்ந்திருக்கிறேன். 'ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!' என்று கூறிய அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னிந்தியாவின் ஐந்து பெரிய‌ போர்களில் ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டி படுதோல்வி அடையச்செய்த வரலாற்றை மனப்பாடம் செய்யும்போதுகூட மெய்சிலிர்த்திருக்கிறேன். ந‌ன்ன‌ம்பிக்கை முனை வ‌ழியாக இந்தியாவிற்கு வந்த‌ வாஸ்கோட‌காமாவின் செய்திக‌ளை ஆவ‌லாக‌ ப‌டித்திருக்கிறேன். ஆங்கிலேயருக்கு எதிரான ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக‌ காந்திஜியின் அழைப்பை ஏற்று தனது கல்லூரி படிப்பை துறந்த அபுல்கலாம் ஆஸாத்தின் தேசப்பற்றை நினைத்துப் பெருமைப்பட்டிருக்கிறேன். இதுபோல் இன்னும் எத்தனையோ! ஆனால் இவை மட்டும்தான் இந்திய வரலாறா என்றால், நிச்சயமாக இல்லை! "எல்லாரைப் பற்றியும் எல்லா சம்பவத்தையுமே சொல்ல வேண்டும் என்றால் எப்படி? பிறகு புத்தகம் மிக பெரியதாகி விடும்.. " என்கிறீர்கள். உண்மைதான்! ஆனால், அதற்காக நம் சந்ததிகளுக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டிய எத்தனையோ நல்லிணக்கம் ஏற்படுத்தக்கூடிய வரலாறுகள், சில சுயநலங்களுக்காகவும், பிறர் நலம் குலைப்பதற்காகவும் திட்டமிட்டு மறக்கடிக்கப்படுள்ள கொடுமையை அவ்வளவு எளிதில் அலட்சியம் செய்துவிட முடியாது சந்தனா! ஏனென்றால் அவர்கள் அந்த வரலாறு படைக்க கொடுத்த விலை அவ்வளவு!! வரலாற்றில் சொல்லப்பட்ட தீமையான விஷயங்களை எடுத்துக்கொண்டால், இங்கு நேரடியாக அவற்றையெல்லாம் பட்டியலிட முடியாது! அதற்கு இந்த மன்றம் உகந்தது அல்ல! எல்லாவற்றையும் என்னால் முடிந்தவரை நாசூக்காக சொல்லிவிட்டேன். அதைப் பற்றி கண்டிப்பாக நீங்கள் தெரிந்துக்கொள்வதால், உங்களைப்போன்ற அறிவாளிகள் மூலம் பிறரும் பயனடையலாம் சந்தனா!

தேன்மொழி! //தலைப்பு சுமையாக கருதி வரலாறு பாடம் தேவையா இல்லையா என்பதுதானே...// என்கிறீர்களே? என்னங்க இது அர்த்தமில்லாமல் உள்ளது? உங்கள் அணியினருக்கு நாங்கள் எடுத்து வைக்கும் வாதத்திற்கு சரியான பதில் சொல்ல முடியாவிட்டால், இதுதான் தலைப்பு என்று நீங்கள் போடும் ஒரு எல்லையோடு நிறுத்திக்கொள்கிறீர்கள்! தலைப்பு மாறி போகும்போதுதான் நீங்கள் அப்படி சொல்ல முடியும். தலைப்போடு சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் நாம் எடுத்து வைக்கலாமே? என்னுடைய முன்னுரையை பாருங்கள்! வரலாறு வேண்டும் என்றுதான் ஆணித்தரமாக சொல்லிவிட்டு, ஆனால் இப்போதைய நிலமையில் எதனால் வேண்டாம் என்ற காரணமாகதான் திர்க்கப்பட்ட, மறைக்கப்பட்டவை பற்றி கூறினேன். புரியாவிட்டால் ஒன்றுக்கு இரண்டு முறை படித்துவிட்டு வந்து உங்கள் வாதத்தை தொடருங்கள்!

