வாட்டர் பாட்டிலை கொண்டு ரிஸ்ட் பேண்ட் (wrist band) செய்வது எப்படி?

தேதி: October 19, 2009

5
Average: 4.1 (8 votes)

 

ஃபெல்ட் துணி - சிவப்பு நிறம்
சிறிய வாட்டர் பாட்டில் - 1
ஸ்டோன்கள்
ஃபேப்பரிக் பெயிண்ட்
ஒவல் வடிவத்திலான கோல்டுநிற மணிகள்
பெவிக்கால்
ஃப்ளேடு
ப்ரஷ்
கத்திரிக்கோல்

 

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஸ்டோன்களை சுற்றி வரிசையாக சம்கிகள் கோர்த்து தைத்திருக்கும் ஸ்டோன்கள் கடைகளில் பல டிசைன்களிலும், வடிவத்திலும் ரெடிமேடாக கிடைக்கிறது. இந்த வகை ஸ்டோன்களை சுடிதார், ப்ளவுஸ், புடவை போன்றவற்றில் வைத்து தைத்துக் கொள்ளலாம்.
வாட்டர் பாட்டில் ஒட்டியிருக்கும் பேப்பரை உரித்து எடுத்துவிட்டு, அதில் ஏதாவது ஒரு வளைவு பகுதியை ப்ளேடால் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
அந்த வளையத்திற்கு தகுந்தாற்ப்போல் ஃபெல்ட் துணியையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டிய பாட்டில் வளையத்தின் இருமுனைகளும் பட்டையாக இல்லாமல் கத்தரிக்கோலை பயன்படுத்தி அதன் முனைகளை வளைவாக வெட்டி விடவும்.
வளையத்தின் முழுவதும் பெவிக்கால் தடவி அதை ஃபெல்ட் துணியின் மீது வைத்து துணியை உள்பக்கமாக மடக்கி ஒட்டிக் கொள்ளவும்.
ஃபெல்ட் துணி பாட்டில் வளையத்துடன் நன்கு ஒட்டிக் கொள்ளும்வரை வைத்திருக்கவும்.
பிறகு அதன் நடுவில் சம்கி சுற்றிய பெரிய ஸ்டோனை வைத்து ஒட்டவும்.
பெரிய ஸ்டோன் ஒட்டிய வலதுபக்கத்தில் சிறிய பூவின் வடிவில் உள்ள ஸ்டோனை இடைவெளிவிட்டு இரண்டு ஸ்டோன்கள் ஒட்டவும். இடது பக்கத்திலும் இதேப் போல் ஒட்டிக் கொள்ளவும்.
அடுத்து கொஞ்சம் பட்டையாக உள்ள பேண்ட் செய்வதற்கு வளையம் வெட்டும்போது இரண்டு வளையமாக சேர்த்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். முன்பு செய்தது போல் அந்த வளையத்தில் ஃபெல்ட் துணியை ஒட்டி நன்கு காயவிடவும்.
வளையத்தில் ஃபெல்ட் துணி நன்கு ஒட்டிக் கொண்டதும் அதன் ஏதாவது ஒரு முனையின் இருபக்கத்திலும் ஒவல் வடிவிலான கோல்டுநிற மணிகளை ஒட்டி விடவும். அதற்கு மேல் மூன்று செ.மீ இடைவெளிவிட்டு இதேப் போல் இரண்டு மணிகளை வைத்து ஒட்டவும். பச்சைநிறத்தில் பூ வடிவிலான ஸ்டோன் ஒன்றை எடுத்து அதன் நடுவில் பெவிக்கால் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
இதுப்போல் அந்த வளையல் முழுவதும் ஸ்டோனையும், மணிகளையும் ஒட்டிக்கொள்ளவும். நடுவில் ஸ்டோனை ஒட்டும்பொழுது பெரிய அளவிலான மஞ்சள்நிற ஸ்டோனை ஒட்டவும்.
இதேப்போல் பட்டையாக உள்ள வளையலில் ஃபெல்ட் துணி ஒட்டாமல் படத்தில் உள்ளது போல் ஃபேப்பரிக் பெயிண்டை கொண்டு வளையல் செய்துக் கொள்ளலாம்.
நன்கு காய்ந்ததும் அதன் நடுவில் உள்ள பகுதிகளில் உங்களுக்கு பிடித்தமான டிசைனை வரைந்து கொள்ளவும். அடுத்து ஜிக்ஜாக் வடிவத்தில் உள்ள திக்கான வாட்டர் பாட்டிலில் ஏதாவது ஒரு பகுதியை வெட்டி எடுத்து கொள்ளவும். அதில் நீலநிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காய்ந்ததும் அதில் சின்ன சின்ன பூக்களை வரைந்துக் கொள்ளவும்.
வாட்டர் பாட்டிலை கொண்டு செய்யப்பட்டுள்ள அழகிய ரிஸ்ட் பேண்ட்கள் தயார்.
திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக கைகளில் அணியக்கூடிய இந்த ரிஸ்ட் பேண்ட் செய்முறையை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாட்டர் பாட்டில்'ல இத்தனை மேட்டர் இருக்கா???!!!சூப்பர் செண்பகா.... எப்படி உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோனுது???!! நம்ம சின்ன ப்ரெயினுக்கு இப்படிலாம் தோனமாட்டங்குது. :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூபர்ப் ஐடியா பாப்பி. பிடித்திருக்கிறது. :)
போடும் ட்ரெஸ்ஸுக்கு மாட்சிங் ஆக செய்து அணியலாம். :)
கட்டாயம் செய்யப் போகிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அழகா செய்து காட்டியிருக்கீங்க.வேறு என்னென்ன செய்ய தெரியும் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அருமையான ரிஸ்ட் பாண்டுகள் செண்பகா அண்ணி. கலக்கியிருக்கீங்க!! வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta