இந்தியாவில் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் - Need Information please

ஹலோ தோழிகளே,
எல்லோரும் நலம்தானே?! எனக்கு ஒரு இன்பர்மேஷன் வேணும். இந்தியாவில் எந்த ப்ராண்ட் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் நல்லா இருக்கு? தோராயமா என்ன விலை இருக்கும்? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அம்மா, அப்பா இந்தியா கொண்டுசெல்ல இங்கே வாங்கினால் நல்லதா? இல்லை, அங்கேயே வாங்கலாமா? வோல்டேஜ் டிஃபரென்ஸ் வேற இருக்கு. எனக்குதான் இங்கேயிருந்து ஒன்னு வாங்கி கொடுத்தனுப்ப ஆசை. அம்மா சொல்கிறார்கள், அங்கேயே நல்ல விலையில் நன்றாக கிடைப்பதால், இங்கேயிருந்து கஷ்டப்பட்டு கொண்டுசெல்ல வேண்டாம். அங்கே போய் வாங்கிகொல்கிறேன் என்று. எனக்கு யாராவது இதைப்பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா! சொல்லுவிங்கதானே?! தேங்ஸ்! : )

ஹலோ தோழிகளே,
என்னப்பா இது? யாருமே பார்க்கலையா இந்த த்ரெட்டை? இந்தியாவில் ரைஸ் குக்கர் பற்றி தெரிந்தவர்கள் வந்து கொஞ்சம் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். ந‌னறி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நான் இந்தியாவில் panasonic ,கிட்டதட்ட 14 வருடம் ஆகிவிட்டது.அப்படியே இன்னும் பழுதில்லாமல் இருக்கு,இப்பகூட வெளிநாடு எடுத்து செல்ல ஒன்று வாங்கினேன்,அதுவும் panasonic,ரூபாய் 2250 முதல் 3000 வரை விலையில் கிடைக்கிறது.வாங்கும் குக்கருடன் கண் தட்டு(அலிமினியம்),பாயில் பண்ண ஒரு pan இந்த இரண்டுடன் வாங்கவும்.ரைஸ் வைத்து அத்துடன்,காய்கறி மற்றவை எது வேண்டுமானலும் அவிய வைக்க வசதியாக இருக்கும்.அந்த கண் தட்டு போட்டு சாதம் வைத்தால் கண் தட்டின் அடியில் திக் லேயராக கஞ்சி இருக்கும்,சாதம் வடித்தது போல் இருக்கும்.என்னோட choice panasonic. தான் .நெல்லையில் காசியானந்தா,பொன்னையா நாடார் இரண்டு கடையில் இந்த விலைக்குள் கிடைக்கிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

டியர் ஆசியா அக்கா,
நலமா? ரொம்ப நாளுக்கு பிறகு உங்களுடன் பேசுவது மகிழ்ச்சி! ரைஸ் குக்கர் பற்றின நல்ல தகவல் தந்து இருக்கிங்க. நன்றி. எங்கம்மாவும் இதே panasonic ப்ராண்ட் பற்றிதான் சொல்லிட்டு இருந்தாங்க. நீங்க யூஸ் பண்ணிட்டு இவ்வளவு அருமையா உங்க அனுபவத்தை விளக்கம் கொடுத்தது திருப்தியா இருக்கு. அவங்க வசிப்பது சென்னையில்‌. அங்க இருக்கும் கடைகளில் விசாரித்துப்பார்க்க சொல்கிறேன். மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்