உங்கள் உதவி அவசியம் தேவை

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? இந்த திரட்க்கு வந்து போகும் அனைவருக்கும் மிக்க நன்றி, எனக்கு உங்களின் உதவி அவசியமாக உடனே தேவைப்படுகிறது...மேலும் சந்தோஷ் பற்றி விசாரித்த அனைவருக்கும் மிக்க நன்றி, இப்போது நன்றாக இருக்கிறான், ஸ்கூல் போய் இருக்கிறான்..பட்டிமன்றம் திரட் திரும்ப எடுக்க வேண்டாம் என்றுதான் இங்கு நன்றி சொல்கிறேன்..இப்போ மேட்டருக்கு வருவோம்..

கடந்த 6மாதமாக எங்க சித்திக்கு(45) கையில் அலர்ஜி மாதிரி ஒரே புண்ணாக இருக்கு..கொஞ்ச நாள் இருக்கு, கொஞ்ச நாள்(15நாட்கள்) சரியாகுது ஆனால் திரும்ப வந்துவிடுகிறது..பல வருஷங்களாக அதே வீடு, அதே தண்ணீர்..எந்த மாற்றமும் இல்ல..சோப்புலிருந்து எல்லாமே மாற்றி பார்த்தாச்சு, ஸ்கின் டாக்டர்கிட்ட காட்டியாச்சு, சுகர் டெஸ்ட் பண்ணியாச்சு நார்மல், ஆனால் எதுமே பிரயோசனமில்ல..ஏன் வந்தது? எதற்கு வந்தது?னு ஒன்னுமே தெரியல...கை ரேகை எல்லாம் அப்படியே வெடிப்பு வெடிப்பா இருக்கு,பார்த்தாலே பாவமா இருக்கு, ஒரு வேலையும் செய்ய முடியலனு ஃபோன் பண்ணும்போது அழறாங்க, அவங்களுக்கு என்ன மாதிரி ஆறுதல் சொல்றதுனு கூட தெரியல,அதான் உங்ககிட்ட ஓடி வந்தேன்..தயவுசெய்து இதுபற்றி தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்க, எங்க சித்திக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..

இதற்கு ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கா? ஏனெனில் எங்க சித்தி இருப்பது எங்க கிராமம்...அவங்களுக்கு அந்த மாதிரி வைத்தியமும் பிடிக்கும், இப்போ இருக்கிற நிலமைல குணமானால் போதும்னு இருக்கு எங்க எல்லோருக்குமே! வாங்க அனைவரின் உதவியும் எனக்கு தேவைப்படுகிறது...

ஹாய் தாமரை
எப்பிடியிருக்கீங்க? சந்தோஷ்குட்டி நலமா? எனக்கும் கொஞ்சநாளா முதுகுவலி பிரச்னை. அதனால்தான் அறுசுவைக்கு இன்னும் முழுமையா வரமுடியலை.
உங்க சித்தி கைப்புண் பற்றி மிகவும் வருத்தமாய் இருக்கு. எனக்கு எந்த மருத்துவமும் தெரியலை. இருந்தாலும் வாஸ்லின் தடவிப்பார்க்கச்சொல்லுங்க.விளக்கெண்ணெய் கூட நல்ல மருந்துதான். ப்ராஞ்ச் ஆயில் (Frach Oil) கிடைச்சா வாங்கி தடவிக்கச்சொல்லுங்க.
வேறு ஏதாவது தெரிந்தால் சொல்கிறேன்.

ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க ரிப்ளே மற்றும் ரொம்ப நாள் அப்புறம் உங்களை பார்க்கும் சந்தோசம்..நன்றிங்க நீங்க சொன்னத நோட் பண்ணிக்கிட்டேன், அடுத்து பேசும்போது சொல்றேன்..

சந்தோஷ் நல்லா இருக்கான், உங்களுக்கும் ஏன் திடீர்னு முதுகுவலி பிரச்சனை? உடம்ப கவனிங்க.. அத்தை மாமா ஊருக்கு போய்ருப்பாங்கனு நினைக்கிறேன்..மீண்டும் நன்றிப்பா, ஏதாவது ஞாபகம் வந்தால் திரும்ப வாங்க கீதா..

Could be the 5th one in this link.

http://images.google.com/imgres?imgurl=http://www.grahamriley.co.uk/images/Occupational%2520Skin%2520Disease%25201.jpg&imgrefurl=http://www.grahamriley.co.uk/industrial.html&usg=__x-i2IqTBOVLioOWBqcRfU51eN0c=&h=270&w=360&sz=12&hl=en&start=5&tbnid=620FRak5y7eNpM:&tbnh=91&tbnw=121&prev=/images%3Fq%3Dskin%2Bdiseases%26gbv%3D2%26hl%3Den

Check if any of the reasons mentioned here apply.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

ரொம்ப தேங்ஸ் லிங்க் அனுப்பியதற்கு, நான் அவங்கள 4மாதம் முன்னால பார்த்தது, அப்போ இது(லிங்க் 5) மாதிரியும் இருந்தது ஆனால் விரல்லயும் இருந்தது, திரும்ப ஃபோன் பண்ணி கேட்டு பார்க்கிறேன்...நன்றிப்பா..

சாந்தோ கை விரலிலா அல்லது கை உள்ளங்கை முழுவதுமா.

ஏதாவது சோப்பு அலர்ஜியா இருக்கும்.

மருதாணி வைக்க சொல்லுங்கள்.

தேஙகாய் எண்ணை (அ) ஆலில் ஆயில் தினம் கையில் தட சொல்லுங்கள்.
(மருதாணி பவுடருடன் , மஞ்சள், கிராம்பு, சர்க்கரை கலந்து வைக்கனும், சிறிது எலுமிச்சை சாறு ஒத்து கொண்டால் சேஎர்க்க சொல்வும்) இது தொடர்ந்து முன்று நாள் வைத்து பார்க்க சொல்லுங்கள்.

இது தொடர்ந்து சாமான் கழுவுவதாலும் வரும், துணி துவைப்பதாலும் , சிலருக்கு வரும்.
.

Jaleelakamal

ஹாய் ,தாமரை வருத்த படாதே .சீக்கிரம் குணமாகி விடும் .அவர் (சித்தி )எந்த ஊரில்இருக்கிறார் என்று சொல்லவும் .(தமிழ் நாட்டில் )

"வாழ்க வளமுடன் "அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

மேலும் சில பதிவுகள்