EDD (Due Date) கொழப்பம்

அமெரிக்காவில் ஸ்கேன் செய்த போது அவர்கள் ஒரு due date கொடுத்தார்கள்......பின்னர் இப்பொழுது இந்தியாவில் ஸ்கேன் செய்த போது அது வேறாக உள்ளது. குறைந்தது பத்து நாட்கள் முன்னராக உள்ளது. ஆகையால் due date அன்றோ அல்லது அதற்க்கு முன்னமோ குழந்தை பிறக்க வில்லைஎன்றால் எவர்கள் induce செய்து விடுவார்களாம் (அதுவும் ஒரு வாரம் கழித்து தான்). எப்படியும் குளறுபடி உண்டோ??? ஸ்கேன் எப்படி வேறு வேறு தேதிகளை கொடுக்கும். யாரவது தெரிந்தவர்கள் பதில் கூறுங்களேன் அல்லது உங்களுக்கு தெரிந்த மருத்துவரிடம் கேட்டு சொல்லுங்கள் தோழிகளே.....

லாவண்யா

தோழி லாவண்யா.... குழந்தை பிறக்கும் தேதி குழந்தையின் தலை வளர்சியை வைத்தும், நாம் கொடுக்கும் கடைசி மென்சஸ் டேட் வைத்தும் தான் சொல்கிறார்கள். இது எப்போது வேண்டுமானாலும் மாறும். 1 வாரம் காத்திருந்தும் உங்களுக்கு வலி வராத பட்சத்தில் மட்டுமே இன்டூஸ் செய்வார்கள், அதுவும் குழந்தையின் வளர்சியை மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்த பின்னர் தான் முடிவு செய்வார்கள். கவலை வேண்டாம். மருத்துவர் ஆலோசனைபடி செய்யுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாணி நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. இன்று தான் என் மருத்துவரிடன் கேட்டு தெரிந்து கொண்டேன். அதாவது முதலாவதாக எடுக்கும் ஸ்கேன் தான் உண்மையான தேதியை கொடுக்குமாம். ஆகையால் பொறுத்திருப்போம் என்று சொன்னார்கள்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்