பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா?

இம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.

நம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....

"நகரவாழ்க்கையா ? கிராமவாழ்க்கையா? சிறந்தது எது?".

நம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி??!!!

கிராமத்தை விட நகரம் சிறந்ததா? அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா? அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.

வணக்கம் நடுவரே,
முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நான் 4,5 முறை உங்களுடன் பேசியும் பதில் வரவில்லை,ஏனென்று தெரியவில்லை. உங்கள் மேல் சிறிது கோபம். இருந்தாலும் goodnews என்பதால் விட்டுவிடுகிறேன்.

பட்டிமன்றத்தில் நான் கிராமமே!!!! என்ற பக்கம் வாதாடஆசை ஏனென்றால் கிராமம் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். ஆனால் சிறந்தது எது என்றால் எல்லாவற்றையும் வைத்து பார்த்தால் நகரமே !!! என்று தான் சொல்லமுடியும்.
எனவே நான் நகரமே என்று முடிவோடு வாதாட மீண்டும் வருகிறேன்.
அன்புடன்,
சுபத்ரா.

with love

வாங்க சுபத்ரா, வாங்க.... என்னிடம் பேசிபதில் இல்லையா???!!! எப்போது, எங்கு, எந்த இழையில்? நான் பார்த்திருக்க மாட்டேன் ... பார்த்திருந்தால் பதில் போடாமல் இதுவரை விட்டதில்லை. இருந்தாலும் கோவமில்லை என்றது மகிழ்ச்சி. மிக்க நன்றி. தவறாக நினைக்க வேண்டாம் பதிலில்லை என்று.... மன்னியுங்கள்.

வாதத்தோடு வாருங்கள்.... படிக்க ஆவளோடு காத்திருக்கோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிராம வாழ்க்கையே மிகச்சிறந்தது என்னதான் வெளிஊரில் இருந்தாலும் நம் சொந்தஓரில்(கிராமத்தில்) ஓரு வீடு வைத்துக்கொண்டு லீவுக்கு போகாமல் யாராவது இருக்காங்களா? இன்னும் நகரத்தில் இருன்ந்தாலும் தாத்தாப்பாட்டி சொல்லும் கதைகள், கிராமத்தில் எல்லாருடன் கொண்டாடும்பண்டிகை,சுத்தமான காற்று, தண்ணீர், சூதுவாது தெரியாத பேச்சு, ஓரு வீட்டு நிகழ்ச்சியை ஊரை கொண்டாடும் ஆனால் நகரத்தில் பக்கத்து வீட்டில் கூட யார் இருக்காங்கன்னு தெரியாது
எல்லோரும் என்ன நெனைக்கிறாங்க நகரத்தில் இருக்கும் வரை இருந்துவிட்டு அப்புரம் கிராமத்தில் தான் போக வேண்டும் என்கிறார்கள். எல்லாரும் பழசை அசைப்போட்டால் அவர்கள் கிராமம்)விடுமுறை சென்றது நெனைவுக்கு வராமல் இருக்காதுஎல்லாரும் விடுமுறைக்கு என்ன நகரத்துக்கா போராங்க இருக்கும் கொஞ்ச நாளை நிம்மதியா களிப்போம் என்ரு கிராமத்துக்கு தான் வராங்க
ஹாய் வனிதா எப்படி இருக்கிங்க இது தான் நான் உங்களிடம் முதல் முறையாகப்பேசுகிரென். நீங்க தலைப்பு போட்டதும் உடனை வரன்னும்ன்னு நினைத்தேன் ஆனால் வரமுடியவில்லை.

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

நிச்சயம் உங்களை தவறாக நினைக்கமாட்டேன்,அதான் பேசிட்டீங்களே.)))))))

