பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா?

இம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.

நம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....

"நகரவாழ்க்கையா ? கிராமவாழ்க்கையா? சிறந்தது எது?".

நம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி??!!!

கிராமத்தை விட நகரம் சிறந்ததா? அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா? அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.

வாங்க வாங்க.... எல்லாரும் வாங்க.... அன்போடு அழைக்கிறேன்... வந்து உங்க வாதத்தை ஆரம்பிங்க. மற்ற பட்டிமன்றம் போல் இதுவும் நகைச்சுவை, சூடான வாதங்களோடு கலக்கட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தலைப்பு ஆரம்பமாகி 2 மணி நேரம் ஆயிடுச்சு.... :(( ஒழுங்கா எல்லாரும் பட்டிமன்றத்துக்கு வந்துடுங்க. இல்லைன்னா நான் அழுவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,நம்ம அறுசுவை மக்கள் உங்களை ரொம்பவே சோதிக்கின்றார்கள்.வெகு நாளாக அரட்டையில் கலந்து கொள்ள நினைத்து இருந்தேன்.இதோ இப்ப உங்கள் குரல் கேட்டு வந்துவிட்டேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

வனி பட்டிமன்றம் ஆரம்பிச்சாச்சா?! இன்னும் கொஞ்ச நேரத்தில் எந்த பக்கம் னு முடிவு செய்துட்டு வந்துடறேன். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். இன்னிக்கு கிராமங்கள் கூட நகரங்கள் மாதிரி ஆயிடுச்சே. அப்படிப்பட்ட கிராமங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது?

இன்னொரு சந்தேகம். நீங்க நடுவர் ஆயிட்டா நம்ம ராசி வொர்க் அவுட் ஆகுமா ஆகாதா? :-)

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் கூவும் சத்தம் கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் அளித்த ஸாதிகா மற்றும் கவிசிவா..... மிக்க நன்றி... வருக வருக. :D

இருவரும் எந்த அணி என்று முடிவு செய்து வாதத்தோடு வாங்கோ....

ஸாதிகா.... உண்மை தான் பாருங்க நடுவரா இருங்கன்னும் கூவிகிட்டு கிடந்தேன், இப்போ பட்டிமன்றம் ஆரம்பிச்சுட்டு வாதாட வாங்கன்னும் கூவிகிட்டு கிடக்கேன்... :((

கவிசிவா.... எல்லா வசதியும் கிராமத்தில் கிடைத்தாலும் கிராமம் கிராமமே!!! சந்தேகம் இல்லாமல் வாதத்தை ஆரம்பிங்க. நம்ம ராசி...???!!! யோசிக்க வேண்டிய விஷயம்!!! கடைசியில் தீர்ப்பை வைத்து முடிவு செய்வோம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிறந்தது நகர வாழ்க்கை என்பது எனது வாதம்.பிறகு வருகின்றேன்.

arusuvai is a wonderful website

ஆஹா... என்ன யாரையும் காணோம்??!!! வழக்கமாக வரும் அதிரா, இலா, வின்னி, மாலி, தேன்மொழி, ஆயிஸ்ரீ, ஆசியா, அஸ்மா, மிசஸ் ஹுசைன், சந்தனா, அனாமிகா, சுபா, பிரபா, சீதாலக்ஷ்மி, தேவா மேடம், மனோகரி, திரு ஹைஷ், இஷானி, உமா, கவி, மற்றும் பலரையும் காணோமே..... நினைவுக்கு வந்த எல்லாரையும் அழைத்து இருக்கேன், பேர் விட்டு இருந்தா கோவிக்காம வந்துடுங்க ப்ளீஸ்.

ஸாதிகா கட்சியை முடிவு பண்ணிட்டீங்க, சீக்கிரம் வாதத்தையும் கொண்டு வாங்க.

கவிசிவா.... எங்கே காணாமா போயிட்டீங்க????

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் வந்தனம் வனிதா... நலம் தானா???

பட்டி மன்ற தலைப்பு நல்லா இருக்கு..... ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சிகளில் பார்த்து ரசித்த தலைப்பு என்றாலும் எப்போதும் பேச சுவாரஸ்யமான தலைப்பு....

எங்க ஊரு சிவகாசி நகராட்சி.... சோ, நகரம் தலைப்புல தானே வரும்....

சென்னை பசங்களை பார்த்து சென்னை மாநகரம் என்று சொல்வதை விட மாநரகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி கிண்டல் பண்ணியது உண்டு....

அப்புறம் காக்கி வாடான் பட்டி, அதி வீரான் பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, புலிமலை பட்டி (இது போக எக்கச்சக்க பட்டி இருக்கு... ஹி ஹி...) பசங்களையும், கேரளா காரங்க கேட்டால் கம்பை எடுத்து கொண்டு அடிக்க வருவாங்க என்று சொல்லி கிண்டல் பண்ணியதும் உண்டு....

எப்படியோ தலைப்பு ஆரம்பிச்சு விட்டீங்க... நான் இந்த பட்டி மண்டபத்தை வேடிக்கை பார்க்க வந்தவன்... எனக்கு முதல் வரிசையில் சீட் போட்டு கொடுத்து விடுங்க... கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சுகிட்டே ரசிச்சுக்கிட்டு இருக்கேன்....நல்ல ரசிகனா இருக்க போறேன்... ஹி ஹி...

1..2..3....ரெடி ஸ்டார்ட்...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

வந்துட்டேன் வனிதா... சாரி நடுவர் அவர்களே :-)

கிராம வாழ்க்கையே சிறந்தது என்ற அணியில் என் கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.

நான் பிறந்து 7 வயது வரை வளர்ந்தது குமரி மாவட்டத்தில் ஒரு கிராமம். அருமையான ஊர். முக்கியமாக இந்த கிராமத்தில் நகரத்தில் உள்ளது போல் நம் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் இல்லை. இது எங்கள் கிராமத்தில் சத்தியமான உண்மை.

நகரத்தில் ஏசியோ மின்விசிறியோ இல்லாமல் பொழுதை கழிக்க முடியுமா? கிராமத்தில் நல்ல காற்று வீசும். மின் விசிறிக்கு வேலையில்லை. கோடை காலத்தில் பகலில் வெப்பம் அதிகம் தெரிந்தாலும் இரவில் வெப்பம் தெரிவதில்லை. சென்னை போன்ற மாநகரங்களில் இது சாத்தியமா? சரி அதை விடுங்க. வெளியில் போனால் சுவாசிக்கவாவது சுத்தமான காற்று கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஆக்ஸிஜன் பார்லர் போனால்தான் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். கிராமங்களில் பைசா செலவில்லாமல் சுத்தமான வேப்பமரக்காற்று நம்மை தாலாட்டும்.

நகரத்தில் தண்ணீர் பஞ்சம். எங்கள் கிராமத்தில் குழாயை திறந்தால் தண்ணீர் வரவில்லையென்றாலும் ஆறு குளங்களில் தண்ணீர் கிடைக்கும். கடும் கோடையில் குளங்களும் ஆறுகளும் வறண்டால் கூட ஊற்று தோண்டி நீர் எடுக்கலாம். நகரத்தில் தண்ணீர் லாரி வருதான்னு ஆ ஆ...ன்னு வாயை பிளந்து கொண்டு நிற்கலாம்.

அட நகரத்தில் காய்கறிகளாவது ஃப்ரெஷ்ஷா கிடைக்குதா? அதுவும் கிடையாது. முந்தைய நாள் பறித்து லாரியில் ஏற்றி சந்தை என்னும் பெயரில் இருக்கும் குப்பைமேட்டில் கொட்டி பலர் கை பட்டு கால் பட்டுதான் நம் வீடு வந்து சேரும். கிராமத்தில் அப்படியா? பறித்தவுடன் பசுமை மாறாமல் நம் கைகளில் கிடைக்கும்.