உதாரணத்திற்கு உங்களிடம் ஒன்று கேட்கிறேன்! உங்களுக்கு விஷம் கலக்கப்பட்ட பாலைக் கொடுத்து, இந்த பால் வேண்டுமா? வேண்டாமா? வேண்டாம் என்றால், சுவை பிடிக்கவில்லை என்பதால்தானா? அப்படியானால், சுவையை பார்க்காமல் நான் கொடுத்துவிட்டேன் என்பதற்காக இந்தப் பாலை அருந்திவிடுங்கள் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? அதுபோலதாங்க ந‌ம் உட‌ம்பும் உயிரும் காப்பாற்ற‌ப்ப‌ட‌வேண்டும் என்று நினைப்ப‌துபோல், ந‌ம் நாட்டின் ந‌ல்லிண‌க்க‌மும், மனதால் பிண்ணிப்பிணைந்த‌ சீரான சமூக‌நலவாழ்வும் காப்பாற்ற‌ப்ப‌ட‌ யோசிக்க‌வேண்டும். (இது உங்க‌ளுக்காக‌ த‌னிப்ப‌ட்டு சொல்வ‌தாக‌ த‌வ‌றாக‌ நினைத்துவிட‌வேண்டாம்) அதனால்தான், நம் இந்திய சமூகத்தில் இன்றும் நடந்து வரும் பலவித அசம்பாவிதங்களுக்கு மூலவேராக இருக்கக்கூடிய வரலாற்றை களையெடுத்து, தூய்மையான ஒரு உண்மை வரலாறு நம் கைகளில் தவழும்போது அதை கண்டிப்பாக நாம் ஏற்று, நம் குழந்தைகளுக்கும் பாடமாக அனுமதிக்கலாம் என்றேன். உடனே //எதிரணியினர் அனைவருமே திரிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களே...//என்று கூச்சலிடுகிறீர்கள். ஓகே, ஓகே முடிந்தால் புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்! இதற்கு மேல் என் கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லி அறுவையாக்க விரும்பவில்லை. விடை பெறுகிறேன்.

அஸ்மா
உங்கள் உதாரணம் மிக அருமை...
நிச்சயம் தவறாக நினைக்கவில்லை...
எதிரணி என்பதற்காக பாலுடன் விஷத்தையும் தருவேன் என்கிறீர்களே....நியாயமா!
எப்படிங்க....ஹி..ஹி...ஹி...
கொடி காத்த குமரனை விடடுட்டீங்களே என்று நான் கூப்பாடு போடுவேன்...அவர் என் நெஞ்சில் என்றும் நீங்கா ஹீரோ....இதில் இவ்வளவுதான் சொல்லமுடியும் என்பீர்கள்தானே...நானும் உங்களை எதிர்க்கவில்லை ...வரலாறு பாடங்களில் திருத்தங்கள் வரலாம்...வர வேண்டும்...
நீங்கள் சொல்வது போல் இடையில் நிறுத்தி மீண்டும் ஆரம்பிப்பது என்றுமே சற்று கடினம் ....அதுவும் நமது அரசியலமைப்பில் .......எனவே வரலாறு பாடம் அவசியமே என்று மீண்டும் ஆணித்தரமாக கூறுகிறேன்...நன்றி அஸ்மா...

அன்பு அஸ்மா.. இதற்கப்புறம் தீர்ப்புக்கு பின்னால் தான் பேச முடியும் என்னால்.. நல்ல வேளை இன்று பதினோரு மணிக்கு போனால் போதும் என்பதால் என்னால் உங்களுக்கு பதில் சொல்ல முடிந்துவிட்டது..

அஸ்மா, உண்மையாலுமே இருக்கா ன்னு தெரியனும் என்று நான் சொன்னது - ஸ்கூலில் படித்த பாடத்தை வைத்து.. காரணம், நீங்கள் சொன்ன பல நூற்கள் பெரியவர்களுக்கானவை.. அதிலே பல பல விஷயங்கள் எழுதியவர்களை பொறுத்து மாற்றி கொடுக்கப் பட்டு இருக்கும்.. நானும் இப்போ சில வரலாற்று விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறேன்.. என்னுடைய எந்தக் கேள்விக்கும் முழுமையான பதில் நெட்டிலே கிடைக்கவில்லை.. ஒவ்வொருவரும் தங்கள் பார்வையிலே சொல்லும் விருமாண்டி கதையை போன்று தான் உள்ளது.. எது உண்மை என்று தெரியவில்லை.. காரணம், எல்லாம் முடிந்து போன நாட்கள்.. இது தான் சரி என்று ஆணித்தரமாக சொல்வதற்கு ஆதாரம் ஏதுமில்லை.. எனக்கு மட்டும் ஒரு வரம் கிடைக்குமேயானால், காலத்தில் பின்னோக்கி சென்று "உண்மையில் நடந்தது என்ன" என்று இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்ற ஆசை உண்டு :))) இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்த்து விட்டு பல நூற்களை படித்து அதைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட தொகுப்பாகவே நான் பள்ளி வரலாற்றை காண்கிறேன்..

நீங்கள் சொல்ல நினைப்பது எனக்கு புரிந்தாலும், என்னால் மேற்க்கொண்டு அதனை பற்றி விவரிப்பாக பேச முடியாது.. ஆனால் நான் அறிந்த என் சக பள்ளி மக்களை என் சகோதரர்களை வைத்து சொல்கிறேன் - எங்களுக்குள் எந்த விதமான தீய விளைவையும் பள்ளி வரலாறு ஏற்ப்படுத்தவில்லை.. யாரும் எதைப் பற்றியும் தீவிரமாக கல்லூரி காலத்தில் கூட விவாதித்தது கிடையாது.. காரணம், முன்பே சொன்னது போல அது வெறும் தொகுப்பு தான்... பிள்ளைகளின் மனதை பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதாக அந்த வரலாற்று புத்தகத்தை நினைக்க முடியவில்லை. நிறைய பேரை பற்றி நல்ல எண்ணங்கள் தான் ஏற்ப்பட்டன (ஆங்கிலேயர்களிலே இருந்த சில நல்ல மக்கள் உட்பட).

பள்ளி வரலாறு யாரை நோக்கியும் திரிக்கப்பட்டதாக நான் கருதவில்லை.. ஆனால் சிலர் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டார்களா என்பதற்கு நீங்கள் சொல்வது போல இன்னும் பல நூற்களை படித்தால் தான் புரியும். ஆனால் இப்போ சுதந்திர காலத்தை பற்றிய ஆர்வம் குறைவாக இருக்கிறது.. அண்டை நாட்டிலே நடக்கும் விஷயங்களிலே மனம் விடை காண செல்கிறது.. தமிழர் என்பதால் என்னிடம் சில கேள்விகளுக்கு பதில் எதிர்பார்க்கிறார் அமெரிக்க ஆசிரியர்.. நீங்கள் சொல்லியுர்ப்பதிலே ஆர்வம் மீண்டும் ஏற்ப்பட்டால் படிக்கிறேன்.. இதனை பற்றிய அறிமுகத்துக்கு நன்றி..

பின்னாளில் கேள்விப்படும் சம்பவங்களும் செய்திகளும் சிலர் செய்யும் தவறான பிரச்சாரங்களும் தான் இவ்வாறு செய்யக் கூடியவை.. ஊடகங்கள் இவ்வாறு செய்யும்.. சினிமா செய்யும்.. ஆனால் பள்ளி வரலாற்று பாடம் செய்ததில்லை.. செய்யாது..

நீங்கள் சொல்லியிருப்பது போலே நல்ல விஷயங்கள் நினைவிலே இருப்பதற்கு காரணம், தீயவை என்று எதையும் அப்போது காண முடியவில்லை. அப்படி எதையாவது கண்டு அவை தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருந்தால் நினைவிலே இருந்திருக்கும்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்புத் தோழிகள் தேன்மொழி மற்றும் சந்தனாவுக்கு! என்னங்கபா...தீர்ப்பு வந்துவிடும் என்று அதற்குள் பதிவு போடவேண்டுமே என்று பயந்து, பயந்து ஒவ்வொரு முறையும் அவசர அவசரமா பதிவிட்டு பார்த்தால், இன்னும் நடுவரை காணவில்லையே? :)

நடுவர் தாமரை அவர்களே! என்ன திடீர்னு சைலன்ட் ரீடராகிவிட்டீர்களா? :-) தீர்ப்பு எப்ப‌டி சொல்ல‌லாம் என்று சந்தோஷிட‌ம் ஆலோச‌‌னைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்க‌ளா? :) சரி, சரி யோசித்து, நிதானமா வாங்க!