நடுவர்கள் அவர்களுக்கு வணக்கம்,
எதிரணியினரே கூறியபடி கிராமத்திற்கு விடுமுறைக்கு சென்று ஒரு வாரம் தங்குவதற்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியாக இருக்கும். சினிமாவில் காட்டுவது போல் பணக்கார பெண் ஏழை வீட்டில் வந்து ,இங்கு எப்படி பாசமாக இருக்கிறார்கள்,சுத்தமானக்காற்று, பார்பவை எல்லாம் அழகாக தெரியும் ஆனால் வாழ்நாள் முழுவதும் அங்கு அவர்களால் அவர்கள் வசதியே விட்டு இருக்க முடியுமா? கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.

கிராமத்தில் சில நன்மைகள் இருப்பது யாராலும் மறுக்க முடியாது.ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கை சிறப்பாக அமைய நகரமே சிறந்தது.
அதற்கு காரணம்,
* படிப்பு வசதி குறைவு.
*மருத்துவ வசதி குறைவு.
*இன்றைய நவீன காலத்தில் நம் தேவைகளை நாடுவது கூட நகரமாகவே உள்ளது.
*வேலை வாய்ப்பு குறைவு
இதுபோன்று ஒருமனிதனின் முன்னேற்ற வழிகள் அடைவது மிக கடினம் ,எல்லாவற்றிற்கு அவர்கள் நகரத்தையே நாடும் நிலை தான் உள்ளது.

நான் முன்பே கூறியது போல் திருவிழா, விடுமுறைக்கு மட்டுமே நம்மால் நாட்கள் செலவிடமுடியும்.
கிராமங்கள் எல்லாம் நகரமாக மாறவேண்டும் என்று தானே அரசாங்கமே திட்டமிடுகிறது. கிராமவாழ்க்கை சிறப்பாக இருந்தால் அதை ஏன் மாற்றநினைக்க போகிறோம்.
கூழ் மிகவும் ருசியான உணவு தான் அதற்க்காக நாம் தினமும் அதையே சாப்பிடமுடியுமா?
கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையவேண்டும்,அடிப்படை வசதி வாய்ப்பு கூட இல்லாத கிராமங்கள் எத்தனையோ?? அப்படி இருக்கும் போது மக்களின் வாழ்க்கை கிராமத்தை விட நகரமே சிறப்பாக அமைக்கும்.

மணலில் அமர்ந்து பாடங்கள் கற்பது போன்றது கிராமம், (அமைதியான சூழல்,சுத்தமான காற்று, .....)
கம்யூட்டரில் அமர்ந்து பாடங்கள் கற்பது போன்றது நகரம் (நன்மை,தீமை கலந்தது......) அதனால் நாம் கிராமத்திலே இருந்திருந்தால் எப்படி இவ்வளவு விரைவில் நாடு சிறப்படையும்

//கிராமத்தில் எல்லாருடன் கொண்டாடும்பண்டிகை,சுத்தமான காற்று, தண்ணீர், சூதுவாது தெரியாத பேச்சு, ஓரு வீட்டு நிகழ்ச்சியை ஊரை கொண்டாடும்// இது மட்டுமே வாழ்க்கையே சிறப்பாக மாற்றாது,அப்படியாயின் மக்கள் ஏன் நகரத்தை நோக்கி செல்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் கிராமத்தில் இருந்து படிப்பறிவின்றி, படித்தாலும் வேலைவாய்ப்பின்றி, வேலைவாய்ப்பு(நகரத்தில்) கிடைத்தாலும் சுற்றத்தாரின் தடைகள் இப்படி வாழ்க்கையில் முன்னேற்றத்தை தடுக்கும் கிராமத்தை விட நகரமே சிறந்தது என கூறி விடைபெறுகிறேன்.மீண்டும் நாளை...
அன்புடன்,
சுபத்ரா.

with love

எனக்கு அமைதி தவழும் கிராமம் மிகவும் பிடித்திருந்தாலும்,அதெல்லாம் retirement பின்பு ரசித்து வாழத்தான் சாத்தியம்.கிராமத்தவர்களே பட்டணத்தை வாய்பிளந்து பார்ப்பது அதன் வித்தியாசம் புரிந்ததினால் தானே.நான் என்னென்ன நினைத்து வந்தேனோ அவைகளை சுபத்ரா சொல்லிட்டாங்க.
கிராமத்தில் மூட நம்பிக்கை அதிகம்.இது எனக்கு கிராமத்தில் பிடிக்காத முதல் பாயிண்ட்.நகரத்திலும் மைனஸ் பாயிண்ட் இருந்தாலும் ப்ளஸ் தான் அதிகம்.நிறைய வாதாட ஆசை,நேரம் இல்லை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நடுவருக்கு வணக்கம்.
தற்போதைய சூழ்நிலையில் பட்டிமன்றத்தில் அதிகம் கலந்து கொள்ள முடியாது என்றாலும்…சுறுசுறுப்பான நடுவருக்காக ஒரேஒரு பதிவாவது போடலாம் என்று சில கருத்துக்களை மனதில் வைத்து வந்து பார்த்தால் (நான் தற்போது இருக்கும் அதே ஊரில் வசிக்கும்) சுபத்ரா அவர்கள் பதிவில் நான்…நினைத்தது எல்லாம் அப்படியே இருக்கு…எப்படி !!!???
டெலிபதியோ…!!!ஒரே ஊரில் இருப்பதால்…!!!
நகரமே சிறந்தது என்பதுதான் என் கருத்தும்….

சுபத்ரா சொன்னதுபோல் சிறந்த வாழ்க்கைத்தரத்துக்கு தேவையான
அத்தனை வசதிகளும் கொட்டிகிடப்பது நகரத்தில்தான்…..
//முக்கியமாக இந்த கிராமத்தில் நகரத்தில் உள்ளது போல் நம் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் இல்லை. இது எங்கள் கிராமத்தில் சத்தியமான உண்மை.//
உங்கள் கிராமம் என்றால் நாகர்கோவில் பக்கமா? அங்கே எங்கு இருக்கப்பா அப்படி ஒரு கொசு இல்லா கிராமம்….நீங்கள் சொன்னதுபோல் உங்கள் கிராமத்தில் மட்டும்தான் தான் அந்த அதிசயமிருக்குமென நினைக்கிறேன்..:-
இயற்கையோடு ஒத்த வாழ்க்கை ,சுத்தமான காற்று எல்லாம் இப்போது எங்கோ ஒரு கிராமத்தில்தான் இருக்கும்)
மற்றபடி நகர மோகத்தை அரைகுறையாய் காப்பியடித்துகோண்டு,முற்றிலும் இயற்கையோடு
ஒத்த வாழ்க்கை வாழ முடியாமல்,நகரவாழ்க்கைக்கு முழுதாய் மாறவும் முடியாமல் இருக்கும் இரண்டும் கெட்டான் வாழ்க்கையாய் தான் பெரும்பாலான கிராம வாழ்க்கை இருக்கிறது…
//ஆறு குளங்களில் தண்ணீர் கிடைக்கும். கடும் கோடையில் குளங்களும் ஆறுகளும் வறண்டால் கூட ஊற்று தோண்டி நீர் எடுக்கலாம்.//
ஆம்.கிராமங்களில் இயற்கைகடனை சுதந்திரமாய் கழிப்பதும் இதே நீரில்தான்…அவ்வளவு சுத்தமாய் இருக்கும் இந்த குளத்து தண்ணீர்……ஆற்று நீருக்கே அடிதடி …இதில் ஊற்று நீரா?...:)))நம்பறமாதிரி சொல்லுங்கப்பா…அதெல்லாம் ஒரு காலம் கண்ணே இப்போதில்லை…:-
//ஆயிரம் வசதிகள் நகரத்தில் கிடைக்கலாம்// கரெக்டா சொன்னீங்க..:)
இன்றைய காலகட்டத்தில் இந்த ஆயிரம் வசதிகளும் நமக்கு தேவையிருக்கு…..!!!!
அதனால்தான் வசதியில்லா கிராமத்தை அவ்வப்போது விசிட்டிங்,விடுமுறைக்கு மட்டும் வைத்துகொள்கிறோம்.:D