ஒருவர் வீட்டில் ஏதும் விஷேஷமா அல்லது ஏதும் துக்கமா கிராமமே திரண்டு வந்து உதவி செய்யும். நகரத்தில் அடுத்த வீட்டுக்காரர் கூட திரும்பி பார்க்க மாட்டார். இன்றும் எங்கள் கிராமத்தில் போய் நான் இறங்கினால் அத்தனை பேரும் கவிதா நல்லா இருக்கியாம்மான்னு முகம் மலர குசலம் விசாரிக்காம இருக்க மாட்டாங்க. சிறு வயதில் எனக்கு என்ன பிடிக்கும்கறது கூட ஞாபகமா வச்சிருந்து எனக்காக செய்து கொடுப்பாங்க. அந்த அன்பான மனிதர்கள் நகரத்தில் குறைவுதான். இதே நாங்கள் மதுரையில் சில காலம் இருந்தோம். அப்பாவின் வேலை காரணமாக மீண்டும் எங்கள் சொந்த மாவட்டம் திரும்பினோம். அடுத்த வருடம் மதுரைக்கு சென்ற போது முன்பு நாங்கள் இருந்த இடத்துக்கு சென்ற போது யாரும் சரியாக கூட பேசவில்லை. இவர்களைப் பார்க்கவா போனோம் என்றாகிவிட்டது.

குழந்தைகள் சுதந்திரமா வீட்டுக்கு வெளியே ஓடியாடி விளையாட முடியுதா இந்த நகரங்களில்? கிராமங்களில் குழந்தைகள் ஓடியாடி விளையாட எவ்வளவோ இடங்கள் எவ்வளவோ விளையாட்டுக்கள்!
நகரத்து பிள்ளைகள் போல் வீட்டிலேயே முடங்காமல் ஓடியாடி விளையாடுவதால் உடல் வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

ஆயிரம் வசதிகள் நகரத்தில் கிடைக்கலாம். ஆனால் சில வசதி குறைவு இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை கிடைப்பது கிராமத்தில்தான். அதுதான் சிறந்த வாழ்க்கை என்று கூறி முதல் சுற்று வாதத்தை நிறைவு செய்கிறேன். நன்றி.

பின்குறிப்பு: இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அறுசுவைக்கு வரமுடியுமான்னு தெரியவில்லை. எல்லாரும் பதிவுகள் போடுங்க. கேள்விகளும் கேளுங்க. வந்த பின் பதில் போடுகிறேன் :-). அதுவரைக்கும் நான் பயந்து ஓடிபோயிட்டேன்னு எதிரணியினர் குற்றம் சாட்ட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :-)

இப்படிக்கு,
கிராமத்தில் வாழ ஏங்கும் ஒரு நகர ஜீவி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்பப்பா... வந்துட்டீங்களா கவிதா..... இப்ப தான் எனக்கு மூச்சே வருது. கூவி கூவி அழைத்தாலும் யாரும் ஒரு பதிவும் போடலயே'னு பார்த்துட்டு இருந்தேன். மிக்க நன்றி.

நீங்க சொல்றது 100 % உண்மை தான். இன்று நான் என் சொந்த கிராமத்துக்கு போனால் என்னை அடையாலம் தெரிந்து எப்படி இருக்கீங்கன்னு கேக்க அத்தனை மக்கள் உண்டு. அந்த அன்பு நகரத்தில் கிடைக்காதுங்கிறதும் உண்மை. நானும் இரண்டு வாழ்க்கை முறையையும் பார்த்த அனுபவத்தில் ஒத்துக்க தான் வேணும்.

எதிர் அணியில் இப்போதைக்கு ஸாதிகா தான் இருக்காங்க. என்ன பதில் சொல்ல போறாங்களோ தெரியல.

வாங்கப்பா எல்லாரும். வந்து பதிவு போட்டு பட்டிமன்றத்தை கலைகட்ட வைங்க. உங்களை எல்லாம் நம்பி ஆரம்பிச்சுட்டு என்னை இப்படி கூவ விடலாமா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்