சந்தனா! நடுவர் வர்றதுக்குள்ள உங்களுக்கு இன்னும் சில‌ பதில்களையும் சொல்லிக்கிறேன் :)

//நீங்கள் சொல்லியிருப்பது போலே நல்ல விஷயங்கள் நினைவிலே இருப்பதற்கு காரணம், தீயவை என்று எதையும் அப்போது காண முடியவில்லை. அப்படி எதையாவது கண்டு அவை தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருந்தால் நினைவிலே இருந்திருக்கும்..//

//எங்களுக்குள் எந்த விதமான தீய விளைவையும் பள்ளி வரலாறு ஏற்ப்படுத்தவில்லை.. யாரும் எதைப் பற்றியும் தீவிரமாக கல்லூரி காலத்தில் கூட விவாதித்தது கிடையாது..//

அதுபோலவேதான் சந்தனா நாங்களும் எந்த தீய விளைவையும் அப்போதைக்கு சந்தித்ததில்லை. தீயவைகளால் எந்தவொரு தாக்கமும் ஏற்பட்டதுமில்லை. ஏனெனில் நாம் படிக்கும் அந்த டீன் ஏஜ் அப்படி! நான் ஏற்கனவே சொன்னதுபோல், அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவே தோணாத வயது அது! ஆனால் அந்தப் பருவம் தாண்டிய பிறகே, இதுதான் உலகம் என்று முழுமையான கண்ணோட்டத்தில் எதையும் பார்ப்போம். அப்போதுதான், நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தோமானால், சரியான கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும்போது உண்மையும், உண்மையோடு கலக்கப்பட்ட பொய்யும், புரட்டும் விளங்கும்! நீங்க‌ள் அடிக்க‌டி சொல்கிறீர்க‌ளே, "இது நடந்தது என்பதற்கான அறிமுகம் தான் அது.." என்று, அதேபோல் ஒரு அறிமுக‌மாக‌தான், தீய‌வையும் சொல்ல‌ப்ப‌ட்டிருந்த‌து ப‌ள்ளிப் பாட‌த்தில்! என‌க்கு இன்றும் நினைவிருக்கிற‌து ச‌ந்த‌னா!

//இது தான் சரி என்று ஆணித்தரமாக சொல்வதற்கு ஆதாரம் ஏதுமில்லை..//

இருக்கிற‌து ச‌ந்த‌னா! இருக்க‌க்கூடிய‌ வ‌ர‌லாறைப் ப‌டித்தால் மீண்டும் உங்க‌ளுக்கு தெளிவு கிடைக்காது. அத‌னால்தான் சொன்னேன், "நீங்கள் இப்போது படிக்கவேண்டியது, வரலாற்று ஆய்வாளர்களின் முடிவுகளைதான்! நான் ஏற்கனவே சொன்னதுபோல், திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாறுகளை அல்ல!" என்று.

//எனக்கு மட்டும் ஒரு வரம் கிடைக்குமேயானால், காலத்தில் பின்னோக்கி சென்று "உண்மையில் நடந்தது என்ன" என்று இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்ற ஆசை உண்டு :))) //

ம்...ந‌ல்லாதான் இருக்கு உங்க‌ ஆசை.. ஆனா இது பேராசையால இருக்கு :))

//ஊடகங்கள் இவ்வாறு செய்யும்.. சினிமா செய்யும்.. ஆனால் பள்ளி வரலாற்று பாடம் செய்ததில்லை.. செய்யாது..//

செய்யும், செய்திருக்கிற‌து! உங்க‌ளால் ந‌ம்ப‌ முடியாம‌ல் இருக்க‌லாம். 2006 ம் வ‌ருட‌ம் என்று நினைக்கிறேன், சென்னையில் 'சுயமரியாதை இயக்கம்' சார்பில் ந‌டந்த கல்வியாளர்கள் கூட்டத்தில், 'தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு'(NCERT) என்ற அமைப்பு வெளியிட்ட வரலாற்று புத்தகங்களை ஏன் கடுமையாக கண்டித்தன‌ர்? உங்க‌ளுக்கு தெரிந்திருக்கும் என‌ நினைக்கிறேன்.

தேன்மொழி! ச்சே..ச்சே சும்மா எனக்கு தோன்றிய ஒரு உதாரணம்தான், அதுக்காக அப்படிலாமா செய்வோம் :) நீங்களே விரும்பி கேட்டாலும் தரமாட்டோம்ல :-) த‌வ‌றாக‌ நினைக்காம‌ல் ஈசியாக‌ எடுத்துக்கொண்ட‌த‌ற்கு ரொம்ப‌ தேங்க்ஸ்! ஸாரிபா, உங்க‌ ஹீரோ (கொடி காத்த‌ கும‌ர‌னை) ம‌றந்த‌த‌ற்கு :)

//நானும் உங்களை எதிர்க்கவில்லை ...வரலாறு பாடங்களில் திருத்தங்கள் வரலாம்...வர வேண்டும்...// உங்களின் வார்த்தை உண்மையிலேயே ரொம்ப‌ சந்தோஷ‌மாக‌ உள்ள‌து!

//நீங்கள் சொல்வது போல் இடையில் நிறுத்தி மீண்டும் ஆரம்பிப்பது என்றுமே சற்று கடினம் ....//உண்மைதான், ஆனால் கல்விக் கொள்கைகளை உருவாக்கும் மத்திய அரசின் உயர் நிறுவனங்கள் ம‌ன‌ம் வைத்தால், இது ரொம்ப‌ எளிது! நாங்க‌ளோ நீங்க‌ளோ வெறும் குர‌ல் கொடுக்க‌ ம‌ட்டும்‌தான் முடியும் தேன்மொழி! சரிபா...பிற‌கு பேசுவோம், ரொம்ப‌ க‌ளைப்பாகிவிட்ட‌து :)

மொழி, இனம், தேசம், அறிவியல், கணிதம், கலை இன்னும் எல்லாமே திடீரென்று ஒரே நாளில் தோன்றிவிட வில்லை... புல், பூண்டு முதல் எவரெஸ்ட் சிகரம் வரை எப்படி தோன்றியது என்பதற்கு வரலாற்று ஆய்வுகள் உதவுகின்றன...

இன்று எந்த அளவு அறிவியல் தொழில்னுட்பம் வளர்ந்து இருப்பினும் வரலாறு சொல்லும் இனப்பாகுபாடு தான் மனிதனுக்கு சென்று சேர்கிறது..

அறிவியல் சொல்லுவது மனிதன், சிந்திக்கத் தெரிந்த சிரிக்கத் தெரிந்த விலங்கு இனம் என்று... ஒரே இனம்..

நாம் மனித இனம் என்று உலக மக்களால் சிந்திக்க முடிகிறதா?
-பள்ளியில் வரலாறு படித்ததில் ...
பழைய கற்காலத்தில் கற்களை வைத்து மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டான்.. புதிய கற்காலத்தில் கற்களைக் கூர்செய்து சண்டை போட்டான்.. தற்காலத்தில்(கி. பி க்கு முன் பல ஆயிரம் /500 வருடங்கள் என்று நினைக்கிறேன்) இரும்பினால் ஆன ஆயுதங்களில் சண்டைபோட்டான்.. பின்னர் ஆயுதங்கள் வடிவமைத்து சண்டை போட்டான்... பின் அணு குண்டை உலகப் போரில் அறிமுகப் படுத்தி சண்டை போட்டான்... இப்போ அணு ஆயுதங்கள் மற்றும் உயிர்க் கொல்லிகளால் சண்டை வரும் அபாயம்... என்ன ஒரு மனித வரலாறு...

வரலாறில் ஒரு அரசின் வீழ்ச்சி, இன்னொரு அரசின் ஆட்சி ..

அன்று வேறு மாதிரி நடந்த யுத்தங்கள் இன்று வேறு வடிவில்...

என்ன நன்மை விளைந்தது? ஐ நா சபை தோன்ற முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களே காரணம் என்று அறிந்தோம்.. வரலாற்றின் நன்மை இது வேண்டுமானால் இருக்கலாம்...
மேலே சொன்ன இனப்பாகுபாடுக்கு வரலாறு எந்த விதத்திலும் மேலும் தீங்கு பயக்குமா என்று சிந்திக்க வேண்டும்.. திரிக்கப் பட்ட வரலாற்றின் உண்மை வெளி வரும் போது அல்லது சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை உணரும் போது வரலாறை வெறுப்பர்... அந்த நிலை வரக்கூடாது... அதற்குத் தான் அஸ்மாவின் பதிவுகள்/உதாரணங்கள் நல்ல விளக்கம்...

ஒரே இனமாய் மனித இனம் வாழதுவங்கியது.. இதோ இப்போது இருப்பது போல் என்று புதிய வரலாற்றையும் சேர்த்து, இன்னும் 50 வருடங்களுக்கு பின்னாலாவது குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற ஆவலில் தீராத தாகத்தில் தான்... "வரலாறு" என்று சொல்லும் பாடம் உண்மை உரைப்பதாகவும், ஆர்வம் ஊட்டுவதாகவும், பாரபட்சம் இல்லாததாகவும் இருக்க வேண்டும்... அப்படி இல்லாத வரலாறு குழந்தைகளுக்கு வெற்று மனனம் செய்யும் சுமையாக தேவையில்லை என்று உரையை முடிக்கிறேன்...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

எங்க போயிட்டீங்க .............. நிஜமாகவே தலைமறைவா....
மனித இனத்தைப் பற்றிப் பேசியதால் இன்னும்...
டைனோசார் மற்றும் பல மிருகங்களும் வாழ்ந்தன என்பதற்கு நாம் எலும்புக் கூடுகளைத்தான் வைத்துதான் சொல்லுகிறோம்...யாராவது அவற்றைப் பற்றி எழுதியிருந்தால் வசதியாக இருந்திருக்கும்...அதை மீண்டும் மீண்டும் பதிந்து ...அவற்றின் வரலாறும் தெரிந்திருக்கும்...
இன்னும் பிரமிடுகளின் மர்மங்கள் பல புரிபட மாட்டேனென்கின்றன....... இவ்வளவு அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்தும் அதை புரிந்து கொள்ள தவிக்கிறோம் நாம்...மூதாதையற்கு எப்படி இவ்வளவும் தெரிந்தது....இதற்குத்தான் வரலாற்று படிப்பிலும் இடைவேளை வேண்டாம் என்கிறேன்....
ஆயிஸ்ரீ ....எப்பங்க மனித இனம் ஒரே இனமாய் இருந்துச்சு...ஆதாம் ஏவாள் காலத்திலா...அப்பக்கூட ஆதாம் ஏவாளை கடவுள்கிட்ட போட்டுக் கொடுக்கிறார்.... தான் தப்பிக் கொள்ள...அடுத்த தலைமுறையில் (பைபிள் கதை) காயின் ஆபேலை கொலையே பண்ணிட்டான் ...பொறாமையினால்...
எந்த காலத்திலும் எந்த உயிரினமும் சண்டைப் போடாமல் இருக்க வாய்ப்பில்லை...
அதற்காக வரலாறுகள் வேண்டாம் என்றால் எப்படி ..... எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க்கட்சி குறைகள் சொல்லும் என்பதற்க்காக தேர்தல் வேண்டாம் என்பீர்களோ....
குறைகள் இருந்தாலும் அவற்றை நிறைவாக்கி வரலாற்றுப் பாடம் அவசியம் தேவை.....என்று முடிச்சுடலாமா நடுவரே................

