ஆட்டுக்கால் சால்னா(பாயா)

தேதி: October 29, 2009

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

ஆட்டுக்கால் - 2 செட்
வெங்காயம் - 2 (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மல்லிக்கீரை, கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 8
மைதா - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரையை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பை நன்றாக அரைத்து வைக்கவும்.
ஆட்டுக்காலை வக்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும். இல்லையெனில் வக்கிய ஆட்டுக்காலே கடையில் கிடைக்கிறது
சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 2-3 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும்
கால் வெந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காய் வாடை அடங்கி சால்னா நெலுநெலுப்பாக இருக்கும்.
பின்பு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி கொட்டவும்
சுவையான சத்தான ஆட்டுக்கால் சால்னா ரெடி.


இதனை பரோட்டா, சப்பாத்தி, இடியப்பம், ஆப்பம், தோசை, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சில்லி பவுடர் விருப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும், தனித்தனியாக மசாலா சேர்க்காமல் கறி மசாலா மட்டும் சேர்த்தும் செய்யலாம். அவரவர் சுவைக்கு தக்க மசாலா சேர்த்து இந்த முறையில் சமைத்தால் அருமையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

Thank you very much for the heart touching taste. It took me back in time.
Kids loved and enjoyed every bit of it. For them it is the first time to taste paya at home