அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அதுவும் நான் தொடங்குறேன்....!!!! வாங்க.... அய்யா வாங்க... அம்மா வாங்க... நாய் குட்டி, பூனை குட்டி யார் வேணும்'னாலும் வாங்க.... ;) இங்க வந்து அரட்டை அடிங்க, நாங்க பென்ச் மேல ஏத்தி அடிக்க மாட்டோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஹாய் ஹாய்.... அனைவரும் நலமா??!! ரொம்ப நாளைக்கு பின் அரட்டை பக்கம் வந்திருக்கேன்... என்னை யார் விசாரிச்சீங்க இல்லைன்னு எனக்கு தெரியாது.... அதனால் தனி தனியா பதிவு போடாம எல்லாரையும் பொதுவா கேக்கறேன். சவுக்கியமா? புது வரவுகள் பல கண்ணில் படுகிறார்கள். அனைவரையும் வாங்க வாங்கன்னு அழைக்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அம்மாஸ் அக்காஸ் அண்ணஸ், தங்கைஸ், தோழீஸ் அனைவரும் நலமா, மற்றும் இங்க புதிதாக இனைந்து இருக்கும் புது தோழீகள் அனைவரும் நலமா, நான் மறுபடி வந்துடேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் தோழீஸ் யாராவது இருகிங்களா. நான் வந்துடேன் அரட்டை அடிக்க, என்ன விசாரித்த அனைவருக்கு என் நன்றிகள்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

இமா, நீங்கள் சொன்ன குழுவினரில் இருப்பது இருவர் தான். ஒன்று தலைவர் சந்தனா, மற்றது தொண்டர் நான். இப்படி குழுவினரே என்று சொன்னால் ஏதோ உங்களுக்கு எதிராக பெரிய படையே அறுசுவையில் இருக்கு என்று யாராவது நினைத்து விடப்போகின்றார்கள்.

நான், எனது 2 குழந்தைகள்(கவனிக்கவும் மூன்றாவது அல்ல), சித்தப்பா, சித்தி, எல்லாரும் மிகவும் நலமே.

சுபத்ரா, இந்த வாரம் அறுசுவையில் வெட்டு, குத்து வாரம்(சன் டி.வி போல). அது தான் இப்படி.

புனிதா, நலமா? பொங்கல் சாப்பிட வாங்கோ?

வின்னி, நலமா? ஹாலோவீனுக்கு எனது மகன் காஸ்ட்யூம் போடமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஏதாவது ஒரு புத்தகத்தில் படித்த காரக்டராக உடை அணிய வேண்டும் என்று ஸ்கூலில் சொன்னார்கள். நானும் மெனக்கெட்டு கடற்கொள்ளையன்(captan Hook from Peter pan ) வேஷம் போடலாம் என்று எல்லாம் வாங்கி, சுத்த வேஸ்ட்.

பிரபா, நலமா? உங்கள் காயம் ஆறிவிட்டதா?

அனாமிகா, மகேஸ்வரி, சோனியா(உங்களை யாரும் விசாரித்ததாக ஞாபகம் இல்லை), மற்ற தோழிகள் , ஜீனோ நலமா?
வாணி

வனி மனமார்ந்த வாழ்த்துக்கள். உடம்பை பாத்துக்கோங்க. யாழினி குட்டி தம்பி, பாப்பாவிற்கு ரெடியாகிட்டாங்களா?

இமா, சுகர் ஃப்ரீ சாக்கலேட் பார்சல் ஒன்னு ரெடி உங்களுக்கு:) இரண்டு நாளா இமாவின் தலை தென்படுகிறதே:) பாடசாலைக்கு லீவா?

வாணி அப்ப காஸ்ட்யூம் கடையில் திரும்ப ரிட்டர்ன் கூட பண்ண முடியாதுன்னு நினைக்கிறேன். வாணிக்கு மூன்று குழந்தைகளான்னு நானும் குழம்பித்தான் இருந்தேன்:) அதுவும் இல்லாமல் இப்ப அறுசுவையில் திடீர் திடீரென்று குழந்தைகள் நியூஸ் வருது:-)

ஹாய் வனிதா, வின்னி, சோனியா... எல்லோரும் நலமா?
எனக்கு ஒரு உதவிங்க.. பாரதியாரின் இந்த பாடல் தமிழில் உள்ளதா? தயவு செய்து லின்க் தாருங்கள்..

"பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்..."
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் (பகை)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? - நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? - நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? - நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ? (பகை)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் - நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? - நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ? (பகை)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க?
என்னை விசாரித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
சந்தனா,வாணி,வானதி அக்கா,சோனியா,சுபத்ரா,இமா அம்மா, வனிதா(வாழ்த்துக்கள்),ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா,ஜீனோ,பிரபா,சுபா,ஸ்வர்ணா,மகேஸ்வரி, தாமரை,கலா,ரூபா,அதிரா,இலா,
ஹுசைன்அம்மா,உத்ரா,மாலினி,,உமா(பாப்ஸ்),
தேன்மொழி அக்கா,ஆயீஸ்ரீ,திவ்யாஆறுமுகம்,
சுகா மற்றும் அனைவருக்கும் ஒரு ஹாய்.எல்லோரும் நலமா?
பெயர் விட்டு போனவர்கள் யாரவது இருந்தால் அவர்களுக்கும் ஒரு ஹாய் மற்றும் நலமா ?

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

பிரபா, சோனியா, வாணி,வனிதா,லஷ்மிசங்கர்,இலா,இமா,தனீஷா,
அதிரா, கலா,சுபா, சுபத்ரா, அம்முலு, புனிதா, உமா(பாப்ஸ்), ஜீனோ, ஹைஷ் அண்ணா, ஐஸ்வர்யலஷ்மி, சந்தனா, வானதி மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்