நலம் விசாரிப்பு அதிகம்தான்…ஊர்வம்பும்,வெட்டிகதையும்(திண்ணைகதை) கூட கிராமத்தில் அதிகம்.:-
ஆமையாய் மலரும் நினைவுகளை ஈசிச்சேரில் உட்கார்ந்து ,அசைபோட கிராம வாழ்க்கை உதவும்..
ஆனால் சிற்றெரும்பாய்,பரபரப்போடு கடமைகளை செய்துகொண்டு அடுத்தடுத்த கடமைகளுக்காய் ஓடிகொண்டிருப்பதுதான்….நகரவாழ்க்கை…
பெரும்பாலும்நேரத்தை ஒட்ட,பொழுதுபோக்க மட்டுமே கிராமம் உதவும்..
அடித்துகொள்வதும்,வாய்க்கால் வரப்புசண்டை,என நகரமக்கள் சொல்ல கூசும் ,காதில் கேட்கமுடியா
வார்த்தைகளைகூட அனாசியமாய் சொல்லி அடித்து உருளுவதும் கிராமத்தில்தான்.
நகரத்தில் ,”தான் உண்டு தன் வேலை உண்டு” என தன் வேலை கவனிக்கவே நேரம் போதுவதில்லை..
ஆசியா சொன்னதுபோல்மூடப்பழக்கம் கிராமத்தில்தான் அதிகம்.
பூனை குறுக்கே சென்றால் காரியமாகாது விதவை வந்தால் காரியமாகாது….என தள்ளிப்போட்டு
நேரத்தையும் மற்றவர் மகிழ்ச்சியையும் நோகடிக்கும் கொடுமை …கிராமங்களில்தான்நடக்கிறது
ஆகவே நடுவரே சிறந்த வாழ்க்கைக்கு நகரமே...என சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

படிப்பு வசதி குறைவு என்ரு நீங்கள் சொல்வது சரியல்ல நல்ல தரமான பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளது. நகர்ப்புரமாணவர்களை விட கிராமப்புறத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம்
மருத்துவவசதியும் அதிகம் எல்லா ஆரம்பசுகாதர மையத்தில் வசதி உள்ளது அதுமட்டுமல்ல இப்பவெல்லாம் சீமந்தம் கூட பண்ணுகிறார்கள். நகரத்தில் யாரும் மூட நம்பிக்கை கொண்டுஇருக்கவில்லையா ஏமாளிகள் நகர்ப்புறத்தில் தான் அதிகம். கிராமப்புறத்தில் எந்த சிட்பண்ட், நிதிநிறுவனம் ஓடுகிறது அதற்க்கு கிராமத்தில் உள்ள் பழக்கவழக்கம் தான் காரணம் கிராமத்தில் இயற்கையாக கிடைக்கும் கூழை தினமும் குடிக்கமுடியுமா என்கிறீர்கள் அதே கூழை உங்க நகரத்தில் காசுக்கு வாங்கி அல்லவா குடிக்கிறார்கள் கிராமத்தில் உள்ள நல்ல சாப்பாடு, தண்ணீர், காற்று, பழக்கவழகத்தினால் தான் அவர்கள் இன்னும் நன்றாக உள்ளனர் உங்க நகரத்தில் உள்ளவர்கள் ஆஸ்பிட்டல் போகிரீர்கள்
கிராமங்கள் தான் நாட்டின் முதுகெழும்புகள்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

வனி, நீங்க கூவியதை கேட்டு உடனே வர நினைத்தேன், இப்போதுதான் முடிந்தது.

நடுவரே கிராமங்கள் தான் இந்தியாவின் அடிப்படை ஆதாரம்னு பெரியவங்களே சொல்லி இருக்காங்க. நரக ஐ..மீன் நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு எல்லோரும் அங்கே போய் விட்டால், பிறகு யார் வயலில் நெல்லை விளைவிப்பது, காய்கறிகளை பயிரிடுவது? நமது உணவின் பிறப்பிடமே கிராமங்கள்தான் என்பதை நாம் மறக்கலாமா?

கிராமத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் வேலைகளும், கடமைகளும் இல்லாமலா இருக்கின்றன? உதாரணத்திற்கு வயலில் அறுவடை நடக்கும் சமயம், அந்த வீட்டு அம்மாவைக் கேட்டு பாருங்க. அவங்க டிவி முன்போ, கம்ப்யூட்டர் முன்போ இருந்தாங்களான்னு. பாவம் அவங்களுக்கு சாப்பிட கூட நேரம் இருக்காது.

டவுன் பிள்ளைகள் விளையாடுவது கம்ப்யூட்டர் இல்லைனா கிரிக்கெட். இப்போ கிராமத்திலேயும் இந்த கிரிக்கெட் மோகம் இருக்கு அது வேற விஷயம். ஆனாலும் அவங்களுக்கு விளையாட நிறைய இருக்கும்.

இந்த நகரத்தார் மட்டும் என்னவாம். அவங்களுக்கும் கிராமத்தில் இருப்பதுபோல் மாடு, கன்னுன்னு இருக்கனும்ன்னு ஆசை. அதனால்தான் நடு ரோட்டிலே மாட்டுப் பண்ணை எல்லாம் வச்சு நடத்துறாங்க:)

நடுவரே எதிரணியினரே சொல்றாங்க. ரிலாக்ஸ்டா இருக்க கிராமம் வேணுமாம். பாயிண்ட், பாயிண்ட்டை விடாதீங்கோ. பிடிச்சுக்கோங்கோ.

ஆகவே சிறந்த வாழ்க்கைக்கு கிராமமே என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி. முடிந்தால் இன்னொருமுறை வர முயற்சிக்கிறேன்.

ஒரு நிமிடம் இளவரசியுடன் பேசி கொள்கிறேன் நடுவரே,
இளவரசி நலமா? நீங்க கத்தாரிலா இருக்கீங்க? நீங்க சொல்வது போல் இது டெலிபதியாக தான் இருக்கும். உங்களை பற்றி அறிய ஆவல்.பதில் கூறவும்.மீண்டும் அரட்டையில் சந்திப்போம் அச்சச்சோ நடுவர் முறைக்கிறார்களே:-)))))))
நடுவர் அவர்களுக்கு வணக்கம்,
கிராமங்கள் முதுகெலும்புகள் தான்,ஏனெனில் விவசாயம் என்பது முக்கியம் என்பதால், அதற்காக நாம் எல்லோரும் விவசாயம் மாத்திரம் செய்துகொண்டிருந்திருந்தோமானால் நம் நாடு இவ்வளவு சிறப்படைந்திருக்காது.இன்று விஞ்ஞானம் முதற்கொண்டு அனைத்து துறைகளிலும் ஒரு இடத்தை பிடித்திருக்கிறோமென்றால் அதற்கு நகரத்திலுள்ள வசதிவாய்ப்பே காரணம்.
கிராமங்கள் பள்ளிகள்,மருத்துவம் வளர்ந்திருந்தாலும் நகரத்திலுள்ள அளவு கண்டிப்பாக இல்லை. செய்யும் தொழிலே தெய்வம்,அவரவருக்கு தெரிந்த தொழிலை செய்கிறார்கள். கிராமத்து வாழ்வை மேம்படுத்தி மக்களுக்கு வசதிவாய்ப்பு அளித்து தான் அதை நகரத்தை போல் சிறப்படைய செய்யமுடியும்.
//டவுன் பிள்ளைகள் விளையாடுவது கம்ப்யூட்டர் இல்லைனா கிரிக்கெட்// யாருங்க சொன்னா இது இரண்டை தவிர எவ்வளவோ விளையாட்டு விளையாடுகிறார்கள். கிராமத்திலும் திறமைகள் இருந்தாலும் அதை வெளிகொண்டுவருவதற்கு வசதி கண்டிப்பாக தேவை, ரிலாஸாக இருக்க கிராமம் வேண்டும் என்று சொல்லவில்லை,அதற்கு நகரத்தில் எவ்வளவோ வழிகள் உண்டு. அதாவது விருந்தினராக சென்று சும்மா நாட்களை கடத்தி கொண்டிருக்கும் போது நன்றாக தெரியும், வாழ்க்கை முழுவதையும் அங்கு சிறப்பாக அமைக்க முடியாது. கிராமத்திலுள்ள மக்கள் எல்லாம் சிறப்பாக இல்லையா என்றால், அவர்களுக்கு ஏற்றவாறு பொழுதைபோக்கி ஒருவட்டத்திற்குள் சுற்றி கொண்டிருப்பார்கள். அதே முறைகள், வழக்கம்,சடங்குகள்.
அதை யாரும் மாற்றவோ, மறுக்கவோ முடியாது. இப்படி சுதந்திரம், தனி உரிமைகள், முன்னேற்றங்களுக்கு முட்டுகட்டையாகவே கிராமங்கள் உள்ளன.

நகரங்கள் நரகமாக தோன்றிருக்கிருக்குமேயாயின் நம் நாடு இன்னும் பொருளாதாரத்தில், வேலை வாய்ப்பில், விளையாட்டில்,விஞ்ஞானத்தில், படிப்பில்,நம்பிக்கையில்,மற்றும் பல துறைகளில் வளர்ச்சியும், முன்னேற்றமும் கண்டிருந்திருக்காது.

எனவே ஒருமனிதனின் வாழ்க்கை சிறப்புறச்செய்வது நகரமே.
அன்புடன்,
சுபத்ரா.

with love

எதிரணியினர் திருப்பி திருப்பி சொல்கிறார்கள் கொசு,மூடநம்பிக்கை என்று அது கிராமத்தில் மட்டுமா இருக்கு ஏன் நகரத்தில் இல்லையா? சென்னை, கோவை போன்ற நகரத்தில் கொசு பற்றி கேளுங்கள். கிராமங்கள் இல்லாமல் இவர்கள் நகரங்கள் எப்படி வந்தது?
இப்பொழுது அறிவியலை பயன்படுத்தி விவசாயாம் செய்யவில்லையா? கிராமதில் உள்ள மாதிரி உடல் ஆற்றலை வெளிப்ப்டுத்தும் (கபடி) விளையாட்டுக்களையா விளையாடுகிறார்கள் நீங்கள் வீட்டுற்குள்ளே அல்லவா போட்டு பூட்டி விளையாட விடுகிறீர்கள்
அப்புறம் எங்க ஆரோக்கியம் இருக்கும் கிராமத்திலுள்ள குழந்தைகளைப் பாருங்கள் இயற்கையாகவே நீச்சல் எதையும் சமாளிக்கும் திறன் எல்லாம் உண்டு ஆனால் நீங்கள் எல்லாத்திறனையும் வளர்க்க காசு அல்லவா கொடுக்க வேண்டியுள்ளது.உறவுகளின் அருமையும் கிராமத்தில் உளவர்களுக்கு தான் தெரியும் ஆனால் உங்கள் குழந்தைகள் ஒரே வரியில் ஆன்டி என்கிறார்கள்
கிராமங்கள் இல்லாம எப்படி நகரங்கள் வந்தது என்று சொல்லுங்கள். விஞ்ஞானம், அறிவியியல் வளர்ச்சி எல்லாம் இப்ப ஒரு 20 வருட வளர்ச்சி அத்ற்கு முன்னால் நம்முடைய வெவசாயம் தான் நம்முடைய அடையாளம். அப்துல்கலாம்,அண்ணாதுரை(சந்திராயன்) இவர்கல் எல்லாம் நீங்கள் சொல்லும் வளர்ச்சிஅடையா பள்ளிகளில் படித்தவர்கள் தான் ஏன் சாதிக்கவில்லையா? இவர்கள் எல்லாம் இயர்க்கையோடு ஒன்றிப்படித்ததால் சாதிக்கமுடிந்தது

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்