வரலாற்றை நாம் எவ்வாறு படித்து பயன் அடைந்து, பிரமிப்படைந்து, கற்று இன்று அதில் சிலவற்றில் திருத்தங்கள் உள்ளன எனவும் அறிந்து நம்மால் ஏதும் செய்ய இயலாத நிலையில்.............. இனிவரும் சந்ததியும் அந்த வரலாற்றை படித்து, எதிரணியினர் கூறிப்படி படிக்கும் போது தீமை இழைக்காத அந்த வயதில் படித்து பயன் அடையவேண்டியதை அறிந்து நம்மை போல் பிரம்மிப்பும் அடைந்து, அறிய வேண்டிய திருத்தங்களை அறிந்து மாற்றி அமைக்க வழிவகுப்போம்.

முன்னோர்களாகிய நாம் வழிவகுப்பதை விட்டுவிட்டு மறைப்பதோ, தேவையில்லை என ஒதுக்குவதோ முறையாகாது.

எனவே வரலாறு மிகமிக அவசியமான பாடம் என கூறி விடைப்பெறுகிறேன், நன்றி நடுவரே.
அன்புடன்,
சுபத்ரா.

with love

நடுவரே என்ன இது , தீர்ப்பு சொல்வதை மறந்து விட்டு உறக்கமோஓஓஓஓஓஓஓ

வாருங்கள் தீர்ப்பு எழுதுங்கள்.
அன்புடன்,
சுபத்ரா.

with love

இந்த பட்டிமன்றத்தில நல்ல நல்ல பதிவுகள் எழுதி தனது கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி, அப்படியே எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்..சனி ஞாயிறு தீர்ப்பு எழுதிவிடலாம் என்று நினைத்து இருந்தேன், ஆனால் சந்தோஷ்க்கு ரொம்ப காய்ச்சல், என்னால் எந்த வேலையும் செய்யமுடியல...இதோ இன்னைக்குதான் கொஞ்சம் குணமாகி இருக்கு,அவன் தூங்கும்போது தீர்ப்பு விரைவில் எழுதிவிடுகிறேன்..மேலும் அறுசுவையும் சரியாக கிடைக்கவில்லை,இன்று அல்லது நாளை தீர்ப்பு எழுதுகிறேன்...தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்...

///மத அரசர்,மன்னர் என்று குறிப்பிட்டு வரலாறை மாணவர்களுக்கு போதிக்க வேண்டிய அவசியம் என்ன? இளவயதிலேயே மத துவேஷத்தை விதைக்க வேண்டுமா? யோசியுங்கள் நடுவர் அவர்களே///

கட்டாயம் யோசிக்கிறேன்ப்பா, நன்றி!

///ஐஸ்வர்யா, ஆசியா - உங்க கமெண்ட்ஸ் பாத்ததும் வெக்கம் வந்துடுச்சு போங்க :)) நன்றி.. ///

நீங்க அங்க வெல்கபடுவது இங்க தெரியுது!

///தப்பா நினைக்காதீங்க - எங்க அணிய பாத்து நீங்க நிறைய கேள்வி கேட்டதால உள்ளார ஒரு பயம், ஒரு வேளை வீட்டுல எதிரணியில பேசிட்டு இருக்கீங்களோன்னு :)) அந்த ஆர்வத்துல தான் கேட்டேன்.. விருப்பமில்லைன்னா வேண்டாம்..///

இல்லைங்க சந்தனா உங்க அணியில் மட்டும் கேள்வி கேட்க்கல, எங்கங்க கேட்டு இருப்பேன், ஆனால் அது சந்தேகம்னு சொல்லமுடியாது, சும்மா வார்த்தை விளையாட்டு மாதிரி தான்!தவறாக நினைக்க வேண்டாம்! மேலும் விருப்பமில்லாமல் இல்லைப்பா, தீர்ப்பு தெரிஞ்சு போகும்னு தான் சொல்லல...

///இந்நேரம் இங்கிலாந்து தூள் தூளாயிருக்கொனும்.///

இந்த பாரா முழுவதும் அழகா தான் சொல்லிருக்கீங்க...நன்றி

மேலும் சில பதிவுகள்