சமைத்து அசத்தலாம் பகுதி - 22, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -21, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -22 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை ,
mptindra - 31 , ammujan - 28 ,lakshmi sundar - 22 , jareenaa - 21 , simuke - 20 , namura - 20 , elu - 19 , jayaraje - 19 , boomaravi - 18 , vani valakrishnan- 16
ஆகிய பத்து பேரின் குறிப்புக்களைச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 (arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை பத்து பேரின் குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (03/11) முடிவடையும். புதன்கிழமை(04/11), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

அக்டோபர் 25, 2009 - 8:20pm - வழங்கியவர் அதிரா

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

இத்தலைப்பில் கலந்து கொண்டவர்கள் இலா, இமா, ரேணுகா, வின்னி, ஹைஷ் அண்ணன், ஸ்ரீ, வத்சலா, ராணி, அம்முலு, சீதாக்கா, லஷ்மிசங்கர், லாவன்யாமூர்த்தி, கவிசிவா, ஜலிலாக்கா, சுவர்ணா, துஷ்யந்தி, ஆசியா, மாலி, வனிதா, விஜி, திருமதி.ஹுசைன் அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(26/10) சமைக்கத் தொடங்குவோம், நிறைய சமைத்து, அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அக்டோபர் 25, 2009 - 8:21pm - வழங்கியவர் அதிரா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தோழிகள் அனைவரும் நலமா?

இந்த முறை 10 பேரின் குறிப்பை செய்கிறோம்,ஒவ்வொருவரின் குறிப்பையும் திறந்து தேடி எடுக்க சிரமாக இருக்கும் என்பதால் அனைவரது குறிப்பும் கீழே கொடுத்துள்ளேன்,

என்ன சமைப்பது என்று இங்கே தெரிவு செய்து கொண்டு அங்கே திறந்து பார்த்து செய்யூங்கள்,இதனால் ஒவ்வொரு பக்கமாக தேட வேண்டாம் அல்லவா?? நிச்சயம் உங்களுக்கு இது பயன் தரும் என்று நம்புகிறேன்.

mptindra - 31
http://www.arusuvai.com/tamil/experts/1595
கோங்னாமுல் சூப்
தக்கால்பி – கொரியன் ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்
கேழ்வரகு கூழ் (இனிப்பு)
முருங்கைகீரை குழம்பு
பாகற்காய் விதை வறுவல்
ஓமு ரைஸ் (ஆம்லெட் ரோல்டு ஃபிரைடு ரைஸ்)
கிம் பாப்
கேரான் மாலி - முட்டை ரோல்
ஐஸ் காஃபி
ரெடிமேட் காஃபி
கொரியன் ஜின்செங் சிக்கன் சூப்
பாட் பிங்க் சூ
எள்ளு முட்டை
நாரத்தை பழம் டீ
கோதுமை மாவு கேரட் தோசை
பிரட் பூஜியா
பிடி கொழுகட்டை
பரங்கிகாய் பொரியல்
கொத்த மல்லி துவையல்
லெட்டூஸ் பொரியல்
சுக்கினி வறுவல் & சுக்கினி முட்டை வறுவல்
ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி (Rice cake with Vegetables)
வெள்ளரிக்காய் ஊறுகாய்
சுக்கினி (Zucchini) பொரியல்
பிபிம்பாப் - Korean Food (பிபிம் - மிக்ஸ்டு,
பாப் - ரைஸ் - சாதம்)
சிக்கன் குழம்பு
புளிசாதம்
கோதுமை மாவு முட்டை தோசை
டிரை (உலர்) நூடுல்ஸ்
துபு (டொஃபு) பிரட் டோஸ்ட்
கேரட் அல்வா
***********************************
ammujan24 - 28
http://www.arusuvai.com/tamil/experts/18929
சாம்பார்
பத்தூரா
காரட் ஜுஸ்
சோளா பூரி
சிம்பிள் ப்ரைட் ரைஸ்(உணவகங்களில் செய்யும் முறை)
பெப்பர் ரைஸ்
காபேஜ் கோப்தா கறி
ஈசி குவிக் வெஜ் பிரியாணி1
பைங்கன் கா பர்தா
வெந்தயக் குழம்பு
கிரீன் ரைஸ்
பிரெஷ் ப்ரூட் கஸ்டர்டு
கற்கண்டு சாதம் - 2
மேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொடேடோ
பீட்ரூட் ஹல்வா
ஸ்பெஷல் ஸ்பைசி & ஹெல்த்தி சாதம்
பன்னீர்
உடுப்பி ஹோட்டல் வைட் சட்னி
அவல் வடை
கார்லிக் ஷேக்
கற்கண்டு சாதம்
ரசப்பொடி இல்லாத ரசம்
போஹா கீர்
சைனீஸ் ஹாட் நூடுல்ஸ்
அவல் உப்புமா
முருங்கைக்கீரை பொரியல்
வேர்க்கடலை சட்னி
பஞ்சாபி சப்பாத்தி
புதினா தொகையல்
கடலைமாவு சட்னி
*******************************
lakshmi sundar - 22
http://www.arusuvai.com/tamil/experts/1906
வெஜிடபுள் சாலட் சாட்
புதினா புலாவ்
கறுப்பு உளுந்து தோசை
முள்ளங்கி சப்பாத்தி
ஆனியன் ரவா தோசை
குழந்தைகளுகான கடைந்த கீரை
குழந்தைகளுகான கடைந்த கீரை
புளி இல்லா குழம்பு
சைனீஸ் வெஜிடபுள் சூப்
கேரமல் பாயாசம்
கறுப்பு உளுந்து சாதம்
கடலை பருப்பு உப்புமா
திருநெல்வேலி சொதி
ப்ரைடு நூடுல்ஸ்
மைக்ரோவேவ் பாகற்காய் பொறியல்
வெள்ளரிகாய் சாலட்
அப்பள மிக்சர்
புளி மிளகாய்
தக்காளி தொக்கு(எளிய முறை)
அரைத்து விட்ட புளி குழம்பு
வெந்தய குழம்பு(புதிய முறை)
பீர்கங்காய் சட்னி(ஆந்திரா)

***********************************
jareenaa - 21
http://www.arusuvai.com/tamil/experts/14446
அல்வா பூரி
உளுந்து சோறு
உளுந்து சோறு
டோ நட்
பால்வளைகாய்ச்சு
கிண்ணத்தப்பம்
புளிகறி
கருப்பட்டி ஸ்டப் கொழுக்கட்டை
சாக்லேட் புட்டிங்
கலத்தப்பம்
இறால் ஊறுகாய்
சைனீஸ் சிக்கன் சூப்
முட்டை கடல்பாசி
கேக் பணியாரம்
வாழைத்தண்டு சூப்
பர்மா நூடுல்ஸ்
இனிப்பு கிச்சடி.
வெண்டைக்காய் இறால் தீயல்
உளுந்து அடை
முட்டை சொர்க்க

***********************************
simuke - 20
http://www.arusuvai.com/tamil/experts/2298
ப்ரெஞ்ச் ப்ரைஸ்
வெல்ல மாங்காய்
மிளகாய் சட்னி (விருது நகர் ஸ்பெஷல்)
தக்காளி சூப்
கோதுமை தோசை
பூண்டு சட்னி
முட்டை மசாலா
முட்டைகோஸ் பொரியல்
கீரை மசியல்
மில்கி மேகி நூடுல்ஸ்
உருளைக்கிழங்கு வறுவல்
எலுமிச்சை ஊறுகாய்
வெண்பொங்கல்
சுறாமீன் குழம்பு
கொத்துமல்லி துவையல்
உளுந்து பொடி
முட்டை பொடிமாஸ்
முடக்கத்தான் தோசை
வடை குழம்பு
இறால் தொக்கு

************************************
namura - 20
http://www.arusuvai.com/tamil/experts/747
புதினா துவையல்
பொரிகடலை துவையல்
முருங்கக்காய் தேங்காய் குழம்பு
சீரக சட்னி
இட்லி பொடி
ரசப்பொடி
சாம்பார் பொடி
செர்ரி கேக்
தேங்காய் சட்னி
மசாலா தோசை
சின்ன வெங்காயக்குழம்பு
பாசிப்பருப்பு பாயாசம்
தக்காளி அவியல்
வாழைக்காய் புட்டு
இட்லி பொடி
மாங்காய் பச்சடி
மொச்சை குழம்பு
தக்காளி பிரியாணி
எண்ணெய் வாழைக்காய்
வெஜிட்டபிள் பொங்கல்

************************************
elu - 19
http://www.arusuvai.com/tamil/experts/19422
கோதுமை பாதாம் பர்பி
மைக்ரோவேவ் முட்டைகோசு துவையல்
பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு
கிட்ஸ் நூடுல்ஸ் அப்பம்
முளைகட்டிய வெந்தய குழம்புமுறை -2(சுலப முறை)
மைக்ரோவேவ் தக்காளி க்ரீன் சட்னி
முளைகட்டிய வெந்தய குழம்பு(சம்மர் ஸ்பெஷல்)
இன்ஸ்டெண்ட் முந்திரி பால்ஸ்
கிட்ஸ் பேக்டு (Baked) மஷ்ரூம்
ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
கிட்ஸ் பனானா மஃபின்
பீர்க்கங்காய் ரைஸ்
பிஸ்கெட் அல்வா
கிட்ஸ் கேரட் புலாவ்
ஆகாவா அல்வா
மல்டி புரொட்டீன் க்ரீன் வடை
குடமிளகாய் துவையல்
எளியமுறை கேபேஜ்(முட்டைகோசு துவையல்)
வெஜிடேரியன் மட்டன்(காளான்) குழம்பு

************************************
jayaraje - 19
http://www.arusuvai.com/tamil/experts/17569
கறிவேப்பிலை சாதம்
புதினா தயிர்ப்பச்சடி
கேரட் ஜாம்
தக்காளி பாத்
தக்காளி தயிர்ப்பச்சடி
காலிப்ளவர் குருமா
ராகி பக்கோடா
ஈசி க்ரீம் கேரமெல்
மசால் பொரி
வெங்காயத் தாள் குழம்பு
வல்லாரை கீரை சாதம்
ரைஸ் க்ரிஸ்பி கட்லெட்
வேப்பம்பூ துவையல்
சன்னா வடை
ஓட்ஸ் காரக் கொழுக்கட்டை
முந்திரி அல்வா
புடலங்காய் கோளா உருண்டை
குடமிளகாய் தொக்கு
இட்லி மஞ்சுரியன்-1
சேமியா பக்கோடா
**************************************
boomaravi - 18
http://www.arusuvai.com/tamil/experts/861
காலிஃப்ளவர் பஜ்ஜி
கல்கண்டுப் பொங்கல்
இஞ்சி தொக்கு
கும்பகோணம் கொத்ஸு
பூசணிக்காய் புளிக்கூட்டு
சாம்பார் பொடி
ரச பொடி
கோதுமை அப்பம்
புளிக்கீரை
மணங்கொம்பு
தேன்குழல்
நிலக்கடலை சட்னி
பூசணிக்காய் புளிக்கூட்டு
கடப்பா
பாதாம் பூரி
ஸ்பெஷல் தக்காளி குழம்பு
ரேஸ் குழம்பு
ஊத்தப்பம்:

*************************************
vani valakrishnan- 16
http://www.arusuvai.com/tamil/experts/499
தக்காளி மிளகு சட்னி
மைதா ரவை கேக்
தக்காளி கீரைப் பொரியல்
அரைச்சுவிட்ட ரசம்
வெங்காயக் காரக் குழம்பு
பசலைக்கீரை பூரி
பீட்ரூட் பூரி
பிரட் பஜ்ஜி
புதினாச்சட்னி(இன்னொரு செய்முறை)
வெங்காய சாதம்
கேரட் பாசி பருப்பு கூட்டு
காளான் சப்ஜி
கத்திரிக்காய் புளி குழம்பு
கீரைப் பொரியல் ( இன்னொரு செய்முறை)
கீரைப் பொரியல்
வெஜிடபிள் சாலட்
***********************************

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அட அட அட என்னமா டிரெயின் கூட்டம்:)

எங்கப்பா ஒருத்தரையும் கானாம்,

அதிரா என் கணக்கு வாணி பாலகிருஷ்னன் - தக்காளி மிளகு சட்னி

இன்று காலை தோசைக்கு செய்தேன்

எல்லாத்தையும் நான் கம்பு எடுத்து தேடிகிட்டு வருவதற்க்குள் இங்கே வந்திடுங்க,எல்லாத்துக்கும் டீ போட்டு வைச்சு காத்துகிட்டு இருக்கேன்,நானே குடித்து தீர்க்கும் முன்னர்வாங்கப்பா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா இவ்வளவு கழ்டபட்டு லிஸ்ட் எடுத்து கொடுத்து இருக்கீங்க, வாழ்த்துக்கள், நேரம் இல்லை இருந்தாலும் முடிந்ததை செய்கிறேன்.

இந்திரா

கோதுமை கேரட் தோசை

கொத்துமல்லி துவையல்

Jaleelakamal

அதிராவை காணும், தீபாவளி முடிந்ததிலிருந்து, என்ன விரதமா?

Jaleelakamal

வாங்க ஜலிலா அக்கா நலமா?

நிச்சயம் முடியும் தொடர்ந்து செய்து சொல்லுங்கள்,

அதிரா விரைவில் வந்திடுவார்,நீங்கள் கவலை படாமல் தொடர்ந்து வாங்க

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா.... எங்கே போனீங்க?? நலமா? சீக்கிரம் வாங்கப்பா.....

ரேணு..... அதிரா இல்லை என்றாலும் அவர் வேலை பாதியில் தடை இல்லாமல் நடக்க நீங்க எடுத்த முயற்சி பாராட்டுக்கு உரியது. அதுக்காகவே வந்துட்டேன் பாருங்க....

வாணி:

கத்திரிக்காய் புளி குழம்பு

பூமாரவி:

நிலக்கடலை சட்னி

சரியா???? கணக்கில் சேருங்கோ.... நேரம் கிடைக்கும்போது வருகிறேன். மீண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ரேணுகா. நலமாக இருக்கீங்களா. கடந்தமுறை கலந்துகொள்ளமுடியவில்லை. மன்னிக்கவும்.இம்முறை கலந்துகொள்கிறேன்.இன்றிலிருந்து பதிவு தருகிறேன்.நன்றி.

அன்பு ரேணுகா,
அதிரா வராவிட்டாலும் விடாது பணியைத் தொடர எடுத்த உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். விரவில் சமையலுடன் வருகிறேன். :)
இமா

‍- இமா க்றிஸ்

அன்புடன் ரேணுகா! எல்லோர் சமையலையும் இங்கே அழகாக பதிவு செய்து வைதுள்ளிர்கள், எமக்கு வேலை கொஞ்சம் மிச்சம். உங்கள் சேவைக்கு நன்றி.
அதிராவை அதிக நாட்களாக காணவில்லை.என்ன கந்தசஸ்டி விரதமோ?????????????
எது எப்படி இருந்தாலும், இங்கு வந்து ஒரு பதிவு போட்டு விட்டு போகவும்.
உங்களை காணதது, அறுசுவை மன்றத்தில் கலகலப்பே இல்லை.
நான் சமைத்து விட்டு மீண்டும் வருகின்றேன